1
00:00:13,520 --> 00:00:16,960
த நார்த் லண்டன் டார்பி
அச்சுறுத்தலா உருவாகுது.

2
00:00:18,160 --> 00:00:20,920
இன்னும் எட்டு நாட்களில்,
டாட்டனமுடன் ஆட்டம்,

3
00:00:21,000 --> 00:00:24,120
உலக கால்பந்து ஆட்டங்களில்,
அது தீவிரமான ஒன்று.

4
00:00:24,200 --> 00:00:26,960
வீரர்களுக்கு இது ஒரு முன்பின்
காணாத பரிட்சை.

5
00:00:28,920 --> 00:00:32,759
ஆனால் அதன் மேல் கவனம் செலுத்தும் முன்,
பர்ன்லியுடன் மோத வேண்டும்.

6
00:00:36,080 --> 00:00:39,040
ப்ரீமியர் லீகில் வெற்றி பெற்றதற்கு பிறகு,

7
00:00:39,080 --> 00:00:43,200
ஆர்சனல் 460-மைல் பயணம் செய்து
லன்காஷைர் செல்கிறார்கள்.

8
00:00:43,280 --> 00:00:44,760
பர்ன்லி கால்பந்து க்ளப்

9
00:00:47,800 --> 00:00:50,320
ஆர்சனலை சுற்றி இப்போது பேச்சு,

10
00:00:50,400 --> 00:00:54,360
அவர்கள் இன்னும் ஒரே ஆட்டம் தான் தோற்க
வேண்டும், அழிவை நோக்கி செல்ல.

11
00:00:54,440 --> 00:00:55,440
ஆம்.

12
00:00:57,360 --> 00:01:00,680
பர்ன்லி வி ஆர்சனல்
டர்ஃப் மூர் அரங்கம் செப்டம்பர் 18, 2021

13
00:01:01,960 --> 00:01:04,680
ஆர்டெடா மீது பலத்த அழுத்தம்.

14
00:01:05,880 --> 00:01:08,880
லீகில் இதுவரை அவர்கள்
நான்கு ஆட்டங்கள் ஆடியுள்ளனர்.

15
00:01:08,960 --> 00:01:10,760
ஒரே கோல்தான் போட்டார்கள்.

16
00:01:13,760 --> 00:01:15,160
செயல்பாட்டில் இருக்கோம்.

17
00:01:20,000 --> 00:01:23,480
நல்ல திருப்பம் சாகா,
இங்கு பர்ன்லி டிஃபென்ஸில் ஓடியபடி,

18
00:01:23,560 --> 00:01:27,560
பெபெயிடம் ஒரு வாய்ப்பை காண,
முரட்டுத்தனமாக தடுக்கிவிடப் படுகிறார்.

19
00:01:41,280 --> 00:01:42,120
பர்ன்லி 0 -1 ஆர்சனல்
ஓடெகார்ட் 30'

20
00:01:42,200 --> 00:01:44,640
அருமையான ஃப்ரீகிக் ஓடெகார்ட், இடது காலால்,

21
00:01:44,720 --> 00:01:46,880
டர்ஃப் மூரில் முப்பது நிமிடங்கள் ஆயின.

22
00:01:46,960 --> 00:01:48,759
ஆர்சனல் ஒரு கோல் முன்னிலையில்.

23
00:01:51,920 --> 00:01:55,560
ஆர்சனல் வந்ததிலிருந்து
நார்வீஜியனின் முதல் கோல்.

24
00:01:58,080 --> 00:01:59,320
ஆட்டம் நிறைவு பெற்றது.

25
00:01:59,400 --> 00:02:03,880
ஓடெகார்டினால்
மூன்று புள்ளிகள்.

26
00:02:04,480 --> 00:02:07,840
ஆர்சனல் முன்னிலையில்.
இரண்டு வெற்றிகள், ஒன்று பின் ஒன்று.

27
00:02:07,920 --> 00:02:09,720
அவர்கள் முந்துகிறார்கள்.

28
00:02:17,160 --> 00:02:22,120
ஆனால் விசில் அடித்த சில நிமிடங்களூக்குள்
விசிறிகள் மனதில் ஒன்றுதான்.

29
00:02:22,320 --> 00:02:26,160
நார்த் லண்டன் டார்பிக்கு தோல்வியை
எதிர்பார்த்து செல்ல முடியாது, அல்லவா?

30
00:02:26,560 --> 00:02:28,720
டாட்டனம் அடுத்த வாரம்,
ஒரு பெரிய பரிட்சை.

31
00:02:29,400 --> 00:02:33,440
நான் எதிர்பார்க்கவும் இல்லை,
ஆனால் மனமுடைந்தும் இல்லை

32
00:02:33,560 --> 00:02:37,040
ஆனால், ஆர்சனலை ஆதரிப்பது
இப்போது அப்படித்தான் இருக்கிறது.

33
00:02:40,600 --> 00:02:45,440
ஆனால் வெற்றி, நம்பிக்கை கொடுக்கிறது,
நார்த் லண்டனை நோக்கி செல்கையில்.

34
00:03:00,960 --> 00:03:04,160
உனக்கு பிடித்ததை செய்கிறாய்.
அதற்கு ஆர்வம் என்று பெயர்.

35
00:03:05,040 --> 00:03:08,000
நாம் நம்பியே தீர வேண்டும்.
நமக்கு ஆற்றல் இருக்கணும்.

36
00:03:09,200 --> 00:03:11,320
இந்த மக்களுக்கு
உங்க அக்கறையை சொல்லுங்க.

37
00:03:11,840 --> 00:03:12,800
இதை செய்வோம்.

38
00:03:13,520 --> 00:03:15,880
ஆல் ஆர் நத்திங்: ஆர்சனல்

39
00:03:15,960 --> 00:03:18,640
விவரிப்பது
டானியல் கலூயா

40
00:03:22,280 --> 00:03:28,280
48 மணிகள்
நார்த் லண்டன் டார்பிக்கு முன்

41
00:03:32,040 --> 00:03:34,120
பியெர்-எமெரிக் ஆபமெயாங்
ஃபார்வார்ட்

42
00:03:34,200 --> 00:03:36,079
எத்தனை பேருக்கு அந்த கதை தெரியும்?

43
00:03:36,160 --> 00:03:37,880
யாருக்கும் அந்த கதை தெரியாது.

44
00:03:37,960 --> 00:03:43,680
டாட்டனம் எதிரில் விளையாடும் போது
நான் ஏன் நட்சத்திரம் செய்கிறேன்

45
00:03:44,720 --> 00:03:47,200
என்று முதல் முறை சொல்ல போறேன்.

46
00:03:49,520 --> 00:03:51,920
2016 ல்,

47
00:03:52,720 --> 00:03:56,840
நான் என் தாத்தாவை இழந்தேன்,
அன்று டாட்டனமுடன் விளையாடினோம்.

48
00:03:57,960 --> 00:04:02,480
அதனால் தான் எப்போதும்
அவர்களுக்கு எதிரா நட்சத்திரம் இடுகிறேன்,

49
00:04:03,560 --> 00:04:06,280
அன்று அவருக்காக
இரு மடங்கு ஸ்கோர் செய்தேன்,

50
00:04:06,360 --> 00:04:11,080
எனக்கு மகிழ்ச்சி, அதனால் அன்று முதல்,

51
00:04:11,160 --> 00:04:15,120
நான் அவருக்கு ஏதோ செய்வேன்,
அவர் என் நட்சத்திரம்.

52
00:04:17,360 --> 00:04:18,680
நட்சத்திரம் போட்டுக்கங்கறீங்களா?

53
00:04:18,760 --> 00:04:20,120
-நன்றாக இருக்கிறதா?
-ஆம்.

54
00:04:20,200 --> 00:04:21,200
-உனக்கு பிடித்ததா?
-ஆம்.

55
00:04:21,240 --> 00:04:23,120
உனக்கு பிடித்ததா?

