1
00:01:12,781 --> 00:01:14,366
தொடக்கம் கடினமான ஒன்றாக இருந்தது.

2
00:01:15,993 --> 00:01:16,994
அது நடக்கும்.

3
00:01:19,496 --> 00:01:20,664
இது போன்ற வழக்குகளில்.

4
00:01:23,750 --> 00:01:25,127
பணக்காரப் பெண் காணாமல் போவது.

5
00:01:25,127 --> 00:01:26,587
டிக்கியில் இறந்தவனின் சடலம் இருப்பது.

6
00:01:33,260 --> 00:01:35,971
பிறகு நான், என்னுடைய எல்லா...
எனக்குத் தெரியவில்லை...

7
00:01:36,555 --> 00:01:37,556
பிரச்சினைகள்.

8
00:01:41,185 --> 00:01:42,186
நான் தன்னடக்கமாக பேசவில்லை.

9
00:01:42,811 --> 00:01:44,646
என் வேலையில் நான் மிகவும் திறமையானவன்.

10
00:01:44,646 --> 00:01:47,566
அப்படி இல்லையென்றால் ஜோனாதன் சீகல்
போன்ற ஒருவர் என்னை அழைத்திருக்க மாட்டார்.

11
00:01:48,567 --> 00:01:50,944
எனக்கு எல்லாம் பழக கொஞ்ச நேரம் தேவைப்பட்டது.

12
00:01:51,862 --> 00:01:54,948
எப்படியிருந்தாலும், வேலைக்குத் திரும்புவோம்.

13
00:02:19,181 --> 00:02:20,724
பெர்னி சீகல்,

14
00:02:21,391 --> 00:02:24,353
ஒலிவியாவின் அப்பா,
மறைந்த ரேச்சல் கேயின் முன்னாள் கணவன்.

15
00:02:24,937 --> 00:02:28,106
அதோடு திரைப்பட தயாரிப்பாளரும், அவனுடைய
அப்பா அளவுக்கு திறமை இல்லாவிட்டாலும்கூட.

16
00:02:28,106 --> 00:02:31,527
தயவுசெய்து, என்னை பெர்னி என்று அழையுங்கள்.
ஹேய், எனக்கு இந்த இடம் பிடிக்கும்.

17
00:02:31,527 --> 00:02:34,196
அவனுடைய கடைசி வெற்றிபெற்ற படம்
சர்ஃபிங் செய்யும் குரங்கு பற்றியது.

18
00:02:34,196 --> 00:02:35,531
இது உயர்தரமானது.

19
00:02:35,531 --> 00:02:37,407
நான் நகரத்தில் இருக்கும்போது
வேறு எங்கும் தங்க மாட்டேன்.

20
00:02:37,407 --> 00:02:40,077
ஆம், நுணுக்கமான ரசனை கொண்டவர்.
நான் அதை பாராட்டுகிறேன்.

21
00:02:40,077 --> 00:02:41,745
சரி. என்ன சாப்பிடுகிறீர்கள்?

22
00:02:41,745 --> 00:02:44,039
இரண்டு ஒயிட் டோஸ்ட். கொஞ்சம் சீஸ்.

23
00:02:44,039 --> 00:02:46,917
- எலுமிச்சையுடன் சூடான நீர்.
- வெறும் காபி. பால் இல்லாமல்.

24
00:02:46,917 --> 00:02:49,127
உண்மையில் பன்றி இறைச்சியும் முட்டைகளும் வேண்டும்,

25
00:02:49,127 --> 00:02:50,921
ஆனால் சாதாரண உணவு
கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கிறேன்.

26
00:02:51,672 --> 00:02:53,841
எப்படியிருந்தாலும், உங்களுக்கு என்ன வேண்டும்?

27
00:02:54,383 --> 00:02:55,843
ஒலிவியாவைப் பற்றி பேச விரும்புகிறேன்.

28
00:02:56,426 --> 00:02:59,096
ஆம். நான் சொல்ல வேண்டும், ஷுகர்.

29
00:02:59,096 --> 00:03:02,099
நீங்கள் உங்கள் நேரத்தையும்
என் அப்பாவின் பணத்தையும் வீணடிக்கிறீர்கள்.

30
00:03:02,599 --> 00:03:07,104
ஒலிவியா எப்போது வேண்டுமானாலும்
திரும்பி வருவாள். அவள் எப்போதும் செய்வது போலவே.

31
00:03:07,104 --> 00:03:08,814
மீண்டும் மறுவாழ்வு மையத்துக்கு செல்லத் தயாராக.

32
00:03:09,940 --> 00:03:11,900
நான் அவளுடைய அப்பாவாக இருந்தால்,
அது எனக்கு வருத்தம் தரும்.

33
00:03:11,900 --> 00:03:13,151
நீங்கள் இல்லை, நானும் இல்லை.

34
00:03:13,735 --> 00:03:15,320
உங்கள் அப்பா கவலைப்படுகிறார்.

35
00:03:15,320 --> 00:03:16,655
இதோ.

36
00:03:18,323 --> 00:03:19,408
உங்களுக்கு ஒன்று சொல்கிறேன்.

37
00:03:19,908 --> 00:03:24,162
ஒலிவியாவை யாரையும் விட எனக்கு
நன்றாகத் தெரியும். நிச்சயமாக என் அப்பாவைவிட.

38
00:03:25,789 --> 00:03:29,293
அதோடு மெலனியை விட அவளைப் பற்றி நன்றாக
தெரியும். அதை நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

39
00:03:29,293 --> 00:03:31,503
நேற்றிரவு நீங்கள் அவளுடன்
ஜாலியாக இருந்தீர்கள், இல்லையா?

40
00:03:32,504 --> 00:03:35,716
அதில் எனக்குக் கொஞ்சம் வருத்தம்தான். நான் சொல்ல
வேண்டும். அதாவது, அவள் என் முன்னாள் மனைவி.

41
00:03:36,550 --> 00:03:39,303
அது உங்களுக்குத் தெரியாதா,
திரு. தனியார் புலனாய்வாளரே?

42
00:03:39,303 --> 00:03:42,556
{\an8}நீங்களும் மெலனி மேத்யூஸும் நெவாடாவின்
லாஸ் வேகாஸில் திருமணம் செய்துகொண்டீர்கள்,

43
00:03:42,556 --> 00:03:43,891
1999 புத்தாண்டுக்கு முந்தைய நாள்.

44
00:03:43,891 --> 00:03:46,476
மூன்று நாட்களுக்குப் பிறகு நீங்கள் இருவரும்
பொது சொத்தை சேதம் செய்ததற்காகவும், போதைப்பொருள்

45
00:03:46,476 --> 00:03:48,353
வைத்திருந்ததற்காகவும், குடித்துவிட்டு ஒழுங்கற்ற
நடத்தைக்காகவும், துப்பாக்கியை காட்டியதற்காகவும்

46
00:03:48,353 --> 00:03:50,063
கைது செய்யப்பட்டீர்கள்.

47
00:03:51,982 --> 00:03:53,358
அது ஒரு பிரமாதமான தேனிலவு.

48
00:03:57,154 --> 00:03:58,822
தயவுசெய்து. கவனமாக.

49
00:04:02,993 --> 00:04:04,119
இது எங்கே கிடைத்தது?

50
00:04:05,787 --> 00:04:09,166
அந்த வகை போலராய்டு படம்
1996-இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

51
00:04:11,001 --> 00:04:13,253
அப்போது உங்களுக்கு ரேச்சல் கேவுடன்
திருமணமாகியிருந்தது, இல்லையா?

52
00:04:15,339 --> 00:04:16,339
அது உங்களுக்கே தெரியும்.

53
00:04:17,966 --> 00:04:19,468
நீங்கள் அந்த புகைப்படத்தை எடுத்தீர்களா?

54
00:04:24,389 --> 00:04:25,390
இல்லை, நான் எடுக்கவில்லை.

55
00:04:26,099 --> 00:04:29,186
உண்மையைச் சொன்னதற்கு நன்றி, பெர்னி.
அதை பாராட்டுகிறேன்.

56
00:04:34,900 --> 00:04:38,487
நீங்கள் எப்போதாவது யாரையாவது
காதலித்திருக்கிறீர்களா? அதாவது, மனப்பூர்வமாக?

57
00:04:39,071 --> 00:04:40,822
எமன் உங்களிடம் வந்து,

58
00:04:40,822 --> 00:04:43,116
"நீ உன் உயிரைக் கொடுக்காவிட்டால்,

59
00:04:43,116 --> 00:04:46,411
நீ காதலிக்கும் நபரின் உயிரைப் பறிக்கப் போகிறேன்"
என்று சொல்லும் அளவுக்கு.

60
00:04:49,248 --> 00:04:52,042
நான் என் உயிரைக் கொடுத்திருப்பேன். ரேச்சலுக்காக.

