1
00:01:37,055 --> 00:01:38,265
என்ன?

2
00:01:38,265 --> 00:01:41,727
கட்டிடத்துக்கு வெளியே இந்த பணத்தைப்
போட்டுவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

3
00:01:45,898 --> 00:01:48,066
தவறாக இருந்தால், மன்னித்துவிடுங்கள்.

4
00:01:48,066 --> 00:01:49,693
இல்லை, தயவுசெய்து.

5
00:01:49,693 --> 00:01:50,903
சரி.

6
00:02:17,554 --> 00:02:20,849
சார். ஆம், அது என்னுடையதுதான்.

7
00:02:20,849 --> 00:02:22,267
ஆங்கிலம் பேசுகிறீர்கள்.

8
00:02:22,267 --> 00:02:23,852
இது என் வேலையின் ஒரு பகுதி.

9
00:02:25,020 --> 00:02:27,064
நிறைய பணம் இருக்கிறது.
நீங்கள் இதை இழக்கக் கூடாது.

10
00:02:28,565 --> 00:02:29,650
ஆம், நன்றி.

11
00:02:34,696 --> 00:02:37,449
நான் உங்களுக்கு வெகுமதி கொடுத்தாக வேண்டுமா?

12
00:02:37,950 --> 00:02:39,368
இல்லை, அதற்கு அவசியமில்லை.

13
00:02:40,494 --> 00:02:41,912
ஆனால் உங்களிடம் ஒரு உதவி கேட்கிறேன்.

14
00:02:43,497 --> 00:02:45,165
இந்த பையனைப் பார்த்திருக்கிறீர்களா?

15
00:02:45,749 --> 00:02:48,210
இவனை கடந்த ஆறு நாட்களாக காணவில்லை.
இவன் பெயர் யூமா.

16
00:02:49,002 --> 00:02:50,420
இவனை இதற்கு முன்பு பார்த்ததில்லை.

17
00:03:00,681 --> 00:03:03,475
நீ பொய் சொல்கிறாய் என்று நினைக்கிறேன், ஹிடியோ.

18
00:03:07,938 --> 00:03:09,940
நீ ஒரு பயங்கரமான தவறு
செய்துவிட்டாய் என்று நினைக்கிறேன்.

19
00:03:13,694 --> 00:03:15,863
யூமாவின் பெற்றோருக்கு பணய குறிப்பை
அனுப்பி இருக்கிறாய்.

20
00:03:17,281 --> 00:03:20,742
கோபயாஷிக்களுக்கு.
ஆனால் திரு. கோபயாஷி யூமாவின் அப்பா இல்லை.

21
00:03:25,998 --> 00:03:26,999
இல்லை.

22
00:03:27,708 --> 00:03:29,293
அவர் அப்பா என்று நினைக்கிறார்,
ஆனால் அவர் இல்லை.

23
00:03:30,711 --> 00:03:32,838
யூமாவின் அப்பா, அவனுடைய உண்மையான அப்பா,

24
00:03:32,838 --> 00:03:36,758
மசாகி ஹாஷிமோடோ என்ற பெயர் கொண்ட ஒருவர்,
அதோடு திரு. ஹாஷிமோடோ...

25
00:03:38,760 --> 00:03:41,263
டோக்கியோ யாகூஸாவின் முதலாளி.

26
00:03:42,097 --> 00:03:43,682
எனவே ஒரே கேள்வி என்னவென்றால்,

27
00:03:44,641 --> 00:03:46,143
அடுத்து என்ன நடக்கும்?

28
00:03:48,061 --> 00:03:51,523
நான் உனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கிறேன்.
என்னை அந்த பையனிடம் அழைத்துப் போ.

29
00:03:51,523 --> 00:03:53,358
யூமா என்னிடம் வந்தவுடன்,

30
00:03:53,859 --> 00:03:56,862
நான் அவனுடைய அப்பாவை அழைக்கும் முன்பு
உனக்கு இரண்டு மணிநேரம் அவகாசம் தருகிறேன்.

31
00:03:56,862 --> 00:03:59,865
அந்த நேரத்தில், நீ விமான நிலையத்திற்குப் போய்,
ஒரு ஊருக்கு டிக்கெட் வாங்கு,

32
00:03:59,865 --> 00:04:01,575
வெளிநாடாக இருப்பது நல்லது.

33
00:04:02,951 --> 00:04:05,204
ஜப்பானில் உனக்கு பாதுகாப்பு இல்லை.

34
00:04:12,794 --> 00:04:14,213
எனக்கு அடுத்தவர்களை காயப்படுத்துவது பிடிக்காது.

35
00:04:14,838 --> 00:04:15,839
நிஜமாகவே பிடிக்காது.

36
00:04:17,341 --> 00:04:20,135
பையனை எங்கே மறைத்து வைத்திருக்கிறாய் என்று சொல்,
நம் ஒப்பந்தம் இன்னும் இருக்கிறது.

37
00:04:21,720 --> 00:04:24,556
தயவுசெய்து.
பையனை எங்கே மறைத்து வைத்திருக்கிறாய் என்று சொல்.

38
00:04:29,728 --> 00:04:32,064
மன்னித்துவிடு. இந்த நிலைக்கு நீதான் காரணம்.

39
00:04:43,617 --> 00:04:46,161
சேவில் ரோ சூட் கிழிந்துவிட்டது.

40
00:05:10,686 --> 00:05:12,479
யார் நீங்கள்?

41
00:05:12,479 --> 00:05:14,481
உட்காருங்கள்.

42
00:05:42,593 --> 00:05:43,677
யூமா.

43
00:05:52,102 --> 00:05:54,313
நன்றி.

44
00:05:54,313 --> 00:05:56,815
உங்களுக்கு உதவியது பெருமையாக இருக்கிறது, சார்.

45
00:05:56,815 --> 00:05:58,192
உங்களுக்கு அடிபட்டிருக்கிறது.

46
00:05:58,192 --> 00:06:00,485
- நான் அதை பார்த்துக்கொள்கிறேன்.
- உங்கள் விருப்பம்.

47
00:06:00,485 --> 00:06:02,321
வெளியே காத்திரு.

48
00:06:09,620 --> 00:06:11,413
நீங்கள் இப்போது கிளம்புவது நல்லது.

49
00:06:31,016 --> 00:06:33,101
எனக்கு அடுத்தவர்களை
காயப்படுத்துவது பிடிக்காது. நிஜமாகவே.

50
00:06:34,561 --> 00:06:37,940
என்னுடைய கூடுதல் பங்களிப்பு இல்லாமலேயே
இந்த உலகம் போதுமான துயரத்தை அனுபவிக்கிறது.

51
00:06:41,610 --> 00:06:43,320
காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பது.

52
00:06:44,154 --> 00:06:46,114
அவர்களைக் கண்டுபிடித்து அவர்களின்
அன்பிற்குரியவர்களிடம் ஒப்படைப்பது.

53
00:06:47,950 --> 00:06:49,409
வேலையின் அந்த பகுதிதான் எனக்குப் பிடித்தது.

54
00:06:51,328 --> 00:06:53,997
அது எப்போதாவது நடக்கும் கத்தி சண்டையையும்
சூட் கிழிவதையும் மதிப்பானதாக ஆக்குகிறது.

55
00:06:56,458 --> 00:06:57,584
இது கடினமான தொழில்.

56
00:06:58,961 --> 00:06:59,962
ஆனால் நிலையானது.

57
00:08:31,553 --> 00:08:33,639
தாமஸ் கின்ஸி
சேவைகளை கோருபவர் / திரு. சீகல்

58
00:08:33,639 --> 00:08:37,433
ஜோனாதன் சீகல் சார்பாக,

59
00:09:07,589 --> 00:09:09,591
லாஸ் ஏஞ்சலஸ்

60
00:09:16,974 --> 00:09:21,019
காய்ச்சல் குறைந்துவிடும். வாந்தி நின்றுவிட்டதா?

61
00:09:21,019 --> 00:09:23,897
ஒரு வாடிக்கையாளர் இருக்கிறார்...

62
00:09:23,897 --> 00:09:26,441
எனவே நான் போக வேண்டும்.

63
00:09:28,652 --> 00:09:30,737
வெப்பநிலை சரியாக இருக்கிறதா சார்?

64
00:09:30,737 --> 00:09:32,531
நீங்கள் விரும்பினால் ஏசியை ஆன் செய்கிறேன்.

65
00:09:32,531 --> 00:09:34,908
நான் சௌகரியமாக இருக்கிறேன். நன்றி.

66
00:09:34,908 --> 00:09:35,993
உங்களுக்கு அரபி தெரியுமா?

67
00:09:35,993 --> 00:09:38,787
தெரியும். பல ஆண்டுகளுக்கு முன்பு,
டமாஸ்கஸில் கொஞ்ச காலம் இருந்தேன்.

68
00:09:38,787 --> 00:09:41,290
எல்லா பிரச்சினைகளுக்கும் முன்பாக...
அது அற்புதமான நகரமாக இருந்தபோது.

69
00:09:41,290 --> 00:09:42,875
என் சொந்த ஊர் டமாஸ்கஸ்தான்!

70
00:09:42,875 --> 00:09:44,626
உன் பெயர் என்ன, என் நண்பா?

71
00:09:44,626 --> 00:09:46,670
முன்செர்.

72
00:09:47,296 --> 00:09:48,672
முன்செர்.

73
00:10:11,528 --> 00:10:12,613
முன்செர்.

74
00:10:13,530 --> 00:10:15,949
உன் மகளைப் பற்றி பேசியதைக் கேட்டேன்.

75
00:10:17,117 --> 00:10:18,535
இது என் மருத்துவரின் தொலைபேசி எண்.

76
00:10:19,870 --> 00:10:21,121
அவரை அழை, சரியா?

77
00:10:21,121 --> 00:10:23,916
உன் மகளுக்கு உடம்பு சரியில்லை என்று
அவரிடம் சொல், அதோடு

78
00:10:23,916 --> 00:10:25,876
மறக்காமல் நான்தான் அழைக்கச் சொன்னேன் என்று சொல்.
அவர் உதவுவார்.

79
00:10:26,752 --> 00:10:29,213
உங்களை வாழ்த்துகிறேன், சார்.
கடவுள் ஆசிர்வதிக்கட்டும்.

80
00:10:29,213 --> 00:10:30,506
நிச்சயமாக.

81
00:10:31,507 --> 00:10:33,467
- நான் உங்களுக்காக காத்திருக்கவா?
- இல்லை. தேவையில்லை.

82
00:10:33,467 --> 00:10:35,969
ஆனால் என் பைகளை ஹோட்டலுக்கு கொண்டு செல்வது
பிரச்சினையில்லை என்றால், அதை வரவேற்பேன்.

83
00:10:35,969 --> 00:10:39,890
உங்கள் டிஸ்பேட்சர் கேட்டால், என்னையும்
அங்கேயே இறக்கிவிட்டதாகச் சொல்.