56
00:04:27,880 --> 00:04:30,440
ஞாயிறு அன்று கோல் போட்டால்
எப்படி இருக்கும்?

57
00:04:34,800 --> 00:04:39,520
மிக நல்லதாக இருக்கும்.
நடக்கும் என்று நம்பிக்கை.

58
00:04:40,320 --> 00:04:44,880
கோல் போட்டால் எப்படி இருக்கும்
என்று தெரியும்.

59
00:04:45,520 --> 00:04:48,440
இங்கு சில டார்பிகளில்
ஸ்கோர் செய்திருக்கேன்,

60
00:04:48,520 --> 00:04:52,720
எனவே அது என்ன உணர்ச்சி என்று தெரியும்,
அதற்கு காத்திருக்கிறேன்.

61
00:04:54,760 --> 00:05:00,720
ஆர்சனல் கால்பந்து க்ளப்

62
00:05:09,600 --> 00:05:10,920
காலை வணக்கம்.

63
00:05:11,000 --> 00:05:15,000
நாம் ஒரு மாதிரி பயிற்சி செய்ய போகிறோம்,
நான் ஏன் என்று விளக்குவேன்.

64
00:05:15,080 --> 00:05:17,640
முதலில் ஒரு படம் பார்ப்பீர்கள், சரியா?

65
00:05:17,720 --> 00:05:21,920
உங்களுக்கு என்ன வேணும்னா--
நான் 45 நொடிகள் தருவேன்,

66
00:05:22,240 --> 00:05:26,160
நீங்கள், அங்கு இருப்பதை நினைவில்
வைக்க வேண்டும்.

67
00:05:26,240 --> 00:05:28,120
தோழர்களே, இது போட்டி அல்ல.

68
00:05:28,200 --> 00:05:30,920
இது எளியது, தப்பு செய்தால், கவலை வேண்டாம்.

69
00:05:31,000 --> 00:05:32,480
பெபெவிற்கு கவலை.

70
00:05:34,920 --> 00:05:38,400
நிகோ, உனக்கு கவலையா? இது பரிட்சை அல்ல.

71
00:05:41,280 --> 00:05:44,720
இது இடம் மற்றும் எண். நினைவு கொள்ளுங்கள்.

72
00:05:48,880 --> 00:05:54,159
சரி, எத்தனை நீங்கள் வலதிருந்து
சரியாக சொன்னீர்கள்,

73
00:05:54,240 --> 00:05:58,120
இந்த பகுதியில் எத்தனை சரி? கீரன்.

74
00:05:58,200 --> 00:06:00,440
நான் வலது பக்கத்தை நினைவு வைத்தேன்.

75
00:06:00,520 --> 00:06:02,760
-ஆனால் எல்லாம் சரியாக சொன்னாயா?
-இல்லை.

76
00:06:03,160 --> 00:06:04,160
பென்?

77
00:06:04,240 --> 00:06:06,480
ஆர்டெடாவிற்கு அணி சரியாக ஆட வேண்டும்.

78
00:06:07,320 --> 00:06:09,000
இந்த பக்கம் வரவேயில்லையா?

79
00:06:09,080 --> 00:06:13,120
அதற்கு அர்த்தம், யார் யார்
மைதானத்தில் எங்கிருக்கிறார்கள் என்றறிவது.

80
00:06:13,200 --> 00:06:16,200
-இடது பக்கம் எல்லாம் சரியா? இங்கு?
-நேரம் இருக்கவில்லை.

81
00:06:18,760 --> 00:06:21,480
உங்களில் பெரும்பான்மையானவர், வலது

82
00:06:21,560 --> 00:06:25,360
பக்கம் சரியாக சொன்னோம் என்பீர்களா,

83
00:06:25,440 --> 00:06:29,680
30, 40, 50% இதை சொல்ல கஷ்டப்படுவீர்களா?

84
00:06:29,760 --> 00:06:32,320
பி, நாம் ஏன் நினைவு கூர்ந்தோம்
என்று நினைக்கிறாய்?

85
00:06:32,920 --> 00:06:35,280
இது நாம் தினமும் பயிற்சி செய்யும் விதம்.

86
00:06:35,360 --> 00:06:38,640
நீங்கள் பயிற்சி செய்யும் விதம் உங்கள்
மூளைக்கு என்ன செய்கிறது?

87
00:06:38,720 --> 00:06:42,440
அதற்கு காரணம் நாம் எப்பவும் வலதையே
கற்றுக் கொள்கிறோம்

88
00:06:43,560 --> 00:06:47,440
இதை பார்க்கும் போது நாம் அந்த
வழியாகவே யோசிக்கிறோம்.

89
00:06:47,800 --> 00:06:50,920
ஆட்டத்தில், ஒரு நொடிக்கும்
குறைவான நேரமே கிடைக்கிறது

90
00:06:51,000 --> 00:06:54,200
முடிவெடுக்க, அதனால் இன்றைய பாடம்
என்னவென்றால் மைதானத்தில்

91
00:06:54,280 --> 00:06:57,640
நடப்பதை புரிந்து கொள்ள வேண்டும்

92
00:06:57,720 --> 00:07:01,040
அப்படி செய்தால், உங்களுடைய முடிவெடுக்கும்
திறன் எளிதாகும்.

93
00:07:01,480 --> 00:07:03,960
எனவே, நாம் என்ன செய்தாலும், தாக்கவோ,

94
00:07:04,040 --> 00:07:08,840
பாதுகாக்கவோ, யோசிக்காமலே
பார்த்தவுடன் நடப்பதை புரிஞ்சுப்போம்,

95
00:07:08,920 --> 00:07:11,200
ஒரு வீரர் நகர்ந்தா,
அடுத்தவர் என்ன செய்வார்,

96
00:07:11,280 --> 00:07:14,080
யுனிட்டுகள் எப்படி வேலை செய்கின்றன,

97
00:07:14,160 --> 00:07:15,720
என்பதே நாம் செய்யும் காரணம்.

98
00:07:17,360 --> 00:07:19,680
ஆர்சனல் நார்த் லண்டன்
டார்பிக்கு போகையில்,

99
00:07:19,760 --> 00:07:23,360
அவர்கள் 13 ஆவது இடத்தில் உழல்கிறார்கள்,
டாட்டனமிற்கு கீழே.

100
00:07:33,720 --> 00:07:35,680
சரி, எல்லாரும் முன் வர வேண்டும்.

101
00:07:37,760 --> 00:07:40,320
ஆர்டெடா எதிர்காலத்திற்கு
அணியை உருவாக்குகிறார்,

102
00:07:40,400 --> 00:07:43,520
ஆனால் இப்போது வெல்ல வேண்டும்.

103
00:07:43,600 --> 00:07:45,000
சியர்ஸ், நண்பா.

104
00:07:46,960 --> 00:07:47,960
புன்னகை.

105
00:07:48,480 --> 00:07:50,880
பெரிய புன்னகை, சந்தோஷமா தெரியணும்.

106
00:07:52,800 --> 00:07:55,360
அவர் இள வீரர்கள் மேல் நம்பிக்கை வைக்கிறார்

107
00:07:55,440 --> 00:07:58,480
ஏனெனில் சிலர் எவ்வளவு திறமைகள்
என அவருக்கு தெரியும்.

108
00:08:00,400 --> 00:08:02,200
எமீல் ஸ்மித் ரோவை எடுத்துக்கோங்க.

109
00:08:07,400 --> 00:08:09,120
இது அவருக்கு 15 வயதின் போது.

110
00:08:16,080 --> 00:08:19,920
பந்தை கட்டுப்படுத்துவதில் சிறந்தவர்.

111
00:08:26,800 --> 00:08:28,600
எமீல், அது எவ்வளவோ தேவலாம்.

112
00:08:29,320 --> 00:08:32,280
லைனுக்கு குறைந்தது ஒரு கஜம் தர வேண்டும்,

113
00:08:32,360 --> 00:08:36,000
அடிக்க வேண்டும் என்றால்...
நீ மிக அருகில் இருக்கிறாய்.