61
00:04:54,920 --> 00:04:56,797
அவளுடைய நினைவாக எஞ்சியிருப்பது ஒலிவியாதான்.

62
00:04:58,298 --> 00:05:02,511
நான் என் மகளைப் பற்றி கவலைப்படவில்லை
என்று நீ நினைத்தால், தொலைந்துபோ,

63
00:05:03,262 --> 00:05:05,264
பிறகு நாசமாய்போ, தொலைந்துபோ.

64
00:05:05,264 --> 00:05:08,517
உன் காபிக்கும் நானே பணம் செலுத்துகிறேன்.

65
00:05:09,226 --> 00:05:10,227
நன்றி.

66
00:05:13,772 --> 00:05:17,067
அவன் எதையோ மறைக்கிறான்.
அல்லது குறைந்தபட்சம் கோபப்படுத்திவிட்டேன்.

67
00:05:18,735 --> 00:05:21,947
அதாவது, தொலைந்துபோ என்று சொல்வது
பொதுவாக முன்னேற்றத்தின் அறிகுறி.

68
00:05:52,394 --> 00:05:55,147
டேவி சீகலும்
அவனுடைய வலதுகரமான கென்னியும்.

69
00:05:59,985 --> 00:06:01,778
- வேகமாகச் செய்வோம், என்ன?
- ஆம்.

70
00:06:03,113 --> 00:06:04,781
- நீ இங்கே தேடுகிறாயா?
- படுக்கையறையில் தேடு.

71
00:06:07,201 --> 00:06:10,162
ஹேய், அந்த ஒட்டு கேட்கும் சாதனத்தைப் பொருத்து.

72
00:06:10,162 --> 00:06:11,121
சரி.

73
00:06:11,121 --> 00:06:14,249
தனது சகோதரியைக் கண்டுபிடிக்க
பணியமர்த்தப்பட்டவரை உளவு பார்ப்பது.

74
00:06:14,249 --> 00:06:17,711
அவன் ஏன் அப்படிச் செய்கிறான்?
அவன் எதற்கு பயப்படுகிறான்?

75
00:06:19,379 --> 00:06:20,380
ஹேய்...

76
00:06:21,298 --> 00:06:22,341
எதாவது கிடைத்ததா?

77
00:06:22,341 --> 00:06:26,011
ஆம், ஆனால்...
வெறும் வினோதமான மாத இதழ்கள்...

78
00:06:26,011 --> 00:06:27,095
...என்னவோ. இல்லை...

79
00:06:27,095 --> 00:06:28,263
பர்ஸ் இல்லை. இல்லை...

80
00:06:28,263 --> 00:06:30,933
- அவர்கள் முட்டாள்களாக இருப்பது உதவும்.
- பொறு. சில கடிதங்கள் கிடைத்தன.

81
00:06:30,933 --> 00:06:33,101
அவற்றை இங்கே கொண்டுவாருங்கள்.
சில புகைப்படங்கள் எடுக்கிறேன்.

82
00:06:34,853 --> 00:06:39,525
இது எப்போதும் வேடிக்கையாக இருக்காது,
ஆனால் முன்னேற்றமடைய உதவும்.

83
00:06:40,108 --> 00:06:42,694
- சினிமா வெறியனாக இருக்கிறான்.
- ஹேய், ஹெலன். நான்தான்.

84
00:06:42,694 --> 00:06:45,030
- ஆம், சரிதான்.
- யாரோ உன்னை அழைப்பார்கள்.

85
00:06:45,030 --> 00:06:46,698
அவர்கள் என் அம்மாவிடம் பேச விரும்புவார்கள்.

86
00:06:46,698 --> 00:06:48,283
அது நீதான் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

87
00:06:49,409 --> 00:06:50,786
கடிதங்களை கடவுள் ஆசீர்வதிப்பாராக.

88
00:06:52,538 --> 00:06:54,706
அவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்.

89
00:06:58,210 --> 00:07:01,255
டேவி வருவதை என்னால் பார்க்க முடிந்ததால்,
அவன் ஆபத்தானவன் அல்ல என்று அர்த்தம் இல்லை.

90
00:07:01,255 --> 00:07:04,049
ஒரு விஷயத்திற்காக, என் கடந்த காலத்தை
அவன் தோண்டுவதை என்னால் அனுமதிக்க முடியாது.

91
00:07:04,049 --> 00:07:05,968
இல்லை, அதை ஏற்றுக்கொள்ள முடியாது.

92
00:07:05,968 --> 00:07:09,596
பெர்னி உதவில்லை,
டேவிக்கு பெர்னியே பரவாயில்லை என்பதோடு,

93
00:07:09,596 --> 00:07:12,266
ஒலிவியாவின் நண்பர்களிடம் பேசினால்
சில விஷயங்கள் கிடைக்கும் என நம்புகிறேன்.

94
00:07:12,266 --> 00:07:14,184
திரைப்படங்களில் வருவது போல.

95
00:07:14,184 --> 00:07:16,270
நாங்கள் முதல்முறையாக
போதையேற்றியது, ஆறாம் வகுப்பில்.

96
00:07:16,270 --> 00:07:17,604
ஆறாம் வகுப்பிலா? அப்போது வயது என்ன?

97
00:07:17,604 --> 00:07:18,939
- 11.
- ஆஹா.

98
00:07:18,939 --> 00:07:21,942
ஆனால் கிட்டத்தட்ட ஒரு வருடமாக
நாங்கள் அவளைப் பார்க்கவில்லை.

99
00:07:22,651 --> 00:07:23,652
அவள் போதை பழக்கத்திலிருந்து விடுபட்டதாலா?

100
00:07:23,652 --> 00:07:25,654
அவள் போதை பழக்கத்திலிருந்து விடுபட்டதாக
ஏன் நினைக்கிறாய்?

101
00:07:25,654 --> 00:07:28,949
அவள் யாரையும் விட அதிகமாக போதைப்பொருள்
பயன்படுத்தினாளா அல்லது அதிகமாக குடித்தாளா?

102
00:07:28,949 --> 00:07:33,245
ஆம். அவள் கொஞ்சம் கட்டுப்பாட்டை
இழக்க ஆரம்பித்தாள் என்று நினைக்கிறேன்.

103
00:07:33,245 --> 00:07:36,248
- நீ சொல்வது உறுதியா?
- அவள் போதையில் இருப்பதைப் பார்த்திருக்க வேண்டும்.

104
00:07:36,248 --> 00:07:39,084
பெரும்பாலானவர்களை ஜெயிலில் தள்ளக்கூடிய
சில விஷயங்களை அவள் செய்தாள்.

105
00:07:39,084 --> 00:07:40,043
என்ன மாதிரி?

106
00:07:40,043 --> 00:07:42,337
- நிறைய போதைப்பொருட்கள்.
- சரி.

107
00:07:42,337 --> 00:07:44,840
ஆனால் அவளை ஒருவிதத்தில் பயமுறுத்திய
வாழ்க்கையை புரட்டிப்போடும்

108
00:07:44,840 --> 00:07:46,800
ஒரு தருணம் வந்தது என்று நினைக்கிறேன்.

109
00:07:48,218 --> 00:07:51,221
அவளுடைய காதல் வாழ்க்கையைப் பற்றி
உனக்கு ஏதாவது தெரியுமா? காதலர்கள்?

110
00:07:51,972 --> 00:07:52,806
இல்லை.

111
00:07:52,806 --> 00:07:54,349
நீ என்னிடம் பொய் சொல்லவில்லை, சரிதானே?

112
00:07:55,058 --> 00:07:56,727
அவள் இவனுடன் இருந்தது நினைவிருக்கிறதா?

113
00:07:56,727 --> 00:07:58,145
இல்லை, எனக்கு ஞாபகமில்லை.

114
00:07:58,145 --> 00:07:59,730
வழக்கமான எதுவும் இல்லையா?
அவளோடு பழகுபவர்?

115
00:07:59,730 --> 00:08:01,565
- நாங்கள் பார்ட்டி நடத்திய விதத்தில் இல்லை.
- ஓ, அப்படியா?

116
00:08:01,565 --> 00:08:04,651
ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவன்.
அது எப்படி போகும் என்று உங்களுக்கே தெரியும்.

117
00:08:05,319 --> 00:08:07,279
எனக்கு எதுவும் தெரியாது,
ஆனால் நீ சொல்வதை நம்புகிறேன்.

118
00:08:07,279 --> 00:08:08,322
{\an8}கொலை குற்றத்துக்காக தேடப்படும் நபர்

119
00:08:08,322 --> 00:08:09,990
- ஹேய். ஜான் ஷுகர்.
- ஹேய்.

120
00:08:09,990 --> 00:08:11,533
இவனோடு அவளை எப்போதாவது பார்த்திருக்கிறாயா?

121
00:08:11,533 --> 00:08:13,160
- இவனைப் பார்த்ததில்லை.
- நிச்சயமாகவா?