84
00:10:39,890 --> 00:10:40,974
சொன்னது போலவே செய்கிறேன்.

85
00:11:11,755 --> 00:11:14,383
- ஜான் ஷுகர், நேரில் வந்திருக்கிறாய்.
- ஹேய், ரூபி.

86
00:11:14,383 --> 00:11:17,803
ஹேய். இங்கே வா.
பார்த்து நீண்ட காலமாகிவிட்டது.

87
00:11:17,803 --> 00:11:19,805
- ஆம்.
- சரி, உன்னை நன்றாக பார்க்கிறேன்.

88
00:11:22,182 --> 00:11:24,434
- நீ சோர்வாக இருக்கிறாய்.
- நீண்ட பயணம்.

89
00:11:24,434 --> 00:11:26,103
தற்செயலாக டோக்கியோவில் என் பழைய
நண்பனை சந்தித்தேன்.

90
00:11:26,854 --> 00:11:29,022
தனது உள்ளூர் குழு கலைக்கப்பட்டதாகவும்

91
00:11:29,857 --> 00:11:32,192
மற்ற உறுப்பினர்களை பார்த்து
ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது என்றான்.

92
00:11:32,192 --> 00:11:36,697
அவன் இடத்தை மாற்ற விரும்பினால்,
நாம் அதை வரவேற்போம் என்றேன்.

93
00:11:36,697 --> 00:11:39,992
ஆம், நிச்சயமாக. சரி.
உனக்காக சில விஷயங்கள் உள்ளே வைத்திருக்கிறேன்.

94
00:11:39,992 --> 00:11:41,326
- முன்னால் போ.
- சரி.

95
00:11:44,663 --> 00:11:46,832
மிரெம்பே.

96
00:11:46,832 --> 00:11:47,916
ஹாய்.

97
00:11:52,171 --> 00:11:54,631
நீ எளிதில் மயங்கிவிடுவாய் என்று தெரியாது.

98
00:11:54,631 --> 00:11:57,050
மயங்கவில்லை, ஏனென்றால்
இது என்ன செய்யும் என்று எனக்குக் தெரியும்.

99
00:11:58,302 --> 00:11:59,303
நல்ல பூனை.

100
00:12:02,264 --> 00:12:04,183
- என்ன வைத்திருக்கிறாய்?
- ஹெலனிடமிருந்து.

101
00:12:04,183 --> 00:12:07,102
- அவள் மிகவும் இனிமையானவள்.
- ஆம், இன்னும் கடிதம் எழுதுவதை நம்ப முடியவில்லை.

102
00:12:07,102 --> 00:12:08,478
அதாவது, கைப்பட எழுதுகிறாள்.

103
00:12:08,478 --> 00:12:09,605
அவளுக்கு பழைய பழக்கங்கள் பிடிக்கும்.

104
00:12:09,605 --> 00:12:11,648
- பழைய பழக்கங்கள் பிடிக்கும்.
- நன்றி.

105
00:12:11,648 --> 00:12:12,816
வரவேற்கிறேன்.

106
00:12:14,234 --> 00:12:18,447
எனவே, உன் விமானம் நான்கு மணிநேரத்திற்கு முன்பு
தரையிறங்கியதா?

107
00:12:19,239 --> 00:12:20,574
தோராயமாக. ம்.

108
00:12:23,911 --> 00:12:25,078
நீ எங்கே இருந்தாய்?

109
00:12:26,705 --> 00:12:27,706
எனக்குச் செய்ய சில விஷயங்கள் இருந்தன.

110
00:12:32,127 --> 00:12:33,295
விஷயங்களா?

111
00:12:33,962 --> 00:12:35,339
விஷயங்கள்.

112
00:12:35,339 --> 00:12:37,466
எது போன்ற விஷயங்கள்?

113
00:12:37,466 --> 00:12:38,675
விஷயங்களைப் போன்ற விஷயங்கள்.

114
00:12:39,635 --> 00:12:40,928
ஜோனாதன் சீகல் போலவா?

115
00:12:43,680 --> 00:12:45,474
தாமஸ் கின்ஸி, திரு. சீகலின் வழக்கறிஞர்.

116
00:12:45,474 --> 00:12:46,558
ஜான் ஷுகர்.

117
00:12:46,558 --> 00:12:48,060
வாருங்கள். அவர் தோட்டத்தில் இருக்கிறார்.

118
00:12:48,060 --> 00:12:50,270
- மீண்டும் என்னை வேவு பார்க்கிறாயா?
- இல்லை, நான்...

119
00:12:50,270 --> 00:12:53,357
தாமஸ் கின்ஸியிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது.

120
00:12:53,357 --> 00:12:55,359
ஆம், உன் ஒப்பந்தத்தைப் பற்றி,

121
00:12:55,359 --> 00:12:59,446
அது மிகவும் விசித்திரமானது, ஏனென்றால் அவர்
மூன்று நாட்களுக்கு முன்பு என்னை அழைத்தபோது,

122
00:12:59,446 --> 00:13:03,408
நீ கிடைக்கமாட்டாய் என்று
மிகத் தெளிவாகச் சொன்னேன்.

123
00:13:05,327 --> 00:13:06,328
இருக்கலாம்.

124
00:13:06,328 --> 00:13:08,413
நீங்கள் மேற்கோள் காட்டியவர்களை தொடர்பு கொண்டேன்.

125
00:13:08,997 --> 00:13:11,041
நீங்கள் மிகவும் நேர்மையானவர் என்று
எல்லோரும் சொன்னார்கள்.

126
00:13:11,041 --> 00:13:12,459
அவரது குடும்பத்தைப் பொறுத்தவரை,

127
00:13:12,459 --> 00:13:15,754
திரு. சீகல் நம்பமுடியாத அளவுக்கு தனிப்பட்ட நபர்.

128
00:13:15,754 --> 00:13:18,882
இந்த தனிப்பட்ட பிரச்சினை பொதுவெளிக்கு வருவது

129
00:13:18,882 --> 00:13:20,968
அவருக்கு மிகவும் வேதனையாக இருக்கும்.

130
00:13:21,552 --> 00:13:23,887
- அதோ இருக்கிறார்.
- அதோ இருக்கிறார்.

131
00:13:26,098 --> 00:13:28,684
உங்களால் முடிந்தவரை நடுங்கள்.
ஆனால் இங்கே இன்னும் கொஞ்சம் மண்ணைப் போடுங்கள்.

132
00:13:28,684 --> 00:13:30,686
அவ்வளவுதான். நன்றி.
நான் அதைப் பாராட்டுகிறேன்.

133
00:13:32,312 --> 00:13:35,524
ஷுகர், ஜோனாதன் சீகல்.

134
00:13:35,524 --> 00:13:37,943
உங்களை சந்தித்ததில் எனக்குப் பெருமை, சார்.
உங்கள் பணியை மிகவும் ரசிப்பவன்.

135
00:13:37,943 --> 00:13:41,154
நீங்கள் தயாரித்த ஒவ்வொரு
திரைப்படத்தையும் நான் பார்த்திருக்கிறேன்.

136
00:13:41,154 --> 00:13:43,490
பெரும்பாலும், குறைந்தது ஐந்து அல்லது ஆறு முறை,

137
00:13:43,490 --> 00:13:45,534
"லேடி இன் தி ஷேடோஸ்" தவிர.

138
00:13:45,534 --> 00:13:47,661
அதை எண்ணிக்கை ஞாபகம் இல்லாத அளவுக்கு
பல முறை பார்த்திருக்கிறேன்.

139
00:13:49,454 --> 00:13:52,583
- நீ போகலாம், டாம். நான் பிறகு அழைக்கிறேன்.
- திரு. ஷுகர்.

140
00:13:52,583 --> 00:13:53,667
நன்றி.

141
00:13:54,751 --> 00:13:55,878
- போவோமா?
- நிச்சயமாக.

142
00:13:57,337 --> 00:14:00,340
அப்படியென்றால், நீங்கள் சினிமா ரசிகரா?

143
00:14:00,841 --> 00:14:02,843
ரசிகனா? ரசிகன் என்பது...

144
00:14:02,843 --> 00:14:05,220
குறைத்துச் சொல்வது.
இது ஒரு போதை போன்றது.

145
00:14:08,515 --> 00:14:11,059
இது வேடிக்கையானது இல்லை, ஜான். எனக்கு இல்லை.

146
00:14:12,269 --> 00:14:14,980
ஒரு வாடிக்கையாளர் உன்னை நேரடியாக அணுகினால்,
அது அவமரியாதை.

147
00:14:15,606 --> 00:14:17,274
நீ என்னிடம் கேட்டிருக்க வேண்டும்.

148
00:14:17,274 --> 00:14:20,861
டோக்கியோவிற்குப் பிறகு,
நீ ஓய்வெடுப்பாய் என்று உனக்கும் எனக்கும்

149
00:14:20,861 --> 00:14:22,988
ஒரு ஒப்பந்தம் இருந்ததைச் சொல்லவே வேண்டாம்.

150
00:14:24,114 --> 00:14:25,616
மிகவும் தேவையான ஓய்வு.

151
00:14:25,616 --> 00:14:27,743
உங்களைப் பற்றி
எமிலி கார்பெண்டரிடம் பேசினேன்.

152
00:14:30,037 --> 00:14:33,123
எமிலி என்னிடம் சொன்னார், நீங்கள் ஒரு வேலை,
ஒரே வேலையை மட்டும் செய்வீர்கள் என்று.

153
00:14:33,874 --> 00:14:34,958
காணாமல் போனவரை கண்டுபிடிப்பீர்கள்,

154
00:14:36,627 --> 00:14:38,712
என்னைப் போன்ற, உங்கள் முடிவை

155
00:14:39,796 --> 00:14:41,298
மதிப்பவர்களுக்கு.

156
00:14:42,216 --> 00:14:44,676
- ரூபி, அது ஜோனாதன் சீகல்.
- அது யாரென்று எனக்குக் கவலையில்லை.

157
00:14:46,720 --> 00:14:48,055
ஒரு பெண்ணைக் காணவில்லை.

158
00:14:49,765 --> 00:14:50,891
அவருடைய பேத்தி.

159
00:14:51,892 --> 00:14:55,687
அவளுக்கு இப்போது 25 வயது,
ஆனால் அவள் அவருக்கு இன்னும் குழந்தைதான்.

160
00:14:55,687 --> 00:14:58,315
ஒலிவியாவை இரண்டு வாரங்களாக காணவில்லை.

161
00:15:01,151 --> 00:15:05,322
என் மகன் பெர்னார்ட், அவன்
சில நாட்களுக்கு முன்புதான் என்னிடம் சொன்னான்.

162
00:15:05,864 --> 00:15:09,576
இது அவளுடைய மற்றொரு தவறான
சாகசம் என்று அவன் நினைக்கிறான்.