114
00:08:36,760 --> 00:08:41,039
எமீல் ஸ்மித் ரோவிற்கு நார்த் லன்டன்
டார்பியில் இன்னொரு மட்டம் உள்ளது.

115
00:08:43,880 --> 00:08:46,080
சிறுவனாகவே, நான் ஆர்சனலை ஆதரித்தேன்.

116
00:08:46,440 --> 00:08:47,280
எமீல் ஸ்மித் ரோ
மிட்ஃபீல்டர்

117
00:08:47,360 --> 00:08:51,040
என் தந்தை ஒரு ஸ்பர்ஸ் விசிறி,
அதனால் வீட்டில் நிலை விஷம் கலந்தது.

118
00:08:56,440 --> 00:09:00,320
அவர் பெருமைப்படுகிறார்,
ஆனால் நான் ஸ்பர்ஸுடன் ஆடும் போது,

119
00:09:00,400 --> 00:09:03,880
வீட்டில் விவாதங்கள் நடக்கும்.

120
00:09:05,480 --> 00:09:07,960
எமீல் மீது உங்க முதல் அபிப்பிராயம் என்ன?

121
00:09:08,480 --> 00:09:11,760
எமீலுக்கு வெட்கம் அதிகம்,
கண் தொடர்பு வைக்க மாட்டார்.

122
00:09:12,720 --> 00:09:13,880
அவர் உணர்ந்தார்...

123
00:09:16,080 --> 00:09:19,360
சௌகரியம் இல்லாமலும் பாதுகாப்பு
இல்லாமலும் இருந்தார்.

124
00:09:20,120 --> 00:09:24,480
ஆனால் அவருடைய மனது பெரிது என்று
நன்றாக தெரியும்.

125
00:09:25,400 --> 00:09:27,280
எமீலுடைய திறமை தெரிந்ததே.

126
00:09:30,960 --> 00:09:34,160
ஆனால் க்ளப் அவருடைய பண்பு உயர
அவரை வெளி க்ளப்பிற்கு அனுப்பியது.

127
00:09:35,840 --> 00:09:37,760
நாங்கள் அவரை கடனாக அனுப்பினோம்,

128
00:09:37,880 --> 00:09:40,440
"நான் உன் ஆட்டங்களை பார்க்க போவதில்லை,

129
00:09:40,520 --> 00:09:44,320
அங்கிருக்கும் போது உன்னை பற்றி
என்ன சொல்கிறார்கள் என்று கேட்க வேண்டும்.

130
00:09:44,760 --> 00:09:48,440
உன்னை எப்படி விவரிக்கிறார்கள், வீரனாக
அல்ல, ஒரு தனி நபராக.

131
00:09:48,520 --> 00:09:51,520
வீரனாக உன் திறனில் எனக்கு
சந்தேகம் கிடையாது,

132
00:09:51,640 --> 00:09:55,720
ஆனால் உன்னால் அந்த ட்ரெஸ்ஸிங் அறையில்,
வெளியில் அழுத்தததை தாங்க முடியுமா?

133
00:09:55,760 --> 00:09:59,080
எனவே நீ அங்கு சென்று உன்னை
மேம்படுத்தி கொள்."

134
00:09:59,160 --> 00:10:00,840
அவர் அதை உண்மையில் செய்தார்.

135
00:10:07,520 --> 00:10:10,840
இப்போது, அவருக்கு 21,
அவர் ஆர்செனலின் நம்பர் பத்து.

136
00:10:13,280 --> 00:10:15,080
அதற்கு அத்தனை அர்த்தம்.

137
00:10:15,760 --> 00:10:19,480
வளரும் போது எனக்கு அந்த நம்பர் பத்தை
அணிய ஆசை.

138
00:10:21,760 --> 00:10:23,640
இடைநீக்கம் முடிந்தது, நண்பா.

139
00:10:24,000 --> 00:10:25,840
என் இடைநீக்கம் முடிந்தது, நண்பா.

140
00:10:26,600 --> 00:10:27,880
நேராக மீண்டும் உள்ளே?

141
00:10:31,200 --> 00:10:32,760
எதிர்காலம், நீ தான் எதிர்காலம்.

142
00:10:32,880 --> 00:10:33,760
இல்லை, இல்லை.

143
00:10:33,840 --> 00:10:36,520
முதல் நாளிலிருந்து நீதான்
எதிர்காலம்னு சொன்னேனே.

144
00:10:36,640 --> 00:10:38,760
எதிர்காலம் பற்றி அல்ல,
நிகழ் காலம் பற்றி.

145
00:10:39,200 --> 00:10:42,640
நம்பர் பத்தாக இருப்பதை பார்,
பின்னாள் காப்டன்.

146
00:10:47,080 --> 00:10:48,840
இடதிலிருந்து வலது வை.

147
00:10:49,520 --> 00:10:52,520
ஆர்டெடாவின் நம்பிக்கைக்குரிய
ஆர்சனலின் மற்ற அருந்திறனாளர்

148
00:10:52,600 --> 00:10:54,760
20 வயதான புகாயோ சாகா.

149
00:10:55,320 --> 00:10:58,000
அவர் பெற்றோர் நைஜீரியாவிலிருந்து
லண்டன் வந்தார்கள்.

150
00:11:02,680 --> 00:11:06,840
புகாயோ எட்டு வயதில் ஆர்சனல்
அகாடெமியில் சேர்க்கப் பட்டார்.

151
00:11:12,480 --> 00:11:16,520
அவருக்கு பிரமாதமான திறன் இருப்பது
சீக்கிரமே வெளிப்பட்டது.

152
00:11:19,920 --> 00:11:22,880
நூற்றில் ஒரு சிறுவனே அகாடெமியிலிருந்து

153
00:11:22,960 --> 00:11:26,520
நேரே முதல் அணிக்குள் வருவது.

154
00:11:29,440 --> 00:11:32,480
நான் முதல் முறை அணியின் ட்ரெஸ்ஸிங்
அறையினுள் வந்த போது

155
00:11:32,560 --> 00:11:34,880
நான் நினைத்தேன்,

156
00:11:34,960 --> 00:11:39,680
"இங்கு இருப்பது இப்படித்தான் இருக்கும்."

157
00:11:42,280 --> 00:11:46,120
புகாயோ இங்கிலாந்திற்கு விளையாடி
நாட்டின் ஆர்வத்தை கவர்ந்தார்.

158
00:11:47,000 --> 00:11:51,840
செய்திதாள்கள், அவர் ஏன் 19 ஆட்டங்களில் ஒரு
கோல் கூட போடவில்லை என்று கேட்கின்றன.

159
00:11:53,000 --> 00:11:54,280
மிகேல், பி பற்றி என்ன?

160
00:11:54,360 --> 00:11:55,200
பி?

161
00:11:55,280 --> 00:11:56,320
ஆம், அவன் நலமா?

162
00:11:56,400 --> 00:11:57,920
அவருடைய தன்னம்பிக்கை.

163
00:11:58,000 --> 00:12:01,080
உடல் நலம் பற்றி அவரை
சமாதானப்படுத்தினோம், அவர்

164
00:12:01,160 --> 00:12:02,560
சிறந்தவர் என்று.

165
00:12:05,560 --> 00:12:07,960
இங்கு வந்த பின் உன் நோக்கம் என்ன?

166
00:12:08,040 --> 00:12:09,520
ஒரே ஒரு வழி தான்.

167
00:12:10,520 --> 00:12:13,240
இங்கிலாந்து சிறந்த வீரரை கொண்டு வந்து

168
00:12:13,320 --> 00:12:17,560
பின் நாசப்படுத்துவதில்
திறமை வாய்ந்தவர்கள்.

169
00:12:23,400 --> 00:12:28,280
க்ளப்பில், முதல் வேலை அவரை காப்பாற்றுவது.