122
00:08:13,160 --> 00:08:17,497
நிச்சயமாக. அவள் என்னிடம் மட்டுமே வாங்குவாள்.
அவள் நீண்ட நாட்களாக வாங்கவில்லை.

123
00:08:17,998 --> 00:08:20,792
- மாதங்களா, வாரங்களா? நீண்ட நாட்கள் என்றால்?
- தெரியவில்லை. குறைந்தது ஒரு வருடம்.

124
00:08:21,919 --> 00:08:24,546
நீங்கள் எப்படி? இன்னும் போதைப்பொருள்
பயன்படுத்துகிறீர்களா? என்ன நடக்கிறது?

125
00:08:26,089 --> 00:08:27,424
நான் என் பட்டப்படிப்பை முடிக்கிறேன்.

126
00:08:27,424 --> 00:08:29,134
- நான்... நான் கட்டுப்பாட்டோடு இருக்கிறேன்.
- நீ?

127
00:08:29,134 --> 00:08:30,844
- நீ?
- கருத்து சொல்ல விரும்பவில்லை.

128
00:08:30,844 --> 00:08:31,803
நான் நினைத்தேன்.

129
00:08:31,803 --> 00:08:35,224
சரி. வேறு ஏதாவது நினைத்தால்,
இந்த எண்ணை அழை. நன்றி.

130
00:08:35,224 --> 00:08:37,601
- நேரம் ஒதுக்கியதற்கு நன்றி. சரி.
- ஆம். நிச்சயமாக.

131
00:08:37,601 --> 00:08:40,479
ஒலிவியா பழைய வாழ்க்கையிலிருந்து
நிஜமாகவே நகர்ந்துவிட்டதைப் போல தெரிகிறது.

132
00:08:40,479 --> 00:08:41,563
அது ஒரு நல்ல செய்தி.

133
00:08:42,606 --> 00:08:45,108
கெட்ட செய்தி அவளுடைய புதிய வாழ்க்கை,

134
00:08:45,108 --> 00:08:48,487
அது எப்படியோ அவளை இன்னும் மோசமான
சிக்கலில் மாட்டிவிட்டதாகத் தெரிகிறது.

135
00:08:49,821 --> 00:08:53,784
ஜோனாதன் சீகலிடம் தகவலை தெரிவிக்க வேண்டிய
நேரம் இது. அவரிடமும் சில கேள்விகள் இருக்கின்றன.

136
00:08:55,494 --> 00:08:58,205
"தி பாய் இன் தி கார்னர்" பெரும் வெற்றி பெற்றது.
நிஜமாகவே.

137
00:08:58,789 --> 00:09:00,832
"தி மேன் இன் தி கார்னரும்"
பெரும் வெற்றியாக இருக்கும்.

138
00:09:00,832 --> 00:09:04,044
இது டேவிட்டின் பெரிய மறுபிரவேசம்,
எதுவும் அதை மாற்றப் போவதில்லை.

139
00:09:05,337 --> 00:09:10,717
அந்த செய்திக்கட்டுரை வெளிவந்தால்,
எந்த ஸ்டுடியோவும் இந்தப் படத்தை வெளியிடாது,

140
00:09:10,717 --> 00:09:12,886
உங்களுக்கு 60 மில்லியன் டாலர் நஷ்டமாகும்.

141
00:09:13,554 --> 00:09:15,806
பெர்னி,
பட தயாரிப்பின் முக்கிய விதியை மீறிவிட்டீர்கள்.

142
00:09:15,806 --> 00:09:17,099
உங்கள் சொந்த பணத்தைப் பயன்படுத்தியிருக்கிறீர்கள்.

143
00:09:17,599 --> 00:09:19,476
அந்த கட்டுரை வெளியே வராது, சரியா?

144
00:09:19,476 --> 00:09:24,231
இல்லை. பாதிக்கப்பட்ட எட்டு பேரில் ஏழு பேருடன்
கண்டிப்பான ஒப்பந்தம் போட்டிருக்கிறோம்.

145
00:09:24,231 --> 00:09:25,357
"பாதிக்கப்பட்டவர்" என்ற
வார்த்தையைப் பயன்படுத்தாதே.

146
00:09:25,357 --> 00:09:29,069
ஆனால் எனக்குக் கவலை தருவது
எட்டாவதாக குற்றம்சாட்டுபவள்தான்.

147
00:09:29,069 --> 00:09:31,947
அவள் தொல்லைக் கொடுப்பவள்,
ஆனால் அதை சமாளிப்போம். என்னை நம்பு.

148
00:09:31,947 --> 00:09:33,866
எப்படியோ, அவள் நம் வழிக்கு வருவாள்.

149
00:09:34,366 --> 00:09:37,286
சரி, மற்ற ஏழு பேரும்
நீங்கள் தாராளப் பிரபு என்று நினைக்கிறார்கள்.

150
00:09:37,286 --> 00:09:41,081
பொறுங்கள். பெர்னி,
டேவி குற்றவாளி என்று சொல்கிறீர்களா?

151
00:09:41,081 --> 00:09:42,499
நான் அப்படிச் சொன்னேனா, அன்பே?

152
00:09:42,499 --> 00:09:44,543
- இவர் அப்படிச் சொல்லவில்லை.
- அது டேவிட்.

153
00:09:44,543 --> 00:09:46,211
எட்டாவது நபர் நம் வழிக்கு வரவில்லை என்றால்?

154
00:09:46,211 --> 00:09:48,797
இல்லை என்றால், அது வதந்தி என்று சொல்லி,
அவளை நீதிமன்றத்துக்கு இழுப்போம்.

155
00:09:48,797 --> 00:09:50,132
நாம் சமாளிப்போம்.

156
00:09:50,132 --> 00:09:51,842
"பாதிக்கப்பட்டவர்" என்ற
வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம்.

157
00:09:51,842 --> 00:09:53,719
"பாதிக்கப்பட்டவர்" என்ற வார்த்தையை
யாரும் பயன்படுத்த வேண்டாம்.

158
00:09:54,219 --> 00:09:57,181
- சரி, என்ன யோசிக்கிறாய், ஜான்?
- தெரியவில்லை.

159
00:09:57,181 --> 00:09:59,933
அதாவது, இந்த சீகல் குடும்பம் குறிப்பிடத்தக்கது.

160
00:10:01,185 --> 00:10:02,769
சரி. ஏன்?

161
00:10:03,395 --> 00:10:04,980
- உங்களுக்கு ஒரு பானம் வேண்டுமா?
- இல்லை, நன்றி.

162
00:10:05,689 --> 00:10:08,525
- மீண்டும் ஜோனாதனைப் பார்க்கச் சென்றேன்.
- ஓ, ஆஹா. அதனால்?

163
00:10:09,401 --> 00:10:12,279
நாம் கடைசியாக பேசியதிலிருந்து,
உங்கள் குடும்ப உறுப்பினர்கள் சிலரை சந்தித்தேன்.

164
00:10:12,279 --> 00:10:16,283
அதற்காக வருந்துகிறேன்.
நான் யூகிக்கறேன். பெர்னி.

165
00:10:17,242 --> 00:10:19,328
ஆம். ஒலிவியா காணாமல் போனது பற்றிய
உங்கள் கவலை

166
00:10:19,328 --> 00:10:21,622
- அவருக்கு இல்லை.
- நிச்சயமாக, அவனுக்கு இருக்காது.

167
00:10:21,622 --> 00:10:22,748
- நிஜமாகவா?
- நிஜமாகத்தான்.

168
00:10:22,748 --> 00:10:26,251
ஆம், நாங்கள் காலை உணவு சாப்பிடும்போது
அவன் தன்னுடைய மகன் டேவியையும்

169
00:10:26,251 --> 00:10:28,003
அவனுடைய பாதுகாவலனையும் அனுப்பி

170
00:10:28,003 --> 00:10:30,005
- என் ஹோட்டல் அறையில் தேடியிருக்கிறான்.
- அடக் கடவுளே.

171
00:10:30,005 --> 00:10:33,008
ஒலிவியா தவறு செய்பவள்.
அவள் எப்போதும் அப்படித்தான் செய்வாள்.

172
00:10:33,008 --> 00:10:35,552
அதுதான் பெர்னிக்கு மிகவும் பொருத்தமான ஒரு கதை.

173
00:10:36,053 --> 00:10:39,640
அவன் மோசமான திரைப்படங்களை தயாரிப்பதிலும்,
முட்டாள் மகன் மீதும் கவனம் செலுத்தட்டும்.

174
00:10:41,683 --> 00:10:43,227
நான் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது, இல்லையா?

175
00:10:44,478 --> 00:10:46,230
பெர்னியின் எல்லா படங்களும் மோசமானவை இல்லை.

176
00:10:46,813 --> 00:10:47,981
அச்சச்சோ.