163
00:15:09,576 --> 00:15:11,995
நீங்கள் கேட்டதை டாமின்
அலுவலகத்திடம் தயார் செய்ய சொன்னேன்.

164
00:15:16,208 --> 00:15:18,460
- அதுதான் அவள்.
- அழகாக இருக்கிறாள்.

165
00:15:19,837 --> 00:15:22,464
அவள் இப்படி முன்பே செய்திருக்கிறாளா?
காணாமல் போயிருக்கிறாளா?

166
00:15:23,173 --> 00:15:28,178
ஆம். ஆனால் அதற்குக் காரணம் அவளுக்குப் பல
வருடங்களாக போதைப் பழக்கத்தால் பிரச்சினை இருந்தது,

167
00:15:28,178 --> 00:15:32,015
அவள் அடிக்கடி நாட்கள், வாரங்கள்,
மாதக்கணக்கில்கூட காணாமல் போய்விடுவாள்.

168
00:15:32,015 --> 00:15:34,726
ஆனால் இந்த முறை வித்தியாசமானது.
இந்த முறை நீங்கள் கவலைப்படுகிறீர்கள். ஏன்?

169
00:15:35,769 --> 00:15:40,023
ஒலிவியா அப்படி காணாமல் போனால்,
அவள் என்னை அழைப்பாள்.

170
00:15:40,023 --> 00:15:41,984
நான் அவளுக்குக் கொடுக்கும் பணத்திற்காக

171
00:15:41,984 --> 00:15:43,277
அவள் எப்போதும் என்னை அழைப்பாள்.

172
00:15:43,277 --> 00:15:45,445
நீங்கள் அவளிடம் பேசவில்லை?
அழைப்புகள் இல்லை, இல்லை...

173
00:15:45,445 --> 00:15:47,739
இல்லை, இந்த முறை வித்தியாசமானது.

174
00:15:48,240 --> 00:15:49,825
ஒலிவியாவை கடைசியாக எப்போது பார்த்தீர்கள்?

175
00:15:51,952 --> 00:15:54,621
ஒரு மாதத்திற்கு முன்பு.
அவளை இரவு உணவிற்கு அழைத்துச் சென்றேன்.

176
00:15:54,621 --> 00:15:57,249
இரண்டு வருடங்களாக அவள் போதைப்பொருள்
பயன்படுத்தாததை கொண்டாடினோம்.

177
00:15:57,791 --> 00:16:00,377
அதை நினைத்து மிகவும் பெருமைப்பட்டாள்.
நான் அவளை நினைத்து பெருமைப்பட்டேன்.

178
00:16:01,628 --> 00:16:05,549
அந்த இரவு அவளிடம் ஏதோ விசேஷமானது இருந்தது.

179
00:16:05,549 --> 00:16:07,009
விசேஷமா? எப்படி?

180
00:16:07,634 --> 00:16:13,056
அவள் உணர்வுப்பூர்வமாக, நம்பிக்கையோடு,
ஆர்வமாக, ஜாலியாக இருந்தாள்.

181
00:16:14,892 --> 00:16:18,020
அவள் இறுதியாக முன்னேறுவது
எனக்கு மிகவும் தெளிவாக தெரிந்தது.

182
00:16:18,020 --> 00:16:19,396
எதில் முன்னேறினாள், சார்?

183
00:16:21,148 --> 00:16:22,608
அவள் அவளாக ஆவதில்.

184
00:16:27,446 --> 00:16:29,031
நான் ஒரு வயதானவன், ஷுகர்,

185
00:16:30,073 --> 00:16:32,451
அதோடு வெளிப்படையாக நான் அவ்வளவு நன்றாக இல்லை.

186
00:16:33,577 --> 00:16:34,620
இதய நோய்.

187
00:16:35,913 --> 00:16:38,165
நான் இப்போதெல்லாம் எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை,

188
00:16:39,666 --> 00:16:41,752
என் பேத்தியைத் தவிர.

189
00:16:43,921 --> 00:16:47,382
தயவுசெய்து நீங்கள் அவளைக் கண்டுபிடிக்க வேண்டும்.

190
00:16:49,718 --> 00:16:51,094
சரி, அது அவருடைய பிரச்சினை.

191
00:16:52,179 --> 00:16:53,847
அது என்னுடையதும் அல்ல, உன்னுடையதும் அல்ல.

192
00:16:58,560 --> 00:16:59,728
விரைவில் பேசுவோம்.

193
00:17:00,687 --> 00:17:01,939
அது வேடிக்கையாக இல்லை, ஜான்.

194
00:17:01,939 --> 00:17:04,525
நீ இப்போதே தாமஸ் கின்ஸியை அழைத்து,
அவர் நினைப்பது தவறு என்று சொல்.

195
00:17:05,233 --> 00:17:06,108
ரூபி,

196
00:17:07,736 --> 00:17:08,819
அது என்னால் முடியாது.

197
00:17:10,571 --> 00:17:12,991
அது என்னால் முடியாது. அந்தப் பெண்தான்.

198
00:17:19,790 --> 00:17:21,083
அவள் எனக்கு ஜென்னை நினைவுபடுத்துகிறாள்.

199
00:17:25,170 --> 00:17:26,171
ஆம்.

200
00:17:29,299 --> 00:17:30,467
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

201
00:17:31,343 --> 00:17:32,886
அவள்...

202
00:17:40,352 --> 00:17:43,438
கடவுளே. நீ ஒரு ஏமாற்றுப்பேர்வழி.

203
00:17:43,438 --> 00:17:44,648
என்ன?

204
00:17:44,648 --> 00:17:46,567
என்னை எப்படி ஏமாற்றுவது என்று
உனக்குத் தெரியும், இல்லையா?

205
00:17:46,567 --> 00:17:49,278
- நான் ஏமாற்றவில்லை, ரூபி. ஏமாற்றவில்லை.
- ஆம்.

206
00:17:49,278 --> 00:17:53,991
நான் அவளுடைய படங்களைப் பார்த்தேன்,
உடனே நேராக, அது ஜென்னை ஞாபகப்படுத்தியது.

207
00:17:55,117 --> 00:17:56,743
சரி. இது உனக்குத் தேவைப்படும்.

208
00:17:56,743 --> 00:17:58,579
இது ஒரு ரகசியமாக வைத்துக்கொள்ளும் அனுமதி,

209
00:17:58,579 --> 00:18:00,914
உன்னுடைய புதுப்பிக்கப்பட்ட கலிபோர்னியாவின்
தனியார் புலனாய்வாளர் உரிமம்,

210
00:18:00,914 --> 00:18:01,999
- ஓட்டுநர் உரிமம்...
- பொறு. வோவ்.

211
00:18:01,999 --> 00:18:05,043
ரகசியமாக வைத்துக்கொள்ளும் அனுமதி,
ஏன் அது எனக்குத் தேவை?

212
00:18:13,427 --> 00:18:15,470
ரூபி, அட. எனக்கு துப்பாக்கி
பிடிக்காது என்று உனக்கே தெரியும்.

213
00:18:15,470 --> 00:18:17,514
ஆம், எனக்குத் தெரியும். அட. இது வெறும்...

214
00:18:17,514 --> 00:18:19,016
பார், இது ஏதோவொரு
பழைய துப்பாக்கி இல்லை, சரியா?

215
00:18:19,016 --> 00:18:21,727
"தி பிக் ஹீட்" படத்தில் க்ளென் ஃபோர்டு
பயன்படுத்திய துப்பாக்கி இது.

216
00:18:21,727 --> 00:18:25,731
"தி பிக் ஹீட்" படத்தில் க்ளென் ஃபோர்டு
பயன்படுத்திய துப்பாக்கி என்று என்ன சொல்கிறாய்?

217
00:18:25,731 --> 00:18:27,649
என்ன சொல்கிறாய்? இது ஒரு பிரதியா?

218
00:18:27,649 --> 00:18:29,902
இல்லை, இது ஒரு பிரதி இல்லை.

219
00:18:29,902 --> 00:18:31,486
க்ளென் ஃபோர்டு?

220
00:18:31,987 --> 00:18:33,530
ஆம், அவர் இந்த துப்பாக்கியைப் பயன்படுத்தினார்.

221
00:18:33,530 --> 00:18:34,865
- கிளென் ஃபோர்டு இதைப் பயன்படுத்தினாரா?
- நான்...

222
00:18:34,865 --> 00:18:37,409
- தொடரு. சொல்.
- க்ளென் ஃபோர்டு இதைத்தான் பயன்படுத்தினார்.

223
00:18:38,493 --> 00:18:39,578
- அடக் கடவுளே.
- ஆம்,

224
00:18:39,578 --> 00:18:41,079
நான் இதை ஒரு தனியார் சேகரிப்பாளரிடம் வாங்கினேன்.

225
00:18:41,079 --> 00:18:43,790
உனக்காக இதை
சரியாக செயல்படும் நிலைக்கு சரிசெய்தேன்.

226
00:18:44,416 --> 00:18:46,877
- ஏன்?
- நீ துப்பாக்கி வைத்திருந்தால் எனக்கு இன்னும் கொஞ்சம்

227
00:18:46,877 --> 00:18:47,961
நிம்மதியாக இருக்கும்.

228
00:18:48,462 --> 00:18:51,590
அதோடு, நான் உன்னைச் செய்ய வைக்கும்
ஒரே வழி இதுதான் என்று நினைத்தேன்.

229
00:18:51,590 --> 00:18:53,342
யாரை யார் ஏமாற்றுகிறார்கள்?

230
00:18:54,510 --> 00:18:58,180
- ஆஹா. சரி, நன்றி.
- இதோ. நீ வரவேற்கப்படுகிறாய்.

231
00:18:58,180 --> 00:19:01,308
- ஆனால், இல்லை, நன்றி.
- இல்லை, ம். இல்லை.

232
00:19:02,476 --> 00:19:04,937
இவை எல்லாவற்றையும் வாங்கிக்கொள்ளலாம்,
ஆனால் சில வாக்குறுதிகளை கொடுக்க வேண்டும்.

233
00:19:05,646 --> 00:19:07,105
எது போல?

234
00:19:07,105 --> 00:19:09,149
நீ இப்போதே இந்த துப்பாக்கியை

235
00:19:09,149 --> 00:19:10,609
- வாங்கிக்கொள்ள வேண்டும்.
- நல்லது.

236
00:19:10,609 --> 00:19:12,861
சரி, பிறகு நீ டாக்டர் விக்கர்ஸுடன்
ஒரு சந்திப்பைத் திட்டமிட வேண்டும்.

237
00:19:13,779 --> 00:19:15,489
ரூபி, நான்...

238
00:19:15,489 --> 00:19:17,824
நான் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறேன்.
பரிபூரணமாக உணர்கிறேன்.

239
00:19:17,824 --> 00:19:21,245
பொய் சொல்லாதே, ஜான். உனக்குத் தெரியும்
எனக்கு உன்னைத் தெரியும் என்று.