170
00:12:28,360 --> 00:12:31,760
அதே சமயம், அவர்களை படிப்பித்து,
பொறுப்பு ஏற்க வைத்து

171
00:12:31,840 --> 00:12:35,520
அவர்கள் ஒரு பண்புள்ள நபராக க்ளப்பின்

172
00:12:35,600 --> 00:12:39,240
சூழ்நிலையில் வாழ்க்கை தொழிலராக செய்வதே.

173
00:12:43,400 --> 00:12:46,480
-ஜிம் வேலை?
-ஜிம் வேலை, கீழ் உடல்.

174
00:12:50,240 --> 00:12:53,240
ஸ்மித் ரோவின் ஒவ்வொரு வினாடி
ஆட்டமும் பரிசீலனை

175
00:12:53,320 --> 00:12:54,880
செய்து முடிவுகள் தரப்படும்.

176
00:12:54,960 --> 00:12:56,200
#9 எமீல்
டெஃப் - எமீல் - இதை வேல்ல வேண்டும்

177
00:12:56,280 --> 00:12:57,600
என்ன நடக்கின்றது?

178
00:12:57,680 --> 00:12:59,480
-பந்தை எடுக்க பார்த்தேன்.
-சரி.

179
00:12:59,560 --> 00:13:01,160
காலை அங்கு வைத்தார்.

180
00:13:01,240 --> 00:13:02,800
-விழுந்தேன்.
-உரக்க பேசு.

181
00:13:03,560 --> 00:13:04,600
காதில் விழவில்லை.

182
00:13:04,680 --> 00:13:06,360
-பந்தை அடிக்க சென்றேன்.
-அப்படியா?

183
00:13:06,440 --> 00:13:09,080
-அவர் என்னை தள்ளிவிட்டார்.
-ஆம்.

184
00:13:09,160 --> 00:13:11,240
-ஆனால் இது சண்டைகள்.
-ஆம்.

185
00:13:11,320 --> 00:13:14,800
இது எனக்கு, இந்த சண்டைகளை வெல்ல
வேண்டும், சரியா?

186
00:13:14,880 --> 00:13:18,320
இது பயிற்சியின் பாகம், பாதுகாக்கும் போது--

187
00:13:18,400 --> 00:13:22,520
நிகழ்வுகள், சிறிய ஆட்டங்கள்,
ஒருவர் மேல் ஒருவர், எல்லா தருணங்களிலும்,

188
00:13:22,600 --> 00:13:26,920
சிறப்பாக பந்தை பெற வேண்டும் எமீல்.

189
00:13:27,000 --> 00:13:30,920
இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும்
நீ துரிதமானவனா இருப்பதால், சரியா?

190
00:13:31,000 --> 00:13:34,440
எல்லாம் நீ உன் உடலை பயன்படுத்துவதிலும்
இன்னும் தைரியமாக

191
00:13:34,520 --> 00:13:36,840
இருப்பதிலும், ஓடுவதிலும்,

192
00:13:36,920 --> 00:13:40,280
எதாவது நடக்க செய்வதிலும் உள்ளது, நீ
படைக்கும் திறனுள்ளவன்.

193
00:13:42,440 --> 00:13:46,080
உன்னை அந்த மாதிரி நிகழ்வுகளில்
காண வேண்டும், சரியா?

194
00:13:51,360 --> 00:13:54,480
ஆட்டம் தொடங்க
24 மணிக்கு முன்

195
00:13:54,560 --> 00:13:58,200
யுரோபியன் கப்
வின்னர்ஸ் கப்

196
00:13:58,280 --> 00:14:02,000
மக்கள் நீ கனவை நனவாக்கினதால்
உன் வாழ்க்கை

197
00:14:02,080 --> 00:14:06,840
குஷியாக போகிறது என்று நினைப்பார்கள்
ஆனால் நினைக்காத பல பிரச்சினைகள் வரும்.

198
00:14:06,920 --> 00:14:09,240
உனக்கு வேண்டிய ஒரே விஷயம், விளையாடி,

199
00:14:09,320 --> 00:14:13,120
அனுபவித்து உன்னையேஉணர்ந்து செயல் பட
வேண்டும். நீ நிறைய செய்ய வேண்டும்.

200
00:14:14,120 --> 00:14:16,160
தெரியவில்லை. நான்
தவறாக இருக்கலாம்.

201
00:14:17,440 --> 00:14:18,280
ஒப்புக்கிறாயா?

202
00:14:18,360 --> 00:14:19,480
ஒப்புக்கொள்கிறேன்.

203
00:14:19,560 --> 00:14:22,840
என் சிறந்த நாட்களில் நான் அமைதியாக
இருந்தேன், தெரியுமா.

204
00:14:22,920 --> 00:14:28,280
தன்னம்பிக்கையுடன், நிறைய யோசிக்காமல்,
என் ஆட்டத்தை விளையாடி அனுபவித்தேன்.

205
00:14:29,840 --> 00:14:31,760
எல்லார் பின்னும் கதை இருக்கிறது...

206
00:14:31,840 --> 00:14:33,560
கார்லோஸ் க்வெஸ்டா
இண்டிவிஜுவல் டெவலெப்மெண்ட் கோச்

207
00:14:33,640 --> 00:14:36,400
...பலமுறை, நாம் அல்லது பொதுவாக சமூகம்

208
00:14:36,480 --> 00:14:41,360
அந்த நபர் முழு திறமை காட்டினாலும்,
குற்றம் கண்டு பிடித்து மதிப்பிடும்.

209
00:14:42,800 --> 00:14:44,360
நீ எங்கே இருக்க விரும்புகிறாய்?

210
00:14:44,440 --> 00:14:47,480
இன்றைக்கு, டார்பிக்கு ஒரு நாள் முன்.

211
00:14:48,600 --> 00:14:51,120
வெற்றி பெற நீ என்ன நினைக்கிறாய்?

212
00:14:51,200 --> 00:14:52,440
ஆம், நம்மால் முடியும்.

213
00:14:52,520 --> 00:14:55,720
இப்போ போகும் விதத்தில் முடியும்,
ஆரம்பம் சரியில்லைனாலும்.

214
00:14:55,800 --> 00:14:57,320
எல்லாரும் பேசினார்கள்,

215
00:14:57,400 --> 00:15:00,440
ஆனால் பருவம் மூன்று ஆட்டங்களில்
முடிந்து விடாது.

216
00:15:00,520 --> 00:15:01,480
அது நீண்டது.

217
00:15:01,560 --> 00:15:04,240
அதைத்தான் யோசித்தேன்,
எனவே சரி என்று சொன்னேன்.

218
00:15:04,320 --> 00:15:07,080
நாம் வெற்றி பெற வேண்டிய
ஆட்டங்களை வெல்வோம்,

219
00:15:07,160 --> 00:15:11,200
அணியின் நடத்தை இப்போது நன்றாக இருக்கிறது

220
00:15:11,280 --> 00:15:15,320
தன்னம்பிக்கை, நாளைக்கு வெற்றி பெற்றால்
மேல் எழும்பலாம்.

221
00:15:15,400 --> 00:15:17,480
-நீ சரியாக சொன்னாய்.
-பார்ப்போம்.

222
00:15:17,560 --> 00:15:18,880
எமிரேட்ஸ் ஸ்டேடியம்

223
00:15:23,880 --> 00:15:25,480
ஸ்பர்ஸுடன் ஞாயிறு ஆட்டம்.

224
00:15:25,560 --> 00:15:30,120
எத்தனைக்கெத்தனை வெல்ல வேண்டுமோ,
அவர்களிடம் தோற்க கூடாது.

225
00:15:31,000 --> 00:15:31,920
ஆர்சனல் பார்பர்ஸ்
விலைப் பட்டியல்

226
00:15:32,000 --> 00:15:36,080
என் வாழ்க்கையில் இப்பதான் முதல் முறை
ஆர்சனலும் ஸ்பர்ஸும் சம நிலையில்.