177
00:10:48,857 --> 00:10:51,485
டேவிட், மார்கிட் சோரன்சென் பெற்ற பெர்னியின் மகனா?

178
00:10:51,985 --> 00:10:53,237
- நீங்கள் அவளை இன்னும் சந்தித்ததில்லையா?
- இல்லை.

179
00:10:54,404 --> 00:10:59,952
சுயநலத்துக்கு முன்னுதாரணமான
இன்னொருவர். மோசமான பெண்.

180
00:11:01,328 --> 00:11:04,581
உங்களுடையது மிக நெருக்கமான
குடும்பம் அல்ல என்று தோன்றுகிறது.

181
00:11:08,168 --> 00:11:09,169
சரி...

182
00:11:12,548 --> 00:11:14,174
எங்களுக்கு சொந்தக் காரணங்கள் இருக்கின்றன.

183
00:11:18,345 --> 00:11:20,347
ஜான், எனக்குக் கொஞ்சம் உதவுகிறாயா?

184
00:11:22,349 --> 00:11:26,812
சரி, என் பேத்தியைத் தவிர
எல்லாவற்றையும் பற்றி பேசிவிட்டதாகத் தெரிகிறது.

185
00:11:27,646 --> 00:11:29,481
பொறுமையாக இருந்ததற்கு நன்றி.

186
00:11:29,481 --> 00:11:30,816
மன்னித்துவிடு.

187
00:11:30,816 --> 00:11:34,319
இது ஒலிவியாவின் காரில் இருந்த
GPS-இன் பதிவு.

188
00:11:34,319 --> 00:11:36,154
அட.

189
00:11:36,154 --> 00:11:37,489
ஜான், உட்கார்.

190
00:11:37,990 --> 00:11:40,534
ம், அவள் காணாமல் போனதற்கு
ஒரு வாரத்திற்கு முன்பு,

191
00:11:40,534 --> 00:11:43,161
எனக்குக் கவலையை ஏற்படுத்திய ஒரு இடத்திற்கு
அவள் திரும்ப திரும்ப சென்றதை கண்டுபிடித்தேன்.

192
00:11:43,662 --> 00:11:46,331
இந்த முகவரியில் வசித்து வந்த பெண்,
கார்மென் வேஸ்கஸ்,

193
00:11:46,331 --> 00:11:47,708
சமீபத்தில் வன்புணர்வு செய்யப்பட்டு
கொலை செய்யப்பட்டாள்.

194
00:11:47,708 --> 00:11:50,794
செல்வி. வேஸ்கஸ் கொல்லப்பட்ட அன்று இரவு
ஒலிவியாவின் கார் அங்கே இருந்திருக்கிறது.

195
00:11:50,794 --> 00:11:53,630
இதற்கும் செல்வி. வேஸ்கஸைக்
கொன்றவனின் மரணத்திற்கும்

196
00:11:53,630 --> 00:11:55,340
ஏதாவது தொடர்பு இருக்கலாம்.

197
00:11:55,340 --> 00:11:56,633
ஏன் அப்படி நினைக்கிறீர்கள்?

198
00:11:57,885 --> 00:12:00,971
ஏனென்றால் அவனுடைய சடலம் இப்போது
ஒலிவியாவின் கார் டிக்கியில் இருக்கிறது.

199
00:12:04,892 --> 00:12:05,893
ச்சே.

200
00:12:09,438 --> 00:12:10,814
கிளிஃபோர்ட் கார்ட்டர்.

201
00:12:11,356 --> 00:12:13,650
அடிதடி, வன்புணர்வு, ஆள் கடத்தலுக்காக
கைது செய்யப்பட்டிருக்கிறான்.

202
00:12:13,650 --> 00:12:14,735
ஜான்.

203
00:12:14,735 --> 00:12:17,529
காணாமல் போன ஹாலிவுட் பிரபலத்தின்
காரில் இப்போது இறந்து கிடக்கிறான்.

204
00:12:18,030 --> 00:12:19,281
உட்கார்.

205
00:12:21,033 --> 00:12:22,576
கொலை செய்யப்பட்டவர் கண்டுபிடிக்கப்பட்டால்

206
00:12:22,576 --> 00:12:25,037
போலீசில் புகார் செய்ய கடமைப்பட்டிருக்கிறேன்,
திரு. சீகல்.

207
00:12:25,037 --> 00:12:26,997
ஆனால் நீங்கள் செய்யவில்லை, இல்லையா?

208
00:12:29,875 --> 00:12:32,586
நான் அந்த காரின் டிக்கியை
திறக்காதது போல இருக்கப் போகிறேன்.

209
00:12:32,586 --> 00:12:34,171
நான் அதை பாராட்டுவேன்.

210
00:12:34,171 --> 00:12:36,798
ஆனாலும், அவளுடைய உயிருக்கு
ஆபத்து ஏற்படலாம் என்று தோன்றுகிறது.

211
00:12:37,299 --> 00:12:38,926
- கடவுளே.
- ஆம்.

212
00:12:38,926 --> 00:12:40,010
ஜான்.

213
00:12:40,677 --> 00:12:43,388
நிறைய நடக்கிறது.
அது... இந்த மக்கள், இந்த இடங்கள்.

214
00:12:43,388 --> 00:12:44,848
நான் இப்போது கண்டுபிடித்திருக்க வேண்டும்...

215
00:12:44,848 --> 00:12:47,267
- உட்கார்.
- ...ஆனால் வழக்கு பெரிதாகிக்கொண்டே போகிறது.

216
00:12:47,267 --> 00:12:48,435
எனக்கு கேள்வி என்னவென்றால்,

217
00:12:48,435 --> 00:12:50,479
ஒலிவியா காணாமல் போனதற்கும்
இதே நேரத்தில் நடக்கும்

218
00:12:50,479 --> 00:12:55,484
- மற்றவைக்கும் இடையே ஒரு தொடர்பு இருக்குமோ...
- சரி. அதைத்தான் சொல்கிறேன்.

219
00:12:57,486 --> 00:12:58,570
என்ன?

220
00:13:00,113 --> 00:13:02,366
ஒன்றுமில்லை. உன்னை மிஸ் செய்தேன், ஷுகர்.

221
00:13:03,742 --> 00:13:04,743
நானும் உன்னை மிஸ் செய்தேன்.

222
00:13:05,410 --> 00:13:07,829
ஆம். அதனால்தான் நாம் ஒருவரோடு ஒருவர்
நேரம் செலவு செய்வது

223
00:13:07,829 --> 00:13:10,832
நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்.

224
00:13:10,832 --> 00:13:13,544
- வழக்கு. சரி.
- அதைச் செய்வோமா? நாம் சும்மா ஒருவரோடு ஒருவர்

225
00:13:13,544 --> 00:13:14,962
- இருப்பதை அனுபவித்துக்கொண்டே...
- நிச்சயமாக.

226
00:13:14,962 --> 00:13:16,547
- ...சாப்பிடுவோமா?
- நிச்சயமாக. நாம்...

227
00:13:17,047 --> 00:13:18,715
- முயற்சி செய்து பார்ப்போமா?
- சரி.

228
00:13:23,929 --> 00:13:25,013
இது ஒரு நல்ல யோசனை.

229
00:13:25,514 --> 00:13:26,765
மதிய உணவு.

230
00:13:28,851 --> 00:13:31,478
- எப்படி இருக்கிறாய்?
- நன்றாக. பரபரப்பாக.

231
00:13:31,478 --> 00:13:34,314
உன்னைப் பார். பிரமாதமான சமையல்காரி.

232
00:13:34,314 --> 00:13:35,649
இப்போது 15-க்கும் மேற்பட்டவர்களை நிர்வகிக்கிறாயா?

233
00:13:35,649 --> 00:13:36,984
சமையல் செய்யப்படவில்லை என்றாலும்.

234
00:13:36,984 --> 00:13:39,444
- பத்தொன்பது.
- ஆஹா, 19, இல்லையா?

235
00:13:39,444 --> 00:13:40,821
வருகிறேன், மிரெம்பே.

236
00:13:42,739 --> 00:13:45,242
மறப்பதற்குள் சொல்லிவிடுகிறேன்,
ஏற்கனவே சார்லியை அழைத்தேன்,

237
00:13:45,242 --> 00:13:48,954
- கண்காணிப்புக்கு உதவ.
- ஆஹா. என்னிடம் கலந்தாலோசிக்காமலா?

238
00:13:49,788 --> 00:13:50,789
முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டேன்.

239
00:13:51,373 --> 00:13:55,210
முன்னெச்சரிக்கை. சரி. நினைவிருக்கட்டும்,
நீ அதிகம் கவனத்தை ஈர்க்கக்கூடாது.

240
00:13:55,210 --> 00:13:56,837
எனக்குத் தெரியும்.