240
00:19:21,245 --> 00:19:24,331
- நான் டாக்டர் விக்கர்ஸைப் பார்க்க வேண்டியதில்லை.
- சரி, ஜான், உன் கை எப்படி இருக்கிறது?

241
00:19:29,545 --> 00:19:30,546
ஆம்.

242
00:19:31,880 --> 00:19:32,881
என் கை நன்றாக இருக்கிறது.

243
00:19:37,261 --> 00:19:38,178
சரி.

244
00:19:38,846 --> 00:19:41,139
நீ சீகல் வழக்கை எடுத்துக்கொள்ளலாம்.
ஆனால் அது முடிந்ததும், உன் வேலை முடிந்தது.

245
00:19:41,139 --> 00:19:42,224
சரி.

246
00:19:43,725 --> 00:19:45,185
நான் சொல்லும் வரை.

247
00:19:46,311 --> 00:19:47,980
- சரி. இதோ.
- சரி.

248
00:19:49,231 --> 00:19:52,234
- நீ எதையோ மறந்துவிட்டாய் என்று நினைக்கிறேன்.
- இல்லை, எல்லாமே இருக்கிறது.

249
00:19:52,234 --> 00:19:56,154
அது உன் இடது கையில் இருக்கிறது.
எனக்குக் காட்டு.

250
00:19:56,154 --> 00:19:57,656
நன்றி.

251
00:20:10,711 --> 00:20:12,421
நீ இந்த நினைவுச்சின்னத்தை ஓட்டுவது
எனக்குப் பிடிக்கவில்லை.

252
00:20:12,421 --> 00:20:15,007
நினைவுச்சின்னமா? கலைப் படைப்பு.

253
00:20:22,681 --> 00:20:23,515
சரி.

254
00:20:23,515 --> 00:20:24,766
- நன்றி.
- பரவாயில்லை.

255
00:20:25,350 --> 00:20:27,477
- நிச்சயமாக டெல் கோரஸோனில் தங்குவாய்.
- நிச்சயமாக.

256
00:20:28,103 --> 00:20:29,646
அந்த இடத்தில் நீ செலவு செய்யும் பணத்துக்கு,

257
00:20:29,646 --> 00:20:32,357
- உனக்கு ஒரு நல்ல வீட்டை வாங்கலாம்.
- எனக்கு அந்த இடம் பிடிக்கும்.

258
00:20:32,357 --> 00:20:34,902
அதாவது, எனது அறையை ஒரு நாளைக்கு இரண்டு
முறை சுத்தம் செய்யும் பணிப்பெண்கள் இருக்கிறார்கள்.

259
00:20:34,902 --> 00:20:38,864
எனக்கு தேவையானதை கவனித்துக்கொள்ளும் ஒரு
வரவேற்பாளர் இருக்கிறார். அறை சேவை இருக்கிறது.

260
00:20:38,864 --> 00:20:41,909
இல்லை, நீ அந்த இடத்துக்கு சொந்தமானவன் போல
உணரவைக்கும் பணியாளர்கள் அங்கே இருப்பதால்

261
00:20:41,909 --> 00:20:43,577
- உனக்கு அந்த இடத்தைப் பிடிக்கும்.
- அப்படியா?

262
00:20:43,577 --> 00:20:45,412
- ஆம், நீ ஏதோவொன்றில் ஒரு பகுதியாக இருப்பது போல.
- ஆஹா.

263
00:20:46,288 --> 00:20:49,583
ஆனால் அது ஒரு மாயை, ஷுகர்.
உனக்கு ஒரு வீடு வேண்டும்.

264
00:21:19,112 --> 00:21:20,113
திரு. பாஸ்கோம்ப்?

265
00:21:20,113 --> 00:21:22,282
ஆம். ஹேய், என்னை கேரி என்று அழையுங்கள்.

266
00:21:22,282 --> 00:21:24,618
- ஜான் ஷுகர்.
- ஹாய். திரு. கின்ஸியின் அலுவலகம் அழைத்து,

267
00:21:24,618 --> 00:21:26,370
- உங்களை உள்ளே அனுமதிக்கச் சொன்னது, எனவே...
- அருமை.

268
00:21:26,370 --> 00:21:30,707
பொறுங்கள். ஒவ்வொரு வாடகைதாரருக்கும்,
அவர்களுக்கு சொந்தமாக பார்க்கிங் இடம் இருக்கிறதா?

269
00:21:30,707 --> 00:21:32,209
ஆம், கண்டிப்பாக. சிலருக்கு இரண்டு கூட.

270
00:21:32,918 --> 00:21:34,419
தயவுசெய்து செல்வி சீகலுடையதை காட்ட முடியுமா?

271
00:21:35,087 --> 00:21:36,421
ஆம். இந்தப் பக்கத்தில் இருக்கிறது.

272
00:21:40,175 --> 00:21:43,011
அது இரண்டு வாரங்களாக நகரவில்லை.

273
00:21:43,011 --> 00:21:46,723
உங்களுக்கு எப்படித் தெரியும்? கேரேஜை
24/7 கண்காணிப்பதில்லை என்று நினைக்கிறேன்?

274
00:21:46,723 --> 00:21:50,227
ஓ, இல்லை. எல்லா வாடகைதாரர்களின்
காரிலும் ஒரு கேட்டைத் திறக்கும் சென்சார் இருக்கும்,

275
00:21:50,227 --> 00:21:52,020
அவர்கள் உள்ளே நுழைவதை அல்லது வெளியே செல்வதை
ஒவ்வொரு முறையும் அது பதிவு செய்யும்.

276
00:21:52,020 --> 00:21:55,566
என் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு கணினியில்
அதன் பதிவுகள் இருக்கின்றன...

277
00:21:57,943 --> 00:22:00,279
அதிர்ஷ்டவசமாக,
உங்களிடம் மாற்று சாவிகள் இருக்கின்றனவா?

278
00:22:00,279 --> 00:22:02,239
கார்களுக்கா? இல்லை, வீடுகளுக்கு மட்டும்தான்.

279
00:22:02,239 --> 00:22:04,491
சரி. நான் இப்போது அவர் வீட்டைப் பார்க்கலாமா?

280
00:22:04,491 --> 00:22:05,784
ஆம். இந்த வழியாக.

281
00:22:08,537 --> 00:22:11,081
சரி, இதோ.

282
00:22:12,833 --> 00:22:15,210
அவர் யாரென்று கூட எனக்குத் தெரியாது.
அவருடைய குடும்பம், எல்லாவற்றையும் பற்றி.

283
00:22:15,210 --> 00:22:17,296
- கேரி, நன்றி. நான் உங்களை பாராட்டுகிறேன்.
- ஆம்.

284
00:22:17,296 --> 00:22:19,298
இனி நான் பார்த்துக்கொள்கிறேன்,
சாவியையும் வைத்துக்கொள்கிறேன்.

285
00:22:20,215 --> 00:22:23,468
எல்லா வீடுகளின் சாவிகளும் என்னிடம் இருக்கும்.
நான்தான் கட்டிடத்தின் மேலாளர்.

286
00:22:23,468 --> 00:22:24,928
ஆம், நீங்கள்தான்.
ஆனால் இது குடியிருப்பவருக்குச் சொந்தமானது,

287
00:22:24,928 --> 00:22:27,598
எனவே எல்லா சாவிகளும்
உரிமையாளரின் சட்டப்பூர்வ சொத்து,

288
00:22:27,598 --> 00:22:31,226
அதாவது ஜோனாதன் சீகலுடையது. திரு. சீகலின்
பிரதிநிதியாக நான் வலியுறுத்துகிறேன்.

289
00:22:31,226 --> 00:22:32,311
நன்றி.

290
00:22:32,311 --> 00:22:35,731
ஆனால் ஏதாவது நடந்தால்?
அதாவது குழாய் கசிவு போல?

291
00:22:35,731 --> 00:22:37,232
இந்த எண்ணில் என்னை அழையுங்கள்.

292
00:22:38,233 --> 00:22:40,068
- உங்களை அழைப்பதா?
- ஆம், நன்றி.

293
00:22:40,777 --> 00:22:41,778
பரவாயில்லை.

294
00:22:52,456 --> 00:22:53,457
நல்ல இடம்.

295
00:22:56,752 --> 00:22:59,796
அவள் ஒரு சீகல், நிச்சயமாக.

296
00:23:06,303 --> 00:23:07,930
பெண்ணியம் ஆள்கிறது
தி ஜிப்பர் கிளப்

297
00:23:07,930 --> 00:23:10,140
{\an8}சனிக்கிழமை ஏப்ரல் 4
வெனில்லா வேசி

298
00:23:32,913 --> 00:23:36,166
நீ இங்கே என்ன செய்கிறாய்? யார் நீ?

299
00:23:36,166 --> 00:23:39,002
- அதே கேள்வியை நான் உன்னிடம் கேட்கலாம்.
- கென்னி!

300
00:23:40,963 --> 00:23:45,175
ஐயோ. பொறுமை, வேகமாக எடுக்கிறாய்.

301
00:23:45,175 --> 00:23:47,845
நான் உன்னிடம் ஒரு கேள்வி கேட்டேன். யார் நீ?

302
00:23:47,845 --> 00:23:49,096
என் பெயர் ஜான் ஷுகர்.

303
00:23:49,096 --> 00:23:51,890
நான் கலிபோர்னியா மாநிலத்திடம்
உரிமம் பெற்ற ஒரு தனியார் புலனாய்வாளர்.

304
00:23:51,890 --> 00:23:55,227
- என் பாக்கெட்டில் அடையாள அட்டை இருக்கிறது.
- ஹேய், கைகளை பாக்கெட்டுக்குள் விடாதே.

305
00:23:55,227 --> 00:23:56,311
சரி.

306
00:24:01,233 --> 00:24:02,776
மன்னிக்கவும்,
முதலில் உன்னை அடையாளம் தெரியவில்லை.

307
00:24:03,652 --> 00:24:04,736
நிச்சயமாக, டேவி சீகல்.

308
00:24:04,736 --> 00:24:05,821
டேவிட்.

309
00:24:06,780 --> 00:24:08,031
இனி அது டேவி இல்லை.

310
00:24:08,031 --> 00:24:09,741
நீ அதன் தொடர்ச்சியை
படமாக்கிவிட்டாய், இல்லையா?

311
00:24:09,741 --> 00:24:11,743
"தி பாய் இன் தி கார்னர்,"

312
00:24:11,743 --> 00:24:14,872
அதில் நீ அதே சிறுவனாக இருப்பாய்,
ஆனால் எல்லோரும் வளர்ந்திருப்பார்கள், அதுதானே?

313
00:24:14,872 --> 00:24:16,623
- ஆம்.
- அதற்கு வாழ்த்துக்கள்.