227
00:15:36,160 --> 00:15:37,280
பெருமை பேசும் உரிமை.

228
00:15:37,360 --> 00:15:40,080
வெல்லும் போது, பிரமாதம், ஆனால்
தோற்கும் போது...

229
00:15:40,160 --> 00:15:42,240
தோற்கும் போது, படு மோசம்.

230
00:15:42,720 --> 00:15:45,560
முக்கியமான ஆட்டம் ஒன்று வரும் போது,

231
00:15:45,640 --> 00:15:48,880
அழுத்த நிலை வீரர்களை பாதிக்கும்
அது பயப்படுத்தும்.

232
00:15:49,120 --> 00:15:52,680
நார்த் லண்டன் டார்பி
பருவத்தில் மிக முக்கியமான ஆட்டம்.

233
00:15:55,280 --> 00:15:58,080
நார்த் லண்டன் டார்பியில்
கோல் போடுவதை கற்பனை செய்.

234
00:15:59,520 --> 00:16:01,200
அதுதான் சிறந்தது.

235
00:16:02,440 --> 00:16:05,360
முக்கிய வாரம், அல்லவா,
நார்த் லண்டன் டார்பியுடன்?

236
00:16:05,440 --> 00:16:07,960
நிச்சயமாக, ஒரு திட்டம் வகுக்க வேண்டும்

237
00:16:08,040 --> 00:16:10,280
நல்ல முடிவு வேண்டும்.

238
00:16:10,360 --> 00:16:14,000
சொந்த அரங்கில் நார்த் லண்டன் டார்பியில்
விளையாடுவது எப்படி இருக்கு?

239
00:16:19,440 --> 00:16:21,920
நார்த் லண்டன் டார்பி எப்பவும் தீவிரமானது.

240
00:16:24,880 --> 00:16:26,320
ஆக்ரோஷமானது.

241
00:16:30,680 --> 00:16:33,720
அப்பப்போ, ஒரு புத்திசாலித்தனமான தருணம்.

242
00:16:39,560 --> 00:16:40,880
டியரி ஆன்ரி...

243
00:16:42,440 --> 00:16:45,160
அவர் இன்னமும் போகிறார்! டியரி ஆன்ரி.!

244
00:16:46,080 --> 00:16:50,280
கடவுளே, இது பிரமாதம்!
அவர் உண்மையில் மிகச் சிறந்தவர்!

245
00:16:50,360 --> 00:16:54,200
நார்த் லண்டனில் டியரி ஆன்ரி
பிரமாதமான ஆட்டம்.

246
00:17:06,520 --> 00:17:09,160
எல்லா ஆர்சனல் அணிகளுக்கும் ஒரு

247
00:17:09,240 --> 00:17:12,000
பிரச்சினை முன் காலத்து சிறந்த
வீரர்களுடன் ஒப்பிடுவது.

248
00:17:13,520 --> 00:17:14,960
ஆன்ரி

249
00:17:15,040 --> 00:17:17,680
அது நியாயம் அல்ல. காலங்களை ஒப்பிடுவது...

250
00:17:17,760 --> 00:17:18,920
டியரி ஆன்ரி
ஆர்சனலின் ரெகார்ட் கோல் போட்டவர்

251
00:17:19,000 --> 00:17:22,400
...மேலும், வீரர்கள் ஒரே போல்
ஆடுவார்கள் என்று எதிர்பார்ப்பது தவறு,

252
00:17:22,480 --> 00:17:25,720
ஆர்சனல் படிப்படியாக வளர்ந்து வருகிறது,

253
00:17:25,800 --> 00:17:28,560
ஆனால் வளரும் வழியில் காரணத்தை
இழக்க கூடாது.

254
00:17:30,080 --> 00:17:32,880
ஆர்சனல் டிஎன்ஏ மீட்பது பற்றி
மக்கள் பேசுகின்றனர்.

255
00:17:32,960 --> 00:17:35,760
ஆர்சனலின் டிஎன்ஏ வெற்றி
அல்லது வெற்றிக்கு போட்டி.

256
00:17:36,640 --> 00:17:39,080
நடத்தை, மனநிலை பற்றி பேசுகிறேன்

257
00:17:39,160 --> 00:17:43,880
இனி நடப்பது, ஓடுவது, சுவாசிப்பது,
யோசிப்பது, தூங்குவது எல்லாம்

258
00:17:43,960 --> 00:17:46,280
முதல் நான்கை பற்றியே இருக்கணும்.

259
00:17:48,080 --> 00:17:51,560
ஆர்சனல் என்னை பிரதிபலிக்கிறது,

260
00:17:51,640 --> 00:17:54,560
ஒரு அணியாக வெற்றி பெற்றது மட்டும் அல்ல,

261
00:17:54,640 --> 00:17:56,760
சமூகத்தில் எப்படி தோன்றுகிறது என்று.

262
00:17:57,880 --> 00:18:01,040
எப்பவும் பொது மக்களின் க்ளப் இது.

263
00:18:01,080 --> 00:18:06,240
ஆர்சனல்தான் முதலில் கறுப்பு வீரர்களை
சேர்த்த க்ளப்களில் ஒன்று,

264
00:18:06,320 --> 00:18:10,920
எனவே இது ஜனங்களின் பிரதிநிதி,
எப்படி லண்டன் இருக்கிறது என்பதற்கும்.

265
00:18:12,160 --> 00:18:16,280
க்ளப்பில் இருப்பவருக்கு அது தெரியும்,
அவர்கள் யாருக்காக ஆடுகிறார்கள் என்றும்.

266
00:18:16,560 --> 00:18:21,400
எங்கு நான் என்னையே இந்த அணியுடன்
அடையாளம் கொள்வது என்றால்

267
00:18:21,480 --> 00:18:23,880
அது புகாயோ சாகா, ச்மித் ரோவுடன் என்பேன்.

268
00:18:23,960 --> 00:18:28,640
ஏனென்றால் அவர்கள் நெற்றியில் ஆர்சனலை
சேர்ந்தவர்கள் என்று எழுதியிருக்கிறது.

269
00:18:31,560 --> 00:18:32,800
நீ அதைப் பார்த்தாயா?

270
00:18:32,920 --> 00:18:34,800
அவங்க ஆட்டத்தில், நடையில்,

271
00:18:34,920 --> 00:18:36,720
ஓட்டத்தில், போராடுவதில் தெரியுது

272
00:18:36,800 --> 00:18:40,280
எதையாவது தவற விட்டால்.
கோல் போடும் போது, போடாத போது,

273
00:18:40,320 --> 00:18:42,240
அது எழுதப்பட்டது தெரியுது.

274
00:18:42,800 --> 00:18:45,080
இது ஆர்சனல் கால்பந்து க்ளப்.

275
00:18:47,560 --> 00:18:52,000
டாட்டனம் வி ஆர்சனல் ஹாட்ஸ்பர்
எமிரேட்ஸ் அரங்கம் செப்டம்பர் 26, 2021

276
00:18:52,680 --> 00:18:58,680
90 நிமிடம்
ஆரம்பிக்கும் முன்

277
00:19:16,280 --> 00:19:19,280
வீரர்கள் ட்ரெஸ்ஸிங் அறையில்
இசையை தேர்ந்தெடுப்பார்கள்.

278
00:19:43,920 --> 00:19:47,720
வழக்கமாக, மிகேல் ஆட்டத்திற்கு முன்
ஒரு மணி நேரம் பேசுவார்.

279
00:19:48,880 --> 00:19:51,240
மறுபடியும், ஆரம்பத்திற்கு முன்னாலும்.

280
00:20:08,560 --> 00:20:10,760
-எல்லாரும் வந்தாச்சா?
-ஆம்.

281
00:20:21,920 --> 00:20:24,440
நீங்கள் தயாராக இருக்கிறீர்கள்,
எனக்கு தெரியும்.