241
00:14:01,633 --> 00:14:03,260
சரி. அது எவ்வளவு அடிக்கடி நடக்கிறது?

242
00:14:04,678 --> 00:14:06,013
ஒன்றுமில்லை.

243
00:14:06,013 --> 00:14:07,639
டாக்டர் விக்கர்ஸை அழைத்தாயா?

244
00:14:07,639 --> 00:14:09,933
- அதைப் பற்றி யோசித்தேன்.
- ஜான்.

245
00:14:09,933 --> 00:14:12,853
நாளை சந்திப்பில் அவரைப் பார்க்கிறேன்.
அப்போது அவரிடம் பேசுவேன். சரியா?

246
00:14:12,853 --> 00:14:15,230
இல்லை, சரியில்லை. இன்று அவரை அழை.

247
00:14:19,526 --> 00:14:22,070
நன்றாக இருக்கிறது. மதிய உணவுக்கு நன்றி.

248
00:14:25,240 --> 00:14:28,243
ரூபி கவலைப்படுவாள்,
அதற்காகவே எனக்கு அவளைப் பிடிக்கும்.

249
00:14:29,286 --> 00:14:30,495
ஆனால் எனக்கு வேலை இருக்கிறது.

250
00:14:32,122 --> 00:14:35,209
இப்போது ஒலிவியாவைக் கண்டுபிடிப்பதற்கான
சிறந்த வாய்ப்பு மெலனி மேத்யூஸ்தான்,

251
00:14:35,209 --> 00:14:39,213
அவள் அழைத்து, சந்திக்க விரும்புவதாகச்
சொன்னதால் அது வசதியாகப் போய்விட்டது.

252
00:14:40,881 --> 00:14:42,424
ஹாய், நான் மெலனி.

253
00:14:42,424 --> 00:14:44,051
ஹாய், மெலனி.

254
00:14:44,051 --> 00:14:45,344
நான் குடிக்கு அடிமையானவள்.

255
00:14:46,845 --> 00:14:48,889
நான் நீண்ட காலமாக கூட்டத்திற்கு வரவில்லை.

256
00:14:48,889 --> 00:14:54,603
அதாவது மிக நீண்ட காலமாக.
நான் 23 வருடங்கள் குடிக்காமல் இருந்தேன்.

257
00:14:56,855 --> 00:14:59,358
ஆனால் இரண்டு வாரங்களுக்கு முன்பு,
அதிகமாக குடிக்க ஆரம்பித்தேன்.

258
00:15:00,859 --> 00:15:04,530
ஆனால் அது எல்லாம் முடிந்துவிட்டது நேற்று இரவோடு.

259
00:15:04,530 --> 00:15:08,492
ஏனென்றால் நேற்று இரவு
நான் ஒரு அந்நியரை என் வீட்டிற்கு அழைத்து வந்தேன்,

260
00:15:08,492 --> 00:15:13,038
என் 20-களில் இருந்து நான் செய்யாத ஒன்று அது.

261
00:15:15,040 --> 00:15:19,336
ஆனால் நான் போதையில் இருந்ததால், நான் ஒரு
அந்நியரை என் வீட்டிற்கு அழைத்து வந்தேன்.

262
00:15:24,299 --> 00:15:27,052
நாம் குடிப்பதற்கான காரணம்
எளிமையானது என்று நினைக்கிறேன்.

263
00:15:28,095 --> 00:15:29,847
- அவர்கள் தனிமையில் இருப்பார்கள்.
- நாம் தனிமையில் இருக்கிறோம்.

264
00:15:34,893 --> 00:15:36,228
அதோடு பயப்படுகிறோம்.

265
00:15:39,439 --> 00:15:41,942
இங்கே நாம் நேசிப்பதற்கும்
நேசிக்கப்படுவதற்கும் திறன் கொண்ட

266
00:15:41,942 --> 00:15:45,237
லட்சக்கணக்கான மக்கள் வாழும் உலகில் வாழ்கிறோம்,
இருந்தாலும் எப்படியோ...

267
00:15:47,197 --> 00:15:49,241
...நம்மால் கட்டுப்பாட்டோடு இருக்க முடிவதில்லை.

268
00:15:49,241 --> 00:15:51,660
அது நாம் பயப்படுவதால்தான் என்று நினைக்கிறேன்.

269
00:15:53,370 --> 00:15:57,457
கடந்த காலத்தில் நாம் பாதிக்கப்பட்டோம்,
மீண்டும் பாதிக்கப்பட விரும்பவில்லை.

270
00:15:57,457 --> 00:16:01,295
அதனால்... நாம் தடம்மாறிச் சென்று,

271
00:16:03,005 --> 00:16:05,007
மோசமான முடிவுகளை எடுத்து,

272
00:16:05,007 --> 00:16:07,384
நமக்கு கிடைக்கக் கூடிய
எந்த வகையான உறவுகளோடும் இருந்துவிடுகிறோம்.

273
00:16:10,470 --> 00:16:12,139
ஆனால் நேற்று இரவு என்ன நடந்தது தெரியுமா?

274
00:16:13,640 --> 00:16:16,518
அவர் என்னைக் காயப்படுத்தவில்லை.
அவர் என்னிடமிருந்து திருடவில்லை.

275
00:16:16,518 --> 00:16:21,273
அந்த நேரத்தில் எனக்கு வேண்டும் என்று
சொன்னாலும், அவர் என்னோடு உடலுறவுகொள்ளவில்லை.

276
00:16:22,983 --> 00:16:24,109
இல்லை. அவர் என்ன செய்தார் தெரியுமா?

277
00:16:26,737 --> 00:16:28,530
அவர் என்னை கவனித்துக்கொண்டார்.

278
00:16:30,574 --> 00:16:34,620
அவர் என்னைத் தூங்கவைத்துவிட்டு
பிறகு கிளம்பிவிட்டார்.

279
00:16:35,412 --> 00:16:38,790
நான் வேலை செய்துகொண்டிருந்தேன்.
இன்னும் செய்துகொண்டிருக்கிறேன்.

280
00:16:40,042 --> 00:16:42,127
அதோடு இன்று காலை நான் எழுந்தபோது,

281
00:16:42,127 --> 00:16:43,879
இந்த மனிதர் கடவுளால் என்னிடம்

282
00:16:43,879 --> 00:16:47,382
அனுப்பப்பட்டிருக்கலாம் என்ற சாத்தியம்
அதிர்ச்சியளித்தது.

283
00:16:49,301 --> 00:16:50,844
அல்லது அவர் ஒரு நல்ல நபராக இருக்கலாம்.

284
00:16:53,138 --> 00:16:54,640
அல்லது ஓரினச்சேர்க்கையாளராக.

285
00:16:58,519 --> 00:17:02,773
ஆனால், அவர் என்னவாக இருந்தார்
அல்லது இருக்கிறார் என்பது முக்கியமல்ல.

286
00:17:04,191 --> 00:17:06,527
அவர் என்னை எப்படி உணர வைத்தார்
என்பதுதான் முக்கியம்,

287
00:17:06,527 --> 00:17:11,615
அதோடு நான் இரண்டாவது வாய்ப்புக்கு
தகுதியானவள் என்று அவர் என்னை உணர வைத்தார்.

288
00:17:12,241 --> 00:17:14,159
எனவே, நன்றி.

289
00:17:23,877 --> 00:17:24,962
{\an8}வந்ததற்கு நன்றி.

290
00:17:25,587 --> 00:17:26,588
அழைத்ததற்கு நன்றி.

291
00:17:27,297 --> 00:17:29,383
- நீ ஒலிவியாவைப் பற்றி பேச வேண்டுமா?
- ஆம்.

292
00:17:29,883 --> 00:17:32,803
எனக்கு இன்னும்
போதை தெளியவில்லை. உணவு வேண்டுமா?

293
00:17:32,803 --> 00:17:34,263
- நிச்சயமாக.
- என்னை அழைத்துச் செல்ல முடியுமா?

294
00:17:34,263 --> 00:17:35,347
- ம்.
- நல்லது.

295
00:17:40,686 --> 00:17:44,565
நான் எழுந்தவுடன், எல்லா மதுவையும் கொட்டிவிட்டேன்,
அதனால் சோடாதான் இருக்கிறது.

296
00:17:44,565 --> 00:17:46,650
- பரவாயில்லை.
- ஆம், தெரியும்.

297
00:17:46,650 --> 00:17:47,860
உனக்கு போதையே ஏறாது.

298
00:17:49,278 --> 00:17:51,697
- நீ நினைவு வைத்திருக்கிறாய்.
- ஆம், அதை எப்போதும் மறக்கமாட்டேன்.

299
00:17:53,949 --> 00:17:57,327
எனவே, நேற்று,
நீ என்னைப் பின்தொடர்ந்திருக்கிறாய், ஜான் ஷுகர்...