314
00:24:17,624 --> 00:24:20,210
உனக்கு ஆட்சேபனை இல்லையே?
துப்பாக்கிகள் என்னை பதற்றமடைய செய்யும்.

315
00:24:21,795 --> 00:24:22,796
நன்றி.

316
00:24:23,881 --> 00:24:25,257
நீ இங்கே என்ன செய்கிறாய்?

317
00:24:25,257 --> 00:24:26,633
உன் சகோதரி காணாமல் போனதைப் பற்றி விசாரிக்க

318
00:24:26,633 --> 00:24:28,594
உன் தாத்தாவால் வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கிறேன்.

319
00:24:28,594 --> 00:24:30,470
நீ அவரை அல்லது அவரது வழக்கறிஞர்
திரு. கின்ஸியை அழைத்தால்,

320
00:24:30,470 --> 00:24:33,724
- நான் சொன்னதை உறுதிப்படுத்துவார்கள்.
- அது பரவாயில்லை. நான் உன்னை நம்புகிறேன்.

321
00:24:33,724 --> 00:24:35,976
நல்லது. எனவே இப்போது நாம்
ஆரம்ப கேள்விக்கு வருவோம்.

322
00:24:37,811 --> 00:24:38,937
- என்ன?
- நம்... சரி,

323
00:24:38,937 --> 00:24:40,480
நான் ஏன் இங்கே இருக்கிறேன் என்று சொன்னேன்,

324
00:24:40,480 --> 00:24:42,649
ஆனால் நீ இங்கே என்ன செய்கிறாய் என்று
இன்னும் சொல்லவில்லை.

325
00:24:42,649 --> 00:24:45,068
- அப்பா என்னை இங்கே வரச் சொன்னார்.
- அப்படியா?

326
00:24:45,068 --> 00:24:47,863
ஒலிவியா திரும்பிவிட்டாளா என்று
பார்க்க நான் தினமும் இங்கே வருவேன்.

327
00:24:47,863 --> 00:24:50,157
- சாவி எங்கே கிடைத்தது?
- என் அப்பாவிடம் இருந்து.

328
00:24:51,283 --> 00:24:55,537
உன் சகோதரிக்கு ஜோனாதன் வாங்கிக் கொடுத்த
வீட்டுக்கான சாவி பெர்னியிடம் இருக்கிறதா?

329
00:24:55,537 --> 00:24:57,831
வேறு அம்மாவுக்கு பிறந்த சகோதரி. ஆனால், ஆம்.

330
00:24:57,831 --> 00:25:00,083
நீ ஏன் கதவு மணியை அழுத்தவில்லை
அல்லது கதவைத் தட்டவில்லை?

331
00:25:04,087 --> 00:25:06,423
- என்ன?
- ஒலிவியா இருக்கிறாளா எனப் பார்க்கிறாய், இல்லையா?

332
00:25:06,423 --> 00:25:09,968
அவள் இங்கே இருந்திருக்கலாம்,
ஆனால் அவள் இல்லை என்று நீ நினைக்கிறாய்.

333
00:25:09,968 --> 00:25:11,261
ஆம், அவள் மயங்கிக்கிடக்கலாம்.

334
00:25:11,845 --> 00:25:13,805
ஒலிவியாவைப் பற்றி உனக்கு
எவ்வளவு தெரியும் என்று தெரியவில்லை, ஆனால்,

335
00:25:14,473 --> 00:25:16,016
ஒரு முறை போதைக்கு அடிமையானவள்,
எப்போதும் அப்படித்தான்.

336
00:25:18,936 --> 00:25:21,980
- உனக்குப் பொய் சொல்ல தெரியவில்லை, டேவி.
- டேவிட்.

337
00:25:21,980 --> 00:25:23,398
ஒருவேளை மிக மோசமாக பொய் சொல்பவன்.

338
00:25:25,859 --> 00:25:27,027
சரி, ஒலிவியா இங்கே இல்லை.

339
00:25:27,027 --> 00:25:28,111
ஆம், தெரிந்துவிட்டது.

340
00:25:29,029 --> 00:25:31,573
எனவே நீ இங்கே இருக்க எந்த காரணமும் இல்லை,
இல்லையா?

341
00:25:37,079 --> 00:25:38,080
நல்ல சூட்.

342
00:25:38,080 --> 00:25:39,248
இனிய இரவு, கென்னி.

343
00:25:40,249 --> 00:25:41,625
ஒரு ரசிகனை சந்திப்பதில் எப்போதும் மகிழ்ச்சி.

344
00:25:43,460 --> 00:25:44,461
அந்த பொய் நன்றாக இருந்தது.

345
00:25:44,962 --> 00:25:46,672
சரி, அது சுவாரஸ்யமாக இருந்தது.

346
00:25:47,172 --> 00:25:48,215
பயந்தாங்கொள்ளி பையன்.

347
00:25:48,215 --> 00:25:49,675
{\an8}பரையா பற்றிய ஒரு பார்வை

348
00:25:49,675 --> 00:25:51,176
{\an8}வியக்கிறேன், எதற்கு பயப்படுகிறான்?

349
00:25:52,135 --> 00:25:53,136
யாரைப் பார்த்து பயப்படுகிறான்?

350
00:26:00,227 --> 00:26:01,395
ஒலிவியாவின் அம்மா.

351
00:26:01,979 --> 00:26:03,981
ஆம், எனக்கு
அடையாளம் தெரிகிறது என்று நினைக்கிறேன்.

352
00:26:03,981 --> 00:26:05,399
அதே கண்கள்.

353
00:26:06,900 --> 00:26:08,068
ரேச்சல் கே.

354
00:26:08,652 --> 00:26:10,112
அங்கேயும் அதே சோகம்.

355
00:26:40,184 --> 00:26:41,643
பொன்னிற முடி கொண்டவளை அடையாளம் தெரிகிறது.

356
00:26:41,643 --> 00:26:42,895
மெலனி மேத்யூஸ்.

357
00:26:42,895 --> 00:26:45,731
ஒலிவியாவின் சித்தியாகவும்
பெரிய பாடகியாகவும் இருந்தவள்.

358
00:26:45,731 --> 00:26:46,857
ஸ்டெப்-ஹை
1/18/23

359
00:26:46,857 --> 00:26:48,150
ஆனால் இது சமீபத்தியது.

360
00:26:53,071 --> 00:26:53,947
ஒருவேளை அவளுக்கு ஏதாவது தெரிந்திருக்கலாம்.

361
00:26:56,783 --> 00:26:58,076
ஸ்டெப்-ஹை லவுஞ்ச்.

362
00:26:59,036 --> 00:27:02,080
மெலனி வீட்டில் இல்லை, அதனால் படத்திலுள்ள
பாரில்தான் அடுத்து பார்க்க வேண்டும்.

363
00:27:04,208 --> 00:27:05,209
எனக்கு அந்த இடத்தைத் தெரியும்.

364
00:27:06,793 --> 00:27:08,795
காக்டெய்ல்கள்
ஸ்டெப் ஹை

365
00:27:21,266 --> 00:27:22,267
உன் பெயர் என்ன, நண்பா?

366
00:27:23,810 --> 00:27:26,271
- கார்ல்.
- கார்ல். ஜான்.

367
00:27:26,855 --> 00:27:29,191
உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி, கார்ல்.
இதனுடைய பெயர்?

368
00:27:29,900 --> 00:27:31,026
- வைலி.
- நான்...

369
00:27:31,818 --> 00:27:34,238
- ஆம்.
- ஹேய். ஹேய், வைலி.

370
00:27:36,073 --> 00:27:37,991
ஹேய், கார்ல், நீ எனக்கு ஒரு உதவி செய்வாயா?

371
00:27:38,492 --> 00:27:39,868
என் காரை பார்த்துக்கொள்ள முடியுமா?

372
00:27:39,868 --> 00:27:42,788
நான் உனக்கு இருநூறு டாலர்கள் தருகிறேன்.

373
00:27:43,330 --> 00:27:44,790
நீ எதுவும் செய்ய வேண்டியதில்லை. நீ...

374
00:27:48,627 --> 00:27:52,548
யாராவது அதைத் திருட முயற்சித்தால் அல்லது,
யாராவது அதை நெருங்கினால்,

375
00:27:52,548 --> 00:27:54,967
நீ செய்ய வேண்டியது எல்லாம்... இதோ ஒரு செல்ஃபோன்.

376
00:27:56,051 --> 00:27:57,678
நீ இந்த எண்ணில் என்னை அழை.

377
00:27:59,221 --> 00:28:00,556
நூறு டாலர்கள்.

378
00:28:00,556 --> 00:28:03,267
நான் திரும்பி வந்ததும் மீதிப் பாதியை தருகிறேன்.
சரியா?

379
00:28:03,767 --> 00:28:06,270
- ஆம். நல்ல யோசனை.
- சரி. அருமை.

380
00:28:08,188 --> 00:28:10,315
- ஹேய், வைலி.
- அவர் நட்பானவர்.

381
00:28:11,984 --> 00:28:13,235
நீ ஒரு நல்ல மனிதன், கார்ல்.

382
00:28:24,204 --> 00:28:26,206
நாங்கள் பொன்னிறத்தவர்கள்

383
00:28:27,624 --> 00:28:30,627
நான் இங்கே சாலையில் இருக்கிறேன்

384
00:28:30,627 --> 00:28:33,714
நான் இடம் மாறிக்கொண்டே
இருப்பவள் போல உணர்கிறேன்

385
00:28:35,382 --> 00:28:41,513
இரவின் நெடுஞ்சாலைகளில்
நான் தனியாகச் செல்கிறேன்

386
00:28:44,057 --> 00:28:46,518
முதலில், நான் அதை ஒரு
தற்செயல் நிகழ்வு என்று சொல்லப் போகிறேன்,

387
00:28:46,518 --> 00:28:48,812
ஒலிவியாவின் மர்மப் பெண்ணை
மிக எளிதாகக் கண்டுபிடித்தது.

388
00:28:48,812 --> 00:28:52,274
ஆனால் அவளை எப்போதும்
இங்கே பார்க்கலாம் என்று ஏதோ சொல்கிறது.

389
00:28:52,816 --> 00:28:54,943
- ஏதாவது வேண்டுமா?
- அவர் குடிப்பது.

390
00:28:55,569 --> 00:28:58,322
வில்லெட் டிஸ்டில்லரி ஒற்றை பீப்பாய் போர்பன், சார்.

391
00:28:58,322 --> 00:29:00,782
அது ஒரு ஷாட் 100 டாலர்கள்.

392
00:29:00,782 --> 00:29:03,035
எதுவும் கலக்காமல். தண்ணீர் தனியாக.
அவருடையதுக்கும் நான் பணம் கொடுக்கிறேன்.

393
00:29:03,035 --> 00:29:07,247
நீங்கள் இனிமையானவர், ஆனால் அவருக்கு மற்றவர்கள்
தனக்கு மது வாங்கிக்கொடுப்பது பிடிக்காது.