282
00:20:24,520 --> 00:20:27,760
பார்க்கிறேன், உணர்கிறேன்.
பயிற்சியில் கண்டேன்,

283
00:20:27,800 --> 00:20:30,080
நீ இருக்கும் விதத்தில்,
உங்கள் முகத்தில்.

284
00:20:30,800 --> 00:20:34,280
இன்றைய ஆட்டத்தை பற்றி ஒன்று
சொல்ல விரும்புகிறேன்.

285
00:20:34,320 --> 00:20:37,320
நீங்கள் உடல்ரீதியா திட்டப்படி, நுட்பப்படி

286
00:20:37,440 --> 00:20:41,560
தயாராக இருக்கிறீர்கள், உங்களுக்குள்
ஒற்றுமை சிறப்பாக இருக்கிறது.

287
00:20:41,680 --> 00:20:45,640
இன்றைய ஆட்டத்தை பற்றி
முக்கியமான ஒன்றை விளக்க போகிறேன்.

288
00:20:49,680 --> 00:20:52,320
நீங்கள் மனம் திறந்து தைரியமாக
விளையாட வேண்டும்.

289
00:20:57,960 --> 00:21:01,800
அதே சமயம், மூளையை பயன்படுத்தி
விளையாட வேண்டும்.

290
00:21:01,920 --> 00:21:03,800
இவை ஒன்றாக வேலை செய்ய வேண்டும்.

291
00:21:05,440 --> 00:21:07,040
இது உங்கள் ஆர்வம்,

292
00:21:07,960 --> 00:21:11,320
எத்தனை நீங்கள் மனமார்ந்து
விளையாடுகிறீர்கள்,

293
00:21:11,400 --> 00:21:15,440
மும்முரமாக முழு மனதுடனும்
விளையாடுவீர்கள் என்பதே.

294
00:21:15,520 --> 00:21:17,800
உங்களை தூண்டி விடுவார்கள்,

295
00:21:17,920 --> 00:21:22,400
ஹோய்பியர்க், ஹாரி கேன். டெலெ ஆலி, டியர்
எப்பவும் கட்டுபாட்டில் இருப்பார்கள்.

296
00:21:22,480 --> 00:21:26,520
நீங்கள் முடிவெடுக்கும் போது,
இந்த சாதனங்களோடு

297
00:21:26,560 --> 00:21:30,040
எப்பவும் 100,000 மைல் வேகத்தில்
ஓட முடியாது.

298
00:21:30,400 --> 00:21:32,040
நாம் இந்த இரண்டை செய்தால்,

299
00:21:32,080 --> 00:21:35,920
ஆட்டத்தில் சக்தி வாய்ந்த விஷயமாகும்.

300
00:21:38,480 --> 00:21:42,200
இந்த ஆட்கள், இந்த இரண்டு
விஷயங்களை பார்ப்பது...

301
00:21:42,280 --> 00:21:43,200
பேரார்வம் - தெளிவு

302
00:21:43,280 --> 00:21:46,560
...உங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள்,
இதையும் தருவார்கள்.

303
00:21:46,680 --> 00:21:47,560
சக்தி

304
00:21:47,640 --> 00:21:49,920
நான் அனுபவித்ததால் சொல்கிறேன்.

305
00:21:50,000 --> 00:21:53,000
இந்த மூன்று விஷயங்களை இணைத்தால்,

306
00:21:53,080 --> 00:21:56,280
மைதானத்தில் நீங்கள் வலிமை நிறைந்தவர்

307
00:21:56,360 --> 00:22:00,200
உங்களை நிறுத்த முடியாது, வெல்ல முடியாது,
யாரும் உங்களை தொட முடியாது.

308
00:22:00,280 --> 00:22:03,520
இன்றைய ஆட்டம் இதுதான்,
மற்றது உங்களுக்கு தெரியும். சரியா?

309
00:22:03,600 --> 00:22:04,560
போலாம், நண்பர்களே.

310
00:22:06,960 --> 00:22:09,560
டாட்டனம்
ஹாட்ஸ்பர்

311
00:22:15,120 --> 00:22:17,680
டாட்டனம் சில வாரங்களுக்கு முன்,
லீகின் உச்சியில்

312
00:22:17,760 --> 00:22:21,720
இருந்தனர், ஆனால் சில தோல்விகளுக்கு பின்
அதை சரி செய்ய வந்தார்கள்.

313
00:22:26,120 --> 00:22:30,920
எமிரேட்ஸ் ஸ்டேடியம்

314
00:22:48,840 --> 00:22:51,120
முழு அணி செய்திகளும் தருவேன் ஜிஜி.

315
00:22:51,200 --> 00:22:54,200
ஷாகா தற்காலிக நீக்கத்திற்கு
பின் திரும்ப, அதுவே மாற்றம்.

316
00:22:54,560 --> 00:22:58,720
அவர்கள் அணி ராம்ஸ்டேல் கோலில், டொமியாசு,
கேப்ரியல், வைட்,

317
00:22:58,800 --> 00:23:00,440
டியெர்னி டிஃபென்சில்.

318
00:23:00,520 --> 00:23:03,320
ஷாகாவும் பார்டியும் மிட்ஃபீல்டில்,

319
00:23:03,400 --> 00:23:07,480
ஸ்மித் ரோ, ஓடெகார்ட்
மற்றும் சாகா ஆபமெயாங் பின்னால்.

320
00:23:07,800 --> 00:23:10,840
டாட்டனம் ஹாட்ஸ்பர்
மூன்று மாற்றங்கள் செய்தனர்...

321
00:24:06,160 --> 00:24:11,200
30 நிமிடம்
ஆரம்பிக்கும் முன்

322
00:24:48,280 --> 00:24:50,520
வாருங்கள், தோழர்களே. ஆரம்பிப்போம்.

323
00:25:10,080 --> 00:25:12,560
நேசிக்கிறோம் ஆர்சனல், ஆம்

324
00:25:12,640 --> 00:25:15,000
நேசிக்கிறோம் ஆர்சனல், ஆம்

325
00:25:15,080 --> 00:25:17,040
நேசிக்கிறோம் ஆர்சனல், ஆம்

326
00:25:17,120 --> 00:25:19,360
ஓ, ஆர்சனல், உன்னை நேசிக்கிறோம்!

327
00:25:19,440 --> 00:25:21,800
நேசிக்கிறோம் ஆர்சனல், ஆம்

328
00:25:25,480 --> 00:25:30,360
10 நிமிடம்
ஆரம்பிக்கும் முன்

329
00:25:37,080 --> 00:25:38,320
எல்லாரும் வந்தாகியதா?

330
00:25:39,880 --> 00:25:41,280
ஸ்டுவர்ட், இங்கே வாங்க.

331
00:25:44,600 --> 00:25:49,440
இவர், கடந்த 30 வருடங்களாக,
உணர்ச்சிகளை பிடித்திருக்கிறார்.

332
00:25:49,520 --> 00:25:52,400
மக்கள், உணர்ச்சிகள், அணிகள்.

333
00:25:54,920 --> 00:25:58,000
உங்களை பற்றி என்ன
நினைக்கிறார் என்று கேட்க வேண்டும்

334
00:25:58,080 --> 00:26:01,280
வேண்டும் அவர் உங்களை தினமும்
பார்க்கிறார், நம் க்ளப்பையும்.

335
00:26:03,080 --> 00:26:04,360
இது கடினமானது.

336
00:26:06,040 --> 00:26:09,640
இது என் க்ளப். இந்த க்ளப்பை நேசிக்கிறேன்.

337
00:26:09,720 --> 00:26:11,520
உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்.

338
00:26:11,960 --> 00:26:15,280
30 வருடங்களில், நான் பிரமாதமான வீரர்களை
ஃபோடோ எடுத்திருக்கிறேன்,

339
00:26:15,880 --> 00:26:18,600
சில உலகத்தரம் வாய்ந்த வீரர்கள்,
சிறந்த அணிகள்.

340
00:26:19,160 --> 00:26:21,720
உங்களை பார்க்கிறேன், இது நல்ல அணி.