300
00:17:57,327 --> 00:18:01,290
- இல்லை. இல்லை, தற்செயல் நிகழ்வு.
- ...தனியார் புலனாய்வாளர்? இல்லையா?

301
00:18:01,290 --> 00:18:04,001
நான் வேறொரு விஷயத்தை விசாரித்துக்கொண்டிருந்தேன்.

302
00:18:04,001 --> 00:18:05,169
இதை.

303
00:18:05,711 --> 00:18:06,837
- ஆம், அதுதான்.
- ஆம்.

304
00:18:06,837 --> 00:18:09,673
நீ ஒலிவியாவைப் பற்றி பேச விரும்பினால்,
கேட்டிருக்கலாம்.

305
00:18:09,673 --> 00:18:12,301
நேற்றிரவு நீ சொன்ன எல்லாவற்றையும்
நம்பியிருப்பேனா என்று தெரியவில்லை.

306
00:18:12,301 --> 00:18:14,720
இதை சொல்வதை வெறுக்கிறேன்.
குடிபோதையில், நான் ஒரு திறந்த புத்தகம்.

307
00:18:14,720 --> 00:18:16,096
போதையில் இல்லாதபோது,
என்னிடம் ஒரு வார்த்தையை வாங்க முடியாது.

308
00:18:16,972 --> 00:18:19,057
ஒலிவியா என்று வரும்போதுகூட
எதுவும் சொல்லமாட்டாய் என்று நினைக்கிறாயா?

309
00:18:19,057 --> 00:18:20,142
நான் அப்படிச் சொல்லவில்லை.

310
00:18:20,142 --> 00:18:21,435
நான் ஒரு கேள்வி கேட்கலாமா?

311
00:18:21,977 --> 00:18:24,980
அவள் காணாமல் போனதற்கு முந்தைய வாரத்தின்
ஒவ்வொரு இரவும் அவள் ஏன் இங்கே வந்தாள்?

312
00:18:25,564 --> 00:18:27,065
எதை வைத்து அவள் இங்கே வந்தாள் என்று நினைக்கிறாய்?

313
00:18:27,065 --> 00:18:29,026
- அவள் இங்கே வந்தது எனக்குத் தெரியும்.
- எப்படித் தெரியும்?

314
00:18:29,526 --> 00:18:31,820
அவளுடைய காரின் GPS அமைப்பில் அது இருக்கிறது.

315
00:18:31,820 --> 00:18:33,614
அவள்தான் ஓட்டி வந்தாள் என்று
உனக்கு எப்படித் தெரியும்?

316
00:18:33,614 --> 00:18:35,949
ஒரு நண்பர் காரை ஓட்டி வந்திருக்கலாம், இல்லையா?

317
00:18:37,284 --> 00:18:38,410
அதுதான் நடந்ததா?

318
00:18:43,498 --> 00:18:45,334
இதைத்தான் நீ எதையும் வாங்க முடியாது என்றாய்,
இல்லையா?

319
00:18:49,379 --> 00:18:52,674
ஒலிவியாவின் பெரும்பாலான சமூக ஊடகங்களின்
கடந்த ஆறு மாத பதிவுகளை

320
00:18:52,674 --> 00:18:53,759
பார்த்துவிட்டேன்.

321
00:18:53,759 --> 00:18:55,969
பெரும்பாலானவை மிகவும் சாதாரணமான விஷயம்,
ஆனால் நீங்கள்

322
00:18:56,887 --> 00:18:59,473
இருவரும் ஒன்றாக அதிக நேரம்
செலவழிக்க தொடங்கியவுடன் அது மாறியது.

323
00:19:00,766 --> 00:19:02,017
அவளுடைய கவனம், அது மாறியது.

324
00:19:02,017 --> 00:19:04,811
- அது பெண்ணுரிமை பிரச்சினைகளுக்கு மாறியது.
- என்ன... அதில் என்ன தவறு?

325
00:19:04,811 --> 00:19:06,313
இல்லை, இல்லை... தவறு இல்லை.

326
00:19:06,897 --> 00:19:09,983
அவளுக்கு ஆர்வமூட்டும் ஒன்றை
இறுதியாகக் கண்டுபிடித்தாள் என்று நினைக்கிறேன்.

327
00:19:11,401 --> 00:19:13,737
ஆனால் இரண்டு வாரங்களுக்கு முன்பு,
அவள் காணாமல் போனபோது,

328
00:19:13,737 --> 00:19:15,906
அவளுடைய ஆன்லைன் இருப்பும் மறைந்துவிட்டது,
அதுதான் கவலையளிக்கிறது.

329
00:19:15,906 --> 00:19:18,700
போதைக்கு அடிமையானவர் பற்றி பேசும்போது,
நடத்தை மாற்றத்திற்கு ஒரு காரணம் இருக்கும்.

330
00:19:18,700 --> 00:19:21,912
அவள் ஒருவேளை மீண்டும் போதைப்பொருள்
பயன்படுத்தலாம். பார், நான்...

331
00:19:21,912 --> 00:19:23,956
அவள் எப்போது வேண்டுமானாலும் இங்கே வரலாம்,

332
00:19:23,956 --> 00:19:28,335
ஹேங்ஓவரில், சோர்வாக,
மீண்டும் மறுவாழ்வு மையத்துக்கு செல்ல தயாராக.

333
00:19:29,920 --> 00:19:30,921
அது வேடிக்கையானது.

334
00:19:31,797 --> 00:19:33,632
உன் முன்னாள் கணவர் இன்று
காலை என்னிடம் இதையேதான் சொன்னான்,

335
00:19:33,632 --> 00:19:35,551
கிட்டத்தட்ட அதே வார்த்தைகளைப் பயன்படுத்தி.

336
00:19:37,010 --> 00:19:40,055
நிச்சயமாக, சொன்னான்.
பொதுவான நலனைப் பாதுகாப்பதில் ஒரே மாதிரி.

337
00:19:40,055 --> 00:19:42,850
ஆம், சரி, நீ அவருடன் காலை உணவு
சாப்பிட்ட பிறகு என்னை அழைத்தார்.

338
00:19:43,934 --> 00:19:47,312
பெர்னி ஒரு மோசமான கணவர்,
ஆனால் எப்போதும் ஒரு நல்ல நண்பர்.

339
00:19:47,312 --> 00:19:48,480
- அப்படியா?
- ஆம்.

340
00:19:50,774 --> 00:19:53,861
- முடியை ஒதுக்குவது, அது சொல்லிவிடும்.
- இதைப் பார்.

341
00:19:54,611 --> 00:19:56,822
இவனை நீ எப்போதாவது பார்த்திருக்கிறாயா என்று சொல்.

342
00:20:00,158 --> 00:20:02,953
மெலனி, நீ சிக்கலில் இருந்தாலோ
ஒலிவியா சிக்கலில் இருப்பது தெரிந்திருந்தாலோ,

343
00:20:02,953 --> 00:20:04,997
என்னால் உதவ முடியும்.
என்ன நடந்தது என்று மட்டும் சொல்.

344
00:20:07,332 --> 00:20:09,459
இவனை நான் என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை.

345
00:20:09,459 --> 00:20:11,170
- நீ ஏன் இப்படி செய்கிறாய்?
- என்ன செய்கிறேன்?

346
00:20:11,170 --> 00:20:13,046
இது. உன்னுடைய சின்ன நடிப்பு. நான்...

347
00:20:14,131 --> 00:20:16,550
நீ பொய் சொல்வது எனக்குத் தெரியும்.
ஏன் என்றுதான் தெரியவில்லை.

348
00:20:18,218 --> 00:20:19,469
ஒருவேளை நீ எதையாவது மறைக்கலாம்.

349
00:20:19,970 --> 00:20:21,180
என்ன மாதிரி?

350
00:20:21,180 --> 00:20:22,347
அவள் எங்கே இருக்கிறாள் என்று.

351
00:20:23,891 --> 00:20:25,809
அல்லது அவள் உடல் எங்கே இருக்கும் என்று.

352
00:20:28,437 --> 00:20:29,438
என் வீட்டைவிட்டு வெளியே போ.

353
00:20:29,438 --> 00:20:34,526
நீ அவளுக்கு உதவுவதாக நினைக்கிறாய், ஆனால்
நீ அவளுக்கு நல்லதைவிட அதிகமாக தீமை செய்கிறாய்.

354
00:20:34,526 --> 00:20:36,653
- சரி, என் வீட்டைவிட்டு வெளியே போ.
- இதை தெளிவுபடுத்திவிடுகிறேன்.

355
00:20:36,653 --> 00:20:38,739
நான் ஒலிவியாவைக் கண்டுபிடிப்பேன்.

356
00:20:39,698 --> 00:20:41,158
அதுதான் என் வேலையே.

357
00:20:41,825 --> 00:20:43,035
நான் அதில் மிகவும் திறமைசாலி.

358
00:20:47,831 --> 00:20:48,832
இப்போதே.