394
00:29:07,789 --> 00:29:08,874
நான் அதை மதிக்கிறேன்.

395
00:29:10,083 --> 00:29:11,084
நன்றி.

396
00:29:14,922 --> 00:29:16,173
இது மிகவும் நன்றாக இருக்கிறது.

397
00:29:18,050 --> 00:29:21,929
நான் வழக்கமாக ஸ்காட்ச் குடிப்பேன், ஆனால்
இது விஷயங்களை மாற்றலாம்.

398
00:29:22,471 --> 00:29:23,722
எப்போதாவது ரை குடித்திருக்கிறாயா?

399
00:29:25,015 --> 00:29:28,977
அந்த அழகான விஸ்கியின்
மிதமான சுவையில் இருக்கும் ரை.

400
00:29:28,977 --> 00:29:31,647
இல்லை. நான் வெஸ்டர்ன் வகை படங்களில்
கௌபாய்கள் அதை ஆர்டர் செய்வதைப் பார்த்திருக்கிறேன்.

401
00:29:31,647 --> 00:29:34,024
"பார் ஊழியனே, எனக்கு ஒரு ரை கொடு."

402
00:29:34,024 --> 00:29:35,776
ஆனால் நான் அதை முயற்சி செய்ய நினைத்ததில்லை.

403
00:29:45,869 --> 00:29:47,538
- மெலனி.
- ஜான்.

404
00:29:47,538 --> 00:29:49,039
ஹேய், மெலனி.

405
00:29:50,999 --> 00:29:52,000
நீ குடித்து போதையேற்றிக் கொள்ள வேண்டுமா?

406
00:29:54,211 --> 00:29:55,879
இந்தப் பெண்ணுக்கு
இன்னொன்று தேவை என்று நினைக்கிறேன்.

407
00:29:58,090 --> 00:30:02,386
நான் குடித்த அளவுக்கு நீயும் குடித்தாய், ஆனால்
எனக்கு போதையேறிவிட்டது, நீ தெளிவாக இருக்கிறாய்.

408
00:30:02,386 --> 00:30:06,723
ஆம், எனக்கு ஒரு வித்தியாசமான
செரிமானதன்மை இருக்கிறது.

409
00:30:07,224 --> 00:30:12,271
என் உடல், இயல்பை விட 50 மடங்கு
வேகமாக மதுவை செரிமானம் செய்யும்.

410
00:30:12,271 --> 00:30:15,774
அதாவது, என்னால் அதை, இதை, இந்த பாரில் இருக்கும்
எல்லா பானத்தையும் குடித்துவிட்டு,

411
00:30:16,358 --> 00:30:19,111
- தெளிவாக இருக்க முடியும்.
- அது விலை உயர்ந்ததாகத் தெரிகிறது.

412
00:30:19,111 --> 00:30:20,112
இருக்கலாம்.

413
00:30:22,364 --> 00:30:23,740
பிறகு ஏன் குடிக்கிறாய்?

414
00:30:25,367 --> 00:30:27,452
அதில் உள்ள காதல் எனக்குப்
பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

415
00:30:29,037 --> 00:30:30,372
ஆம்.

416
00:30:31,623 --> 00:30:33,125
திரைப்படங்களிலிருந்து அந்த எண்ணம் வந்திருக்கலாம்.

417
00:30:34,585 --> 00:30:35,586
எனக்கு திரைப்படங்களைப் பிடிக்கும்.

418
00:30:36,128 --> 00:30:37,254
எனக்கு ஸை-ஃபை பிடிக்கும்.

419
00:30:37,754 --> 00:30:38,964
ஸை-ஃபை பிடிக்குமா?

420
00:30:38,964 --> 00:30:41,300
ஏதாவது குறிப்பிட்ட படங்கள் இருக்கிறதா?

421
00:30:41,300 --> 00:30:44,303
ஏதாவது பரிந்துரைக்க விரும்பும் ஸை-ஃபை படம்...

422
00:30:44,303 --> 00:30:45,971
எத்தனை கேள்விகள்?

423
00:30:48,473 --> 00:30:50,517
பொறு. நான் இதைக் கண்டுபிடிக்க வேண்டும். சரி.

424
00:30:50,517 --> 00:30:54,104
நீ ஒரு திமிரானவனோ,
அருவருப்பானவனோ, ஒழுக்கமற்றவனோ இல்லை.

425
00:30:54,104 --> 00:30:55,731
- இல்லை. பெரும்பாலும்...
- எப்படித் தெரிந்தது? இப்பொழுதுதான் சந்தித்தோம்.

426
00:30:55,731 --> 00:30:58,358
பெரும்பாலான ஆண்கள் இந்த வகைகளுக்குள்
வந்துவிடுவார்கள். எனக்குத் தெரியும்.

427
00:30:58,358 --> 00:30:59,526
நீ இல்லை,

428
00:30:59,526 --> 00:31:04,907
ஆனால் வெளியே தெரிவதைவிட
இன்னும் நிறைய இருக்கிறது.

429
00:31:05,782 --> 00:31:10,412
உன்னிடம் ரகசியங்கள் இருக்கின்றன,
நீ விஷயங்களை மறைத்துவைத்திருக்கிறாய்.

430
00:31:10,913 --> 00:31:14,541
நம்பகமான சிலருடன் மட்டுமே நீ பகிரும் விஷயங்கள்.

431
00:31:14,541 --> 00:31:19,546
அந்த நம்பிக்கையைப் பெறுவது, அது எளிதல்ல.

432
00:31:19,546 --> 00:31:20,923
ஆஹா.

433
00:31:30,807 --> 00:31:32,351
என்னை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறாயா?

434
00:31:34,061 --> 00:31:35,103
பரவாயில்லை.

435
00:31:38,607 --> 00:31:40,609
ஹேய், கார்ல். நன்றி.

436
00:31:43,153 --> 00:31:45,614
என் பெயரை நினைவுவைத்திருப்பதற்கு நன்றி,
திரு. ஷுகர்.

437
00:31:45,614 --> 00:31:47,741
- ஜான்.
- ஜான்.

438
00:31:49,660 --> 00:31:51,453
சரி. எனக்கு ஒரு நொடி கொடு.

439
00:31:52,829 --> 00:31:53,914
நன்றி.

440
00:31:53,914 --> 00:31:55,958
வைலி, நன்றி.

441
00:31:55,958 --> 00:31:58,335
- இதற்கு உங்களை பிடித்திருக்கிறது.
- எனக்கும்தான்.

442
00:31:59,837 --> 00:32:02,548
சொன்னபடி. நன்றி, சார்.

443
00:32:03,215 --> 00:32:04,508
- நன்றி, சார்.
- ம்.

444
00:32:04,508 --> 00:32:05,592
திரு. ஷு... ஜான்.

445
00:32:05,592 --> 00:32:07,177
ஜான்.

446
00:32:07,761 --> 00:32:09,346
அருமை. இதோ உங்களுடைய...

447
00:32:09,346 --> 00:32:10,848
என்ன தெரியுமா? அதை வைத்துக்கொள்.

448
00:32:11,390 --> 00:32:14,726
சரி. இன்றிரவு நீயும் வைலியும் தூங்குவதற்கு
ஒரு கண்ணியமான இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்.

449
00:32:16,061 --> 00:32:16,895
அப்படியா?

450
00:32:17,479 --> 00:32:19,231
- ஆம்.
- சரி.

451
00:32:19,231 --> 00:32:20,399
உனக்கு குடும்பம் இருக்கிறதா, கார்ல்?

452
00:32:23,485 --> 00:32:26,113
எனக்கு மில்வாக்கியில் ஒரு சகோதரி இருக்கிறாள்.

453
00:32:26,613 --> 00:32:29,366
- ம். அவர் பெயர் என்ன?
- சோஃபி.

454
00:32:29,366 --> 00:32:30,951
- சோஃபியா?
- ஆம்.

455
00:32:30,951 --> 00:32:33,996
சோஃபி. உனக்கு என்ன நடக்கிறது என்று
அவருக்குத் தெரியுமா?

456
00:32:39,626 --> 00:32:43,338
அவள்... சரி...

457
00:32:43,338 --> 00:32:46,425
கார்ல், நீ அந்த ஃபோனை பயன்படுத்தி
இன்றிரவு சோஃபியை அழைக்க வேண்டும்.

458
00:32:47,176 --> 00:32:49,136
அவரை அழைத்து நீ தங்க முடியுமா என்று கேள்.

459
00:32:49,136 --> 00:32:53,515
சரியா? என்ன நடந்தது என்று அவரிடம் சொல்.
தற்பெருமை குறுக்கே வரவிடாதே.

460
00:32:54,224 --> 00:32:55,517
நீ தெருவில் வசிப்பதால்,

461
00:32:55,517 --> 00:32:57,603
மற்ற எங்களைவிட அது உன்னை குறைந்தவனாக்கிவிடாது.

462
00:32:57,603 --> 00:32:59,396
உனக்கு நடந்தது யாருக்கும் நடக்கலாம்.

463
00:33:00,814 --> 00:33:02,524
உன்னால் அது முடியுமா?
இன்றிரவு சோஃபியை அழைப்பாயா?

464
00:33:04,026 --> 00:33:05,152
- ம்.
- ஆம்.

465
00:33:05,944 --> 00:33:07,029
நீ அவரை இன்றிரவு அழை.

466
00:33:07,529 --> 00:33:10,741
நாளை என்னை அழை. நான் உனக்கு
மில்வாக்கிக்கு டிக்கெட் வாங்கித் தருகிறேன், சரியா?

467
00:33:12,701 --> 00:33:15,537
- எனக்கு வைலி இருக்கிறது...
- நாம் இதை ஒரு சேவை நாயாக மாற்றுவோம்.

468
00:33:16,163 --> 00:33:20,375
ஒரு பிரச்சினையும் இல்லை. அதற்கும் டிக்கெட் வாங்கித்
தருகிறேன். சத்தியமாக. ஒப்புக்கொள்கிறாயா?

469
00:33:24,046 --> 00:33:25,923
சரி. சரி, சரி.

470
00:33:25,923 --> 00:33:27,925
- ஹேய்.
- ஹேய், பரவாயில்லை. இங்கே வா.

471
00:33:28,592 --> 00:33:30,219
- இங்கே வா.
- வா. நீ நன்றாக இருக்கிறாய்.

472
00:33:30,219 --> 00:33:32,095
- நாம் மில்வாக்கிக்குச் செல்கிறோம்.
- ஆம், வீட்டிற்குச் செல்கிறீர்கள்.

473
00:33:32,888 --> 00:33:34,056
நாளை பேசுவோமா?

474
00:33:34,056 --> 00:33:35,933
- நாளை உங்களை அழைக்கிறேன், சார்.
- சரி. சரி.