341
00:26:22,120 --> 00:26:25,160
இது சிறந்த அணி. வாழ்நாள் முழுவதும்
விசிறியாக இருக்கிறேன்.

342
00:26:25,720 --> 00:26:28,000
நாம் இதை செய்ய வேண்டும்,
வெற்றி பெற வேண்டும்.

343
00:26:28,080 --> 00:26:30,760
இது நான். ஒரு விசிறி.
வெளியில் இருப்பவர்கள்,

344
00:26:31,320 --> 00:26:33,880
வெற்றி பெற என்ன வேண்டுமானாலும்
செய்வார்கள் இன்று.

345
00:26:34,320 --> 00:26:37,440
அவர்களை பாருங்கள்.
வெளியே சென்று, முதல் டாக்கிள்,

346
00:26:37,520 --> 00:26:41,200
ஜனங்கள் ஆரவாரத்தை கேளுங்க,
உங்களை உடனடியாக அடிப்பார்கள்.

347
00:26:41,560 --> 00:26:45,200
எல்லா டாக்கிளையும் வெல்லுங்க.
கோல் போட்டதும் முகங்களை பாருங்க,

348
00:26:45,280 --> 00:26:48,000
உணர்ச்சிகளை கவனிங்க,
எத்தனை நேசிக்கிறார்கள் என்று.

349
00:26:48,080 --> 00:26:51,320
நீங்கள் அவர்களை நேசிக்கிறீர்கள் என்று
காட்டுங்கள், சரியா?

350
00:27:11,600 --> 00:27:12,840
வாருங்கள், ஆடுவோம்!

351
00:27:38,800 --> 00:27:40,880
பென் வைட் நல்ல சவால்.

352
00:27:41,560 --> 00:27:44,480
அது போன்ற ஆட்டம்தான் உந்துதல் அளிக்கும்.

353
00:27:45,000 --> 00:27:47,680
ஆர்சனல் இரண்டு அணிகளில்
சிறப்பாக தெரிகிறார்கள்.

354
00:27:47,760 --> 00:27:50,760
இப்போது ஓடெகார்ட் முன்னேற,
ஆபமெயாங் முன்னால்,

355
00:27:50,840 --> 00:27:53,480
சாகாவிடம் தள்ள,
பெனால்டி இடத்தின் வலது மூலை.

356
00:27:53,560 --> 00:27:56,440
சாகா திருப்பி தர,
ஸ்மித் ரோ வந்து சேர்ந்தார்!

357
00:27:56,520 --> 00:27:58,840
ஆர்சனல் 1-0 டாட்டனம்
ஸ்மித் ரோ 12'

358
00:27:58,920 --> 00:28:01,600
ஸ்மித் ரோ கோல் போட ஆர்சனல் முன்னணி!

359
00:28:02,160 --> 00:28:03,800
ஆர்சனல் நன்றாக ஆடினார்கள்!

360
00:28:05,800 --> 00:28:07,400
ஒன்று-பூஜ்யம் ஆர்சனல்.

361
00:28:07,480 --> 00:28:11,200
ஒன்று-பூஜ்யம் ஆர்சனல்
என்ற கூச்சல் எமிரேட்ஸ் உள்.

362
00:28:11,280 --> 00:28:16,680
ஒன்று-பூஜ்யம் ஆர்சனல்
ஒன்று-பூஜ்யம் ஆர்சனல்.

363
00:28:16,760 --> 00:28:20,840
ஸ்மித் ரோ மற்றும் சாகா இணைப்பு பிரமாதம்.

364
00:28:20,920 --> 00:28:24,960
ஸ்மித் ரோ, கோல் போட்டவர், முன்னால்
பெனால்டி இடத்திற்கு செல்கிறார்.

365
00:28:25,040 --> 00:28:26,600
ஸ்மித் ரோ ஆபமெயாங்கிடம்!

366
00:28:26,680 --> 00:28:27,520
ஆர்சனல் 2-0 டாட்டனம்
ஆபமெயாங் 27'

367
00:28:27,600 --> 00:28:29,520
ஆர்சனலுக்கு இரண்டாவது கோல்.

368
00:28:29,600 --> 00:28:31,080
ஆபமெயாங்!

369
00:28:42,000 --> 00:28:44,720
ஷாகாவிடமிருந்து ஓடெகார்டிடம் பந்து,

370
00:28:44,800 --> 00:28:47,120
ஸ்மித் ரோவிடம், சாகாவிடம்

371
00:28:47,200 --> 00:28:49,760
ரெகிலான் விட்ட சந்தில் புகுந்து போகலாம்.

372
00:28:49,840 --> 00:28:52,400
சாகா முன்னேறுகிறார், மூவர் இருவர் எதிரில்,

373
00:28:52,480 --> 00:28:55,280
சாகா பந்தை திருப்பி தர முயல,
தனியே முன்னே போகிறார்.

374
00:28:55,360 --> 00:28:58,160
பந்து சாகாவிடம் திரும்பி வர,
அவர் கோல் போடுகிறார்.

375
00:28:58,240 --> 00:28:59,320
ஆர்சனல் 3-0 டாட்டனம்
சாகா 34'

376
00:29:06,000 --> 00:29:08,440
ஆர்சனல் இந்த ஆட்டத்தை ஆக்கிரமிக்கின்றனர்.

377
00:29:08,520 --> 00:29:12,000
சாகா 20 ஆட்டங்களில் முதல் கோல் போட்டார்.

378
00:29:23,040 --> 00:29:27,720
பாதி நேரம்
ஆர்சனல் 3 - 0 டாட்டனம்

379
00:29:33,720 --> 00:29:35,400
நல்ல ஆட்டம், தோழர்களே. இதோ!

380
00:29:35,480 --> 00:29:37,680
அப்படியே ஆடுங்கள்.

381
00:29:38,480 --> 00:29:40,880
பசங்களா. மறுபடி தொடங்கலாம்.

382
00:29:45,320 --> 00:29:48,760
என் முதல் செய்தி,
முழு இரண்டாவது பகுதி ஆட வேண்டும்

383
00:29:48,840 --> 00:29:50,760
இப்போது இன்னும் நன்றாக ஆட வேண்டும்.

384
00:29:50,840 --> 00:29:52,960
நம்மை அடிக்க வருவார்கள். சாவடியுங்கள்.

385
00:29:53,040 --> 00:29:55,760
இது போல ஆட்டங்களை ஆக்கிரமிக்க வேண்டும்.

386
00:29:55,840 --> 00:29:58,560
முதலிலிருந்து இந்த செய்தியைத்தான்
தர முயல்கிறேன்.

387
00:29:58,640 --> 00:30:02,080
நம்மால் முடியும் போது, சரியான தருணத்தில்,

388
00:30:02,160 --> 00:30:04,800
தீவிரமும் ஆர்வமும் காட்டி ஆடும் நீங்கள்,

389
00:30:04,880 --> 00:30:08,960
இதுவரை செய்தது போல்
பந்தை நம்மிடம் வைத்து, முன்

390
00:30:09,040 --> 00:30:11,920
செல்ல வேண்டும் ஏனென்றால் அவர்கள்
பாதுகாப்பை விட்டு,

391
00:30:12,000 --> 00:30:13,880
வீரர்களை முன் அனுப்புவார்கள்.

392
00:30:13,960 --> 00:30:16,800
பி, நன்றாக செய்தாய்,
நிறைய முறை பந்தை ஆடினாய்.

393
00:30:16,880 --> 00:30:19,960
முக்கியமானது இதுதான்,
சந்தம் காக்க வேண்டும்.

394
00:30:25,160 --> 00:30:28,640
சாகா பந்தை கட்டுபடுத்த
ஸ்கிப்பிடமிருந்து தள்ளி போக முயல்கிறார்.

395
00:30:28,720 --> 00:30:31,560
ஸ்மித் ரோ, சாகாவும் கூட.