359
00:21:04,139 --> 00:21:05,140
ஹேய், சார்லி.

360
00:21:05,682 --> 00:21:08,602
அவள் எங்கே என்று அவளுக்குத் தெரியும் என்று
நினைக்கிறேன், நாளை நம்மை அங்கே அழைத்துச் செல்வாள்.

361
00:21:08,602 --> 00:21:10,187
வேனை தயார் செய்வோம், சரியா?

362
00:21:10,771 --> 00:21:12,981
நான் உன்னை காலையில் பார்க்கிறேன். சரி. பை.

363
00:21:23,825 --> 00:21:26,161
திரைப்படங்கள் ஒரு சதித்திட்டம் என்று நினைக்கிறேன்.

364
00:21:26,703 --> 00:21:27,746
நிஜமாகவே சொல்கிறேன்.

365
00:21:28,372 --> 00:21:32,584
அவை உன்னை ஏமாற்றுவதால் அவை ஒரு சதி, ஃபுளோரன்ஸ்.

366
00:21:32,584 --> 00:21:35,629
நீ சிறு குழந்தையாக இருந்த காலத்திலிருந்தே
அவை உன்னை ஏமாற்றுகின்றன.

367
00:21:36,129 --> 00:21:38,674
நீ எல்லாவற்றையும் நம்புவதற்கு உன்னை ஏமாற்றுகின்றன.

368
00:21:38,674 --> 00:21:45,180
இலட்சியங்கள், வலிமை, நல்ல மனிதர்கள்,
நிச்சயமாக, அன்பு.

369
00:21:46,807 --> 00:21:51,603
ஆனால் என் வாழ்க்கையில்
சார்லஸ் பூயர் இல்லை, ஃபுளோரன்ஸ்.

370
00:21:51,603 --> 00:21:55,065
நான் கிளார்க் கேபிளை சந்தித்ததில்லை.
நான் ஹம்ப்ரி போகர்ட்டை சந்தித்ததில்லை.

371
00:21:55,065 --> 00:21:56,692
நான் ஒருபோதும்...
அவர்களில் யாரையும் சந்தித்ததில்லை.

372
00:21:56,692 --> 00:21:57,985
யாரைச் சொல்கிறேன் என்பது உனக்கே தெரியும்.

373
00:21:57,985 --> 00:22:00,487
அதாவது, அவர்கள் நிஜமில்லை, ஃபுளோரன்ஸ்.
அதுதான் உண்மை.

374
00:22:12,875 --> 00:22:14,001
மீண்டும் அந்த கார்.

375
00:22:15,460 --> 00:22:17,004
யாரோ என்னைக் கண்காணிக்கிறார்கள்.

376
00:22:17,504 --> 00:22:19,339
அவ்வப்போது, விலகியே இருக்கிறார்கள்.

377
00:22:20,674 --> 00:22:23,635
திறமையானவர்கள்தான்,
ஆனால் நான் அவர்களைக் கண்டுபிடித்துவிடுகிறேன்.

378
00:22:38,025 --> 00:22:40,527
ஹேய்!

379
00:22:46,241 --> 00:22:47,242
கார்ல்?

380
00:22:48,076 --> 00:22:49,077
வைலி.

381
00:22:50,162 --> 00:22:51,496
ஹேய், யாராவது கார்லை பார்த்தீர்களா?

382
00:22:53,207 --> 00:22:55,751
- உயரமானவன். பொன்னிற முடி. யாராவது? கார்ல்.
- இல்லை.

383
00:22:57,711 --> 00:22:59,755
- கார்ல்!
- இங்கிருந்து போ.

384
00:23:06,053 --> 00:23:07,054
வருந்துகிறோம்.

385
00:23:07,054 --> 00:23:08,222
- நீங்கள் துண்டிக்கப்பட்ட...
- ச்சே.

386
00:23:08,222 --> 00:23:09,890
- ...எண்ணை அழைத்திருக்கிறீர்கள்.
- இங்கே வா.

387
00:23:10,682 --> 00:23:13,727
உள்ளே போ. வா. நல்ல நாய்.

388
00:23:20,400 --> 00:23:23,403
காண்டாக்ட் ஃபைண்டர்
இடத்தைக் கண்டுபிடிக்கிறது...

389
00:23:30,077 --> 00:23:31,662
எனக்குத் தெரியும்.

390
00:23:32,454 --> 00:23:33,580
எனக்கு என்ன அக்கறை?

391
00:23:34,373 --> 00:23:35,874
இதில் எனக்கு என்ன வேலை?

392
00:23:37,501 --> 00:23:40,671
ஆம். எனக்கு நானே இதே கேள்வியை
அடிக்கடி கேட்டுக்கொள்வேன்.

393
00:23:45,801 --> 00:23:46,718
சரி.

394
00:24:38,854 --> 00:24:40,105
அடச்சே, கார்ல்.

395
00:24:49,031 --> 00:24:50,407
யார் நீ?

396
00:24:50,407 --> 00:24:51,617
நீ அவனுக்கு என்ன கொடுத்தாய்?

397
00:24:55,662 --> 00:24:56,788
நீ அவனுக்கு என்ன கொடுத்தாய்?

398
00:24:59,041 --> 00:25:00,417
போய்விடு.

399
00:25:06,131 --> 00:25:07,090
ஹேய்!

400
00:25:16,141 --> 00:25:18,018
மக்களை காயப்படுத்துவது பிடிக்காது.

401
00:25:20,312 --> 00:25:21,313
நிஜமாகவே பிடிக்காது.

402
00:25:33,158 --> 00:25:34,159
நான் இங்கே வரவேயில்லை.

403
00:25:37,162 --> 00:25:38,789
ஆனால் இதைத்தான் நான் சொல்கிறேன்.

404
00:25:38,789 --> 00:25:42,000
அதிக போதைப்பொருளால் மரணம்.
தினமும் நடப்பதுதான்.

405
00:25:43,085 --> 00:25:44,419
எனக்கு என்ன அக்கறை?

406
00:25:46,421 --> 00:25:51,760
நான் ஏன் கோபப்படுகிறேன்?
எனக்கு ஏன் ஏதாவது தோன்றுகிறது?

407
00:26:26,920 --> 00:26:28,297
- ஹேய்.
- ஹாய்.

408
00:26:28,881 --> 00:26:30,632
நீ என் சீட்டு விளையாட்டில் குறுக்கிடுகிறாய்.

409
00:26:31,800 --> 00:26:34,386
சரி. செவ்வாய் இரவு சீட்டு விளையாட்டு.
ஜாலியானது.

410
00:26:35,262 --> 00:26:37,639
- சரி. குட் நைட், ஜான்.
- நான் உள்ளே வரலாமா?

411
00:26:38,640 --> 00:26:41,101
சீகல் வழக்கு தொடர்பாக ஏதாவது
அவசர வேலை இருக்கிறதா?

412
00:26:41,101 --> 00:26:44,730
இல்லை, உண்மையில் இல்லை. இல்லை. நான்...

413
00:26:48,525 --> 00:26:50,819
- இதற்கு ஒரு இடம் தேவை.
- ஜான்.

414
00:26:54,281 --> 00:26:56,158
இது மிரெம்பேவின் வீடு.

415
00:26:59,494 --> 00:27:00,996
மிரெம்பேக்கு ஒரே ஒரு
விதி மட்டும்தான் இருக்கிறது.

416
00:27:01,496 --> 00:27:02,873
- நாய்கள் கூடாது.
- ஆம்.

417
00:27:03,373 --> 00:27:04,374
சரி.

418
00:27:05,375 --> 00:27:07,211
ஓ, கிரே வோக்ஸ்வாகன்.

419
00:27:08,420 --> 00:27:09,505
என்ன?

420
00:27:09,505 --> 00:27:13,592
இன்று ஒரு கிரே வோக்ஸ்வாகன் என்னைப் பின்தொடர்ந்தது.
யாராக இருக்கும் என்று ஏதாவது யோசனை இருக்கிறதா?

421
00:27:14,259 --> 00:27:17,012
அது சீகல்களின் ஆளாக இருக்கும் என்று நினைக்கிறாயா,
நீ என்ன செய்கிறாய் என்று கவனிக்க?

422
00:27:17,012 --> 00:27:18,972
இல்லை, அது வேறு யாரோ என்று நினைக்கிறேன்.

423
00:27:21,683 --> 00:27:23,936
கார் டிக்கியில் இருந்தவனை அப்புறப்படுத்திவிட்டாயா?

424
00:27:28,190 --> 00:27:29,274
அதைச் செய்.

425
00:27:30,901 --> 00:27:32,528
வா, வைலி.

426
00:27:33,153 --> 00:27:35,447
பெரிய தவறு. இவை நண்பர்களாக இருந்திருக்கலாம்.