475
00:33:36,683 --> 00:33:38,852
ஹேய், நன்றி.

476
00:33:43,232 --> 00:33:44,233
மன்னித்துவிடு.

477
00:33:45,150 --> 00:33:46,693
அவனுக்கு உன்னைப்
பிடித்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

478
00:33:47,736 --> 00:33:48,737
அவன் உன்னை இனிமையானவன் என்றான்.

479
00:33:50,280 --> 00:33:51,281
இல்லை, அதுதான் என் பெயர்.

480
00:33:51,865 --> 00:33:53,158
உன் பெயர் ஜான் ஷுகரா?

481
00:33:53,909 --> 00:33:55,744
ஆம், ஜான் ஷுகர்.

482
00:33:56,870 --> 00:33:58,997
சரி. நான் அதை மறக்க மாட்டேன்.

483
00:34:03,669 --> 00:34:05,462
உன் பிறந்த நாள் எப்போது, ஜான் ஷுகர்?

484
00:34:06,255 --> 00:34:07,422
செப்டம்பர் 2.

485
00:34:07,422 --> 00:34:09,466
கன்னி ராசி? எனக்குத் தெரியும்.

486
00:34:09,466 --> 00:34:12,427
எனக்கு கன்னி ராசிக்காரர்களை பிடிக்கும்.
நேர்மையான, விசுவாசமான, கனிவானவர்கள்.

487
00:34:12,427 --> 00:34:15,472
உன்னைப் போன்ற ஒருவரை நீ சந்திக்கும்போது,
அது உனக்குத் தெரியும்.

488
00:34:15,472 --> 00:34:17,599
- நீ நேர்மையானவன்.
- அப்படியா?

489
00:34:18,475 --> 00:34:19,560
எனக்குத் தெரியும்.

490
00:34:19,560 --> 00:34:22,603
ஆனால், மனதின் ஆழத்தில், நீ தனிமையில் இருக்கிறாய்.

491
00:34:25,274 --> 00:34:30,152
உனக்கு மனைவியோ குழந்தைகளோ வீடோ இல்லை.

492
00:34:30,821 --> 00:34:32,906
நீ தனியாக இருக்க முடிவு செய்திருக்கிறாய்.

493
00:34:36,534 --> 00:34:38,786
ஆனால் உனக்கு நம்பிக்கை இருக்கிறது, ஜான் ஷுகர்.

494
00:34:40,539 --> 00:34:41,540
அப்படியா?

495
00:34:52,634 --> 00:34:54,261
- என் வீடு.
- ம்.

496
00:34:54,803 --> 00:34:56,304
நான் எங்கே வசிக்கிறேன் என்று சொல்லவில்லை.

497
00:34:56,304 --> 00:34:58,807
- ஆம், சொன்னாய். பாரில்.
- நான் சொன்னேனா?

498
00:35:07,482 --> 00:35:08,650
குட் நைட்.

499
00:35:08,650 --> 00:35:12,988
உள்ளே வந்து என்னை கற்பழிக்கவோ கொல்லவோ யாரும்
காத்திருக்கவில்லை என்பதை உறுதி செய்வாயா?

500
00:35:12,988 --> 00:35:14,072
சரி.

501
00:35:27,920 --> 00:35:29,213
யாருமில்லை. உனக்கு ஆபத்தில்லை.

502
00:35:29,963 --> 00:35:32,674
ரை பாட்டில் ஒன்றைக் கண்டுபிடித்தேன்.
கிளம்புவதற்கு முன் ஒரு கிளாஸ் எப்படி?

503
00:35:33,675 --> 00:35:34,676
பரபரப்பான நாள்.

504
00:35:35,886 --> 00:35:39,556
அட. உனக்கு போதையேறாது.
இது ஒரு விஷயமில்லை, இல்லையா?

505
00:35:42,184 --> 00:35:44,019
போலீஸ் உன்னை நிறுத்தினால்?

506
00:35:46,355 --> 00:35:49,816
அந்த மது எல்லாம் இன்னும் உன்
இரத்தத்தில் இருக்கிறது, இல்லையா?

507
00:35:51,318 --> 00:35:53,111
எனக்கு ஒன்றுமாகாது.

508
00:35:55,072 --> 00:35:57,324
நீ முன்னெச்சரிக்கையோடு
இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

509
00:35:58,534 --> 00:36:00,327
இன்றிரவு நீ இங்கே தங்கு.

510
00:36:01,495 --> 00:36:02,538
இன்றிரவு அல்ல, மெலனி.

511
00:36:02,538 --> 00:36:03,997
நீ ஒரு நல்ல முத்தமிடுபவன் என்று
உறுதியாகச் சொல்வேன்.

512
00:36:06,542 --> 00:36:07,876
இன்றிரவு இல்லை, மெலனி.

513
00:36:07,876 --> 00:36:09,336
ஏன் கூடாது?

514
00:36:09,336 --> 00:36:11,213
ஏனென்றால் நீ போதையில் இருக்கிறாய், நான் இல்லை.

515
00:36:11,713 --> 00:36:13,131
ஆனால் நீ தங்க வேண்டும்.

516
00:36:15,676 --> 00:36:17,594
கன்னி ராசி ஆண்களைப் பற்றி
இன்னொரு விஷயம் இருக்கிறது.

517
00:36:18,720 --> 00:36:23,267
அவர்கள் ரிஷப ராசி பெண்களுடன் மிகவும் இணக்கமாக
இருப்பார்கள், குறிப்பாக உடலுறவு விஷயத்தில்.

518
00:36:25,269 --> 00:36:26,520
எனக்கு ரிஷப ராசி.

519
00:36:27,855 --> 00:36:32,025
எனக்கு ரிஷப ராசி.

520
00:36:41,743 --> 00:36:43,245
நீ போதையில் இருக்கிறாய். நான் இல்லை.

521
00:36:45,706 --> 00:36:46,790
நல்லது, அப்படியே இரு.

522
00:36:48,625 --> 00:36:50,002
என் தவறு.

523
00:36:50,002 --> 00:36:51,753
எவ்வளவு விஸ்கி குடித்தோம் என்பதை
கணக்குவைக்கவில்லை.

524
00:36:53,380 --> 00:36:55,507
இன்றிரவு மெலனியிடம் இருந்து
அதிகம் தெரிந்துகொள்ளப் போவதில்லை.

525
00:36:59,845 --> 00:37:02,306
அவள் நீச்சல் குளம் கொண்ட
வேடிக்கையான ரிஷப ராசிக்காரி என்பதைத் தவிர.

526
00:37:03,682 --> 00:37:04,892
அதோடு தனிமையில் இருக்கிறாள்.

527
00:37:06,518 --> 00:37:07,519
எனக்கு அவளைப் பிடித்திருக்கிறது.

528
00:37:10,439 --> 00:37:13,358
ஆனால், ஆம், பதில்கள் காத்திருக்க வேண்டும்.

529
00:37:16,028 --> 00:37:17,613
உனக்கு திருப்பதியான ஒன்று காத்திருக்கிறது.

530
00:37:25,871 --> 00:37:26,872
குட் நைட், மெலனி.

531
00:37:50,229 --> 00:37:53,148
நீ என்னைப் பின்தொடர்வதை நிறுத்த வேண்டும்,
கென்னி, சரியா? நீ மோசமான உளவு பார்ப்பவன்.

532
00:37:53,148 --> 00:37:56,401
ஒரு மைல் தூரத்திலேயே உன்னைக்
கண்டுபிடித்துவிடுகிறேன். பத்து மைல் தூரத்திலேயே.

533
00:37:56,401 --> 00:37:59,780
நான் டெல் கோரஸோனில் தங்கியிருக்கிறேன்.

534
00:38:00,656 --> 00:38:02,658
டேவியிடம் நீ சொல்ல வேண்டியது அவ்வளவுதான்.

535
00:38:03,492 --> 00:38:07,204
அது உண்மையென்று தெரிந்ததும், நீ நன்றாக
வேலையைச் செய்துவிட்டதாக அவன் நினைப்பான்.

536
00:38:07,204 --> 00:38:08,288
இதை வாங்கிக்கொள்.

537
00:38:10,916 --> 00:38:12,417
இப்போது, கிளம்பு.

538
00:38:15,796 --> 00:38:19,383
அவன் ஏன் என்னைப் பின்தொடர
சொல்லியிருப்பான்? நான் என்ன செய்தேன்?

539
00:38:23,387 --> 00:38:24,638
நான் நல்லவர்களில் ஒருவன்.

540
00:38:26,014 --> 00:38:29,268
நேர்மையாகச் சொல்வதென்றால், இங்கே நல்லதும்
கெட்டதும் பார்ப்பவரின் கண்ணோட்டத்தைப் பொருத்தது.

541
00:38:30,561 --> 00:38:33,063
டேவி சீகல் என்னை உயர்வாகக் கருதுவதாக
நான் நினைக்கவில்லை.

542
00:38:35,691 --> 00:38:39,111
லாஸ் ஏஞ்சலஸ் ஒரு தூங்கா நகரம் என்று மக்கள்
நினைக்கிறார்கள், ஆனால் அது உண்மையில் இல்லை.

543
00:38:40,195 --> 00:38:41,196
நள்ளிரவுக்குப் பிறகு,

544
00:38:41,947 --> 00:38:45,868
ஹாலிவுட்டில் இருக்கும் கிளப்புக்குச் செல்லும்
இளைஞர்கள் அல்லது அதிகம் குடிப்பவர்கள் தவிர,

545
00:38:45,868 --> 00:38:47,202
எல்லோரும் படுக்கையில் இருப்பார்கள்.

546
00:38:47,995 --> 00:38:49,538
யாரும் பார்க்கமாட்டார்கள்.

547
00:38:50,831 --> 00:38:52,958
நீங்கள் விரும்பியபடி வரலாம், போகலாம்.

548
00:38:52,958 --> 00:38:54,209
பொருந்திப்போவது உறுதி செய்யப்பட்டது

549
00:39:08,974 --> 00:39:10,767
சில சமயங்களில் ஒருவர்
எங்கே இருந்தார் என்பதுதான்

550
00:39:10,767 --> 00:39:12,769
எங்கு சென்றார் என்பதைக் கண்டுபிடிக்க சிறந்த வழி.

551
00:39:44,551 --> 00:39:45,552
இவன் யார்?

552
00:39:47,262 --> 00:39:48,639
வலிமையானவன் போல தெரிகிறது.

553
00:39:49,431 --> 00:39:52,017
பைக்கர். ரவுடி கும்பலின் ஒருவன். ஏதோ.

554
00:39:52,017 --> 00:39:53,769
ஸ்கேன் செய்ய தயார்

555
00:39:53,769 --> 00:39:55,354
ஸ்கேன் செய்கிறது...

556
00:39:55,354 --> 00:39:57,814
இது மோசமாக இருந்திருக்கலாம்.
ஒலிவியாவாக இருந்திருக்கலாம்.