396
00:30:31,640 --> 00:30:34,120
ஸ்மித் ரோ கோலை பின் வைத்து,
ஓடெகார்டிடம் தள்ள,

397
00:30:34,200 --> 00:30:37,160
ஆர்சனல் அச்சுறுத்துகிறது,
பந்து ஆபெமெயாங்கிடம்.

398
00:30:41,280 --> 00:30:43,760
பந்து முன்னேற, ஹாரி கேன் அங்கே,

399
00:30:43,840 --> 00:30:48,080
ஹாரி கேன், கோல், கொஞ்சம் ஆஃப்சைட்,
ஆனால் கீழே இருந்தது.

400
00:30:51,240 --> 00:30:53,560
ரெகிலானிடம் தள்ள,

401
00:30:53,640 --> 00:30:56,040
சோனிடம் தள்ள, சோன் கோல் போடுகிறார்.

402
00:30:56,120 --> 00:31:01,920
ஆர்சனல் 3 - 1 டாட்டனம்
சோன் 79'

403
00:31:08,120 --> 00:31:11,680
கட்டையை அடிக்கிறது,
ராம்ஸ்டேல் காப்பாற்றுகிறார்.

404
00:31:13,280 --> 00:31:16,480
கிட்டதட்ட. அதோ, இறுதி விசில் அடிக்கிறது.

405
00:31:16,560 --> 00:31:19,960
மிகேல் ஆர்டெடா குஷியுடன் குதிக்கிறார்
எமிரேட்ஸ் அரங்கில்.

406
00:31:20,040 --> 00:31:24,680
ஆர்சனலின் இந்த வெற்றி தகுதி வாய்ந்தது,
முதல் பாதியில் பிரமாதமாக விளையாடினார்கள்.

407
00:31:31,760 --> 00:31:34,720
எமீல், 50 ஆட்டங்கள், ஆர்சனலுடன்,

408
00:31:34,800 --> 00:31:36,640
சில அருமையான தினங்கள் இருந்தன.

409
00:31:36,720 --> 00:31:38,120
இதுவா சிறந்தது?

410
00:31:38,200 --> 00:31:41,720
100%, என் வாழ்நாளிலேயே சிறந்த தினம்,

411
00:31:41,800 --> 00:31:44,640
நம் அரங்கில் இன்னொரு வெற்றி
நார்த் லண்டன் டார்பியில்,

412
00:31:44,720 --> 00:31:49,040
என் குடும்பத்தின் முன், சிறந்த உணர்ச்சி.

413
00:31:49,120 --> 00:31:50,880
நார்த் லண்டன் என்ன வண்ணம்?

414
00:31:50,960 --> 00:31:55,160
-சிகப்பு, நண்பா.
-வா, ஜி, வா.

415
00:31:55,240 --> 00:31:56,960
சிகப்பு, இது சிகப்பு!

416
00:31:58,720 --> 00:32:00,760
அது அத்தனை சிறப்பாக போனது.

417
00:32:00,840 --> 00:32:02,640
நிறைய முட்டி வழுக்கல் நடந்தது.

418
00:32:02,720 --> 00:32:06,400
உங்களுக்கு முட்டி வழுக்கல் பிடிக்கும்னா,
இங்கே பணம் வசூல்.

419
00:32:06,480 --> 00:32:11,280
இந்த மாதிரி தினங்களில் க்ளப்பை ஆதரிப்பது
பிரமாதம், நம்ப முடியவில்லை.

420
00:32:14,120 --> 00:32:14,960
வா!

421
00:32:15,040 --> 00:32:17,960
ஆஹா, நண்பா! ஆம்!

422
00:32:22,600 --> 00:32:26,360
இதோ
இதோ, இதோ

423
00:32:26,440 --> 00:32:29,320
எல்லாரும் வண்டியில்
பயணம் செய்கிறோம்

424
00:32:29,400 --> 00:32:31,560
இதோ

425
00:32:31,640 --> 00:32:34,320
சாகாவும், எமீல் ஸ்மித் ரோவும்

426
00:32:35,360 --> 00:32:37,080
எல்லாரும்!

427
00:32:37,160 --> 00:32:40,600
இதோ
இதோ, இதோ

428
00:32:40,680 --> 00:32:43,920
எல்லோரும் வண்டியில்
பயணம் செய்கிறோம்

429
00:32:44,000 --> 00:32:46,040
இதோ

430
00:32:46,360 --> 00:32:48,840
சாகாவும், எமீல் ஸ்மித் ரோவும்

431
00:32:57,360 --> 00:32:59,480
சபாஷ் ஆர்சனல்!

432
00:33:05,200 --> 00:33:09,200
எல்லோரும் இதில் கையெழுத்திட்டனர்,
இது உனக்கு, அனுபவி.

433
00:33:45,320 --> 00:33:47,960
நார்த் லண்டன் இன்றைக்கு சிகப்பு

434
00:33:48,440 --> 00:33:52,040
ஆர்சனல் 204 ம் நார்த் லண்டன்
டார்பியை ஜெயித்தது.

435
00:33:52,440 --> 00:33:55,600
பருவத்தை தொடங்கும்படியான வெற்றி இது.

436
00:33:56,600 --> 00:33:58,520
பருவம் தொடர,

437
00:33:58,600 --> 00:34:02,600
ஆர்சனல் ரசிகர்களுடன் மீண்டும்
இணையத் தொடங்கியது தெளிவாகிறது.

438
00:34:02,680 --> 00:34:06,320
ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு
எனக்கு பிடித்தது, பிடித்தது

439
00:34:06,400 --> 00:34:07,560
எனக்கு பிடித்தது

440
00:34:09,960 --> 00:34:11,719
இதோ

441
00:34:11,800 --> 00:34:14,880
சாகாவும், எமீல் ஸ்மித் ரோவும்

442
00:34:14,960 --> 00:34:16,440
ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு

443
00:34:16,520 --> 00:34:19,960
எனக்குபிடித்தது, பிடித்தது
எனக்குபிடித்தது, பிடித்தது

444
00:34:22,360 --> 00:34:24,080
இதோ

445
00:34:24,159 --> 00:34:26,880
சாகாவும், எமீல் ஸ்மித்தும்

446
00:34:27,880 --> 00:34:28,800
அடுத்த முறை...

447
00:34:28,880 --> 00:34:31,600
நாம் ஆன்ஃபீல்ட் செய்வோம்,
அவர்களை வெல்வோம்.

448
00:34:31,639 --> 00:34:34,280
டச்லைன் அருகே சிறிது கோபக்கனல் வீச,

449
00:34:34,360 --> 00:34:37,840
ஆர்டெடாவும் க்ளாப்பும்
மோதிக் கொள்கிறார்கள்.

450
00:34:39,639 --> 00:34:43,400
டியாகோ, ராம்ஸ்டேலை சுற்றி போய்
லிவர்பூலுக்கு கோல் போடுகிறார்.

451
00:34:43,480 --> 00:34:45,159
அது அவமானம்.

452
00:34:47,000 --> 00:34:50,639
என்னால் மாற்றங்கள் செய்ய முடியும்,
நாம் அதே அணியுடன் ஆட மாட்டோம்.

453
00:34:51,760 --> 00:34:55,040
-ஆபமெயாங் உட்கார்ந்தார். நிச்சயமாக.
-சரி, என நினைக்கிறேன்.

454
00:34:55,120 --> 00:34:58,920
க்ராஸ் பாரை அடித்தார்.
நெட்டுக்குள் போட்டார்!

455
00:35:54,880 --> 00:35:57,560
ஆர்சனல் கால்பந்து க்ளப்பின் வீரர்கள்,
கோச்கள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி

456
00:35:58,880 --> 00:36:00,880
வசனங்கள் மொழிபெயர்ப்பு பி.கே.சுந்தர்

457
00:36:00,960 --> 00:36:02,960
படைப்பு மேற்பார்வையாளர்
கல்பனா ரகுராமன்