557
00:39:57,814 --> 00:39:58,941
ஸ்கேன் சேமிக்கப்பட்டது

558
00:39:58,941 --> 00:40:01,485
ஆம், ஆனால் நான் இதை
கண்டுபிடிக்க வேண்டும், மிகவிரைவாக

559
00:40:02,194 --> 00:40:04,821
அல்லது நான் கண்டுபிடிக்கும் அடுத்த உடல்
அவளுடையதாக இருக்கும் என்று ஏதோ சொல்கிறது.

560
00:40:09,326 --> 00:40:13,580
இது வேடிக்கையானது, நீண்ட காலத்திற்குப் பிறகு,
நான் கிட்டத்தட்ட அதற்கு பழகிவிட்டேன்.

561
00:40:14,957 --> 00:40:15,999
கிட்டத்தட்ட.

562
00:40:27,177 --> 00:40:28,637
இந்த வன்முறைகள் எல்லாம்.

563
00:40:31,223 --> 00:40:33,433
இவ்வளவு காலம் இதைச் செய்வதால்,
அதை எதிர்பார்க்கும் அளவிற்கு பக்குவப்பட்டுவிட்டேன்.

564
00:40:39,690 --> 00:40:40,858
ஹோட்டல் டெல் கோரஸோன்

565
00:40:40,858 --> 00:40:42,860
உலகத்தைப் பற்றி
அது என்ன சொல்கிறது என்று தெரியும்,

566
00:40:44,194 --> 00:40:46,321
- ஆனால் என்னைப் பற்றி என்ன சொல்லும்.
- மாலை வணக்கம், சார்.

567
00:40:47,531 --> 00:40:50,242
திரு. ஷுகர். உங்களை மீண்டும்
சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி, சார்.

568
00:40:50,242 --> 00:40:51,827
நன்றி, கிளிண்டன்.
திரும்பி வந்தது நன்றாக இருக்கிறது.

569
00:40:51,827 --> 00:40:54,788
உங்கள் பங்களா காத்திருக்கிறது,
எல்லாம் நீங்கள் விரும்பியபடியே இருக்கிறது.

570
00:40:54,788 --> 00:40:56,874
- நீங்கள் பசியோடு இருக்கிறீர்களா?
- ஓ, மிகவும்.

571
00:40:56,874 --> 00:41:00,043
சமையல்காரருக்குத் தெரியப்படுத்துகிறேன்.
விசேஷமான ஒன்றைச் செய்வார் என்று நம்புகிறேன்.

572
00:41:00,043 --> 00:41:02,296
என் மனதை படித்து விடுகிறாய்.
கிளிண்டன், மறந்துவிட்டேன்.

573
00:41:02,296 --> 00:41:03,922
என் காரின் டிக்கியில் ஒரு சூட்கேஸ் இருக்கிறது.

574
00:41:04,464 --> 00:41:05,674
நான் பார்த்துக் கொள்கிறேன்.

575
00:42:01,355 --> 00:42:02,356
நன்றி.

576
00:42:06,026 --> 00:42:07,027
மாலை வணக்கம்.

577
00:42:25,796 --> 00:42:26,964
கன்சூயெலோ.

578
00:42:26,964 --> 00:42:29,341
மாலை வணக்கம், திரு. ஷுகர். நான் உள்ளே வரலாமா?

579
00:42:29,341 --> 00:42:32,636
ஆம், தயவுசெய்து.
உன்னைப் பார்ப்பது மிகவும் அருமையாக இருக்கிறது.

580
00:42:35,222 --> 00:42:38,642
- ஹோர்கேவும் குழந்தைகளும் எப்படி இருக்கிறார்கள்?
- எல்லோரும் நலமாக இருக்கிறார்கள், சார், நன்றி.

581
00:42:38,642 --> 00:42:41,436
- நல்லது.
- கிட்டத்தட்ட மறந்துவிட்டேன்.

582
00:42:41,436 --> 00:42:43,730
கொஞ்ச நேரத்திற்கு முன்பு உங்களுக்காக இது வந்தது.

583
00:42:44,982 --> 00:42:47,192
- குட் நைட்.
- குட் நைட்.

584
00:42:50,487 --> 00:42:52,030
ஜான் ஷுகர்

585
00:42:59,913 --> 00:43:01,582
{\an8}காஸ்மோபாலிட்டன்
பாலிகிளாட் சங்கம்

586
00:43:01,582 --> 00:43:03,083
{\an8}ஒரு விருந்து.

587
00:43:04,001 --> 00:43:05,127
{\an8}ஒரு விருந்து.

588
00:43:08,130 --> 00:43:10,174
எல்லோரையும் பார்ப்பது
நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

589
00:43:12,634 --> 00:43:17,264
"அவர்களைப் பார்ப்பது மிகவும் நன்றாக இருந்தால்,
ஏன் அடிக்கடி அவர்களைத் தவிர்க்கிறாய்?"

590
00:43:17,973 --> 00:43:19,474
என்பதுதான் ஒருவர் கேட்கக் கூடிய கேள்வி.

591
00:43:23,478 --> 00:43:25,856
நான் வேலையில் பிஸியாக இல்லாவிட்டால்,
அதற்குப் பதிலளிப்பேன்.

592
00:43:26,648 --> 00:43:29,276
ரேச்சல் கே: "பரையா திரைப்படம்
எனக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது"

593
00:43:31,945 --> 00:43:32,779
ரேச்சல் கே பரையா

594
00:43:37,201 --> 00:43:39,786
நான் அவனை அடிக்க முயன்றேன்,
ஆனால் அவன் என்னை கீழே தள்ளினான்.

595
00:43:39,786 --> 00:43:40,996
அவன் மிகவும் பலமானவனாக இருந்தான்.

596
00:43:42,039 --> 00:43:43,540
மிகவும் பலமானவனாக.

597
00:43:43,540 --> 00:43:45,542
பரையா

598
00:43:45,542 --> 00:43:47,544
அவன் என்னை முத்தமிட முயன்றபோது,
அவனைக் கடிக்க முயன்றேன்.

599
00:43:48,337 --> 00:43:50,172
அப்போதுதான் அவன் என் கழுத்தை நெறித்துக்கொண்டே,

600
00:43:50,964 --> 00:43:52,758
"எனக்கு வேண்டியதைப் பெறப் போகிறேன்" என்றான்.

601
00:43:52,758 --> 00:43:53,926
அவள் ஒரு நல்ல நடிகை.

602
00:43:55,135 --> 00:43:57,804
நான் அங்கேயே
கிடந்து, அவன் ஜாலியாக இருக்க அனுமதித்தேன்.

603
00:43:58,847 --> 00:44:02,684
நான் என்ன செய்வேன்?
வொண்டர் வுமனாக மாறவா?

604
00:44:02,684 --> 00:44:04,436
இருந்தாலும் சுவாரஸ்யமான கதை தேர்வு.

605
00:44:04,436 --> 00:44:07,731
என்னால் முடியவில்லை. நான் செய்யவில்லை.

606
00:44:08,273 --> 00:44:09,483
வலிமையான பெண்.

607
00:44:09,983 --> 00:44:11,610
ரேச்சல் கேயின் மரணம்

608
00:44:17,157 --> 00:44:19,993
நடிகை ரேச்சல் கே
கார் விபத்தில் மரணமடைந்தார்

609
00:44:26,083 --> 00:44:27,376
கொடிய கார் விபத்து

610
00:44:27,376 --> 00:44:28,377
மகள், ஒலிவியா.

611
00:44:30,295 --> 00:44:31,922
ஒலிவியா சீகல்

612
00:44:32,923 --> 00:44:34,591
ஒலிவியா சீகல்
நடிகை

613
00:44:38,136 --> 00:44:40,264
நான் அவனை அடிக்க முயன்றேன்,
ஆனால் அவன் என்னைக் கீழே தள்ளினான்.

614
00:44:40,264 --> 00:44:41,890
அவன் மிகவும் பலமானவனாக இருந்தான்.

615
00:44:43,100 --> 00:44:45,602
அவன் என்னை முத்தமிட முயன்றபோது,
அவனைக் கடிக்க முயன்றேன்.

616
00:44:47,521 --> 00:44:50,232
அப்போதுதான் அவன் என் கழுத்தை நெறித்துக்கொண்டே,

617
00:44:50,232 --> 00:44:53,819
"எனக்கு வேண்டியதைப் பெறப் போகிறேன்" என்றான்.

618
00:44:53,819 --> 00:44:56,154
அவளுடைய அம்மா செய்ததையே செய்கிறாள்.

619
00:44:56,154 --> 00:45:00,033
இரண்டு வலிமையான பெண்கள் எதிர்த்து
சண்டையிடுகிறார்கள் அல்லது முயற்சி செய்கிறார்கள்.

620
00:45:00,033 --> 00:45:01,785
எனவே நான் என்ன செய்வேன்?

621
00:45:01,785 --> 00:45:02,995
இது என்ன?

622
00:45:04,454 --> 00:45:09,835
வொண்டர் வுமனாக மாறவா?
என்னால் முடியவில்லை. நான் செய்யவில்லை.

623
00:45:12,546 --> 00:45:14,464
- ரேச்சல்.
- நான் அங்கேயே கிடந்து...

624
00:45:15,132 --> 00:45:16,216
இவற்றை எடுத்தது யார்?

625
00:45:16,216 --> 00:45:19,845
...அவன் ஜாலியாக இருக்க அனுமதித்தேன்.

626
00:45:21,555 --> 00:45:24,766
- எனவே எனக்கு அது தேவைப்பட்டிருக்கலாம்.
- ஒலிவியாவிடம் ஏன் படங்கள் இருக்கின்றன.

627
00:45:24,766 --> 00:45:26,310
அதைத்தான் என்னிடம் சொல்கிறாயா?

628
00:45:28,812 --> 00:45:30,063
பொறு.

629
00:45:31,899 --> 00:45:33,317
நான் ஒருவேளை...

630
00:45:34,526 --> 00:45:35,611
பொறு.

631
00:45:35,611 --> 00:45:38,989
நான் படுத்துக்கொள்வது நல்லது.

632
00:46:49,768 --> 00:46:51,228
நான் செய்ய வேண்டும்.

633
00:47:03,991 --> 00:47:05,367
நான்...

634
00:47:15,460 --> 00:47:17,045
ஒலிவியாவைக் கண்டுபிடிக்க வேண்டும்.

635
00:47:22,551 --> 00:47:24,136
நான் கண்டுபிடிக்க வேண்டும்.

636
00:47:29,975 --> 00:47:31,268
நான் கண்டுபிடிக்க வேண்டும்.

637
00:47:37,274 --> 00:47:38,817
நான் கண்டுபிடிக்க வேண்டும்.

638
00:48:45,050 --> 00:48:47,052
வசனத் தமிழாக்கம் அருண்குமார்