427
00:27:45,666 --> 00:27:50,587
அவன் கிளம்பிவிட்டான். தன்னைப் பின்தொடர்வதாகச்
சொன்னான். இல்லை, அவர்கள் அவனைக் கண்காணிக்கிறார்கள்.

428
00:28:11,066 --> 00:28:12,317
எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

429
00:28:16,154 --> 00:28:17,447
பிரமாதமாக உடலை
அப்புறப்படுத்தியிருக்கிறார்கள்.

430
00:28:19,533 --> 00:28:20,659
யாரோ எனக்கு முன் முந்திக்கொண்டார்கள்.

431
00:28:42,848 --> 00:28:44,016
நான் பார்ப்பது என்ன?

432
00:28:44,016 --> 00:28:46,518
திரைப்படங்களைப் பற்றிய இதழ்கள்.
நான் கேள்விப்படாத திரைப்படங்கள்.

433
00:28:46,518 --> 00:28:49,146
யாரும் கேள்விப்படாத திரைப்படங்கள்.

434
00:28:51,773 --> 00:28:52,774
இவை என்ன?

435
00:28:53,400 --> 00:28:54,735
அவனுடைய அம்மா எழுதிய கடிதங்கள், சார்.

436
00:28:54,735 --> 00:28:55,819
ஆம், இதோ.

437
00:28:56,862 --> 00:28:57,863
நீ இதை எடுத்தாயா?

438
00:28:59,156 --> 00:29:00,574
என்ன? அவன் ஏற்கனவே படித்துவிட்டான்.

439
00:29:00,574 --> 00:29:02,743
- அடுத்த முறை, டேவி...
- டேவிட்.

440
00:29:02,743 --> 00:29:07,497
அடுத்த முறை, டேவிட்,
கென்னி படங்களை எடுக்கட்டும், சரியா?

441
00:29:08,290 --> 00:29:10,292
சரி. என்ன கொடுமை இது?

442
00:29:10,792 --> 00:29:11,627
ஒரு அழைப்பிதழ்.

443
00:29:11,627 --> 00:29:14,004
ஆம். அது தெரிகிறது, ஆனால் எதற்கு?

444
00:29:14,004 --> 00:29:16,882
தெரியாது. நான் அதை கூகிள் செய்தேன்.
எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

445
00:29:16,882 --> 00:29:19,009
அதில் இடம் கூட இல்லை, திரு. சீகல்.

446
00:29:19,009 --> 00:29:20,969
வெறும் தேதியும் நேரமும் மட்டும். நாளை இரவு.

447
00:29:24,056 --> 00:29:25,182
ஒட்டுக்கேட்கும் கருவி?

448
00:29:25,182 --> 00:29:27,476
ஒன்றுமில்லை.
அவன் அதைக் கண்டுபிடித்திருக்க வேண்டும்.

449
00:29:30,020 --> 00:29:31,522
நான் சொல்வதைக் கேட்டு ஏதாவது கற்றுக்கொள்ளுங்கள்.

450
00:29:31,522 --> 00:29:34,066
என் வாழ்க்கையை ஒரு
சுற்றுச்சூழல் அமைப்பாக நான் நினைக்கிறேன்.

451
00:29:35,442 --> 00:29:37,319
- அது என்ன தெரியுமா?
- ஆம், அது என்னவென்று தெரியும்.

452
00:29:37,319 --> 00:29:39,238
நல்லது, நன்றாக கவனி.
ஏனென்றால் எனது சுற்றுச்சூழல் அமைப்பில்,

453
00:29:39,238 --> 00:29:43,492
நான், என் மனைவி, என் பிள்ளைகள்,

454
00:29:43,492 --> 00:29:45,118
அதோடு என் தயாரிப்பு நிறுவனம் இருக்கிறது.

455
00:29:45,827 --> 00:29:48,914
நான் என் சுற்றுச்சூழல் அமைப்பு பற்றி
மட்டுமே கவலைப்படுவேன்.

456
00:29:48,914 --> 00:29:52,042
எனவே ஒரு அந்நியன் அதற்குள் வரும்போது,
நான் அதிக எச்சரிக்கையுடன்,

457
00:29:52,042 --> 00:29:54,294
"இது நேர்மறை அல்லது எதிர்மறை சக்தியா?" என்று
வியப்பேன்.

458
00:29:54,294 --> 00:29:59,216
நான் அதற்கு உண்மையாக பதிலளிக்கக்கூடிய ஒரே வழி
அந்த அந்நியனை புரிந்துகொள்வதுதான்.

459
00:29:59,216 --> 00:30:03,053
அவன் ஒலிவியாவைத் தாண்டி
வேறு யாரையும் பற்றி விசாரிக்கக் கூடாது,

460
00:30:03,053 --> 00:30:04,137
டேவிட் உன்னைப் பற்றி.

461
00:30:05,764 --> 00:30:08,892
எனவே, இந்த திரு. ஜான் ஷுகர் பற்றி
உன்னால் முடிந்த எல்லாவற்றையும் கண்டுபிடி.

462
00:30:10,185 --> 00:30:11,061
சரி.

463
00:30:11,061 --> 00:30:13,522
- நாளை மாலைக்குள் எனக்கு தகவல் வேண்டும்.
- அது கிடைக்கும், அப்பா.

464
00:30:25,659 --> 00:30:28,495
{\an8}ஹோட்டல் டெல் கோரஸோன்

465
00:30:31,290 --> 00:30:33,417
கிளிஃபோர்ட் கார்ட்டர், கார்மென் வேஸ்கஸ்.

466
00:30:33,917 --> 00:30:35,502
கிழக்கு லாஸ் ஏஞ்சலஸில்
வன்புணர்வு செய்து கொலை

467
00:30:35,502 --> 00:30:39,882
இதற்கும் ஒலிவியாவிற்கும் என்ன தொடர்பு?
என்னால் ஏன் பார்க்க முடியவில்லை?

468
00:30:43,635 --> 00:30:45,304
நான் இதில் ஈடுபடக் கூடாது.

469
00:30:53,353 --> 00:30:55,063
கவனித்து அறிக்கை கொடுத்தால் போதும்.

470
00:30:57,024 --> 00:30:58,358
அதை எழுதிவை.

471
00:31:00,194 --> 00:31:01,403
அதுதான் உண்மையான பணி.

472
00:31:09,494 --> 00:31:11,038
எப்படியும் அதுதான் யோசனை.

473
00:31:16,793 --> 00:31:18,795
அதைத்தான் ரூபி எங்களிடம்
சொல்லிக்கொண்டே இருக்கிறாள்...

474
00:31:21,173 --> 00:31:22,382
ஆனால் என்னால் அதைக் கேட்க முடியாது.

475
00:31:25,177 --> 00:31:26,178
என்னால் நிறுத்த முடியவில்லை.

476
00:31:28,680 --> 00:31:29,681
நான் ஈடுபட்டிருக்கிறேன்.

477
00:31:31,683 --> 00:31:33,435
அவள் எனக்கு ஜென்னை நினைவுபடுத்துகிறாள்.

478
00:31:35,145 --> 00:31:37,731
இந்த வழக்குக்கு வேறு முடிவு இருக்கும் என்று
நம்புகிறேன். ஆனால், ஆம்...

479
00:31:41,235 --> 00:31:42,653
அவள் என் சகோதரியை நினைவுபடுத்துகிறாள்.

480
00:31:45,155 --> 00:31:46,198
நான் அவளைக் கண்டுபிடிக்கப் போகிறேன்.

481
00:31:47,115 --> 00:31:49,201
அவள் வெளியே எங்கோ இருக்கிறாள்.

482
00:32:12,140 --> 00:32:15,644
இல்லை. மீண்டும் உள்ளே செல்லுங்கள்.

483
00:32:16,979 --> 00:32:18,355
மாலை வணக்கம்.

484
00:32:19,273 --> 00:32:20,357
டெரீஸா, இல்லையா?

485
00:32:22,651 --> 00:32:24,820
எனவே, இவள் பிள்ளைகளை
படுக்கையறைக்கு அழைத்துச் செல்வாள்

486
00:32:24,820 --> 00:32:26,363
தொலைக்காட்சியைப் பார்க்க.

487
00:32:28,448 --> 00:32:30,826
அல்லது அவர்களை இவனிடம் கொடுப்பேன்.

488
00:32:32,035 --> 00:32:33,745
வாருங்கள். படம் பார்க்கப் போவோம்.

489
00:32:33,745 --> 00:32:35,455
சீக்கிரம். சரியா?

490
00:32:37,249 --> 00:32:40,919
எனவே, டெரீஸா, நான் என் நண்பனைத்
தேடுகிறேன்.

491
00:32:41,670 --> 00:32:43,881
கிளிஃபோர்ட் கார்ட்டர்.
இவன் உன் தங்கையோடு உறவு வைத்திருந்தான்.

492
00:32:46,216 --> 00:32:47,217
எனக்கு இவரைத் தெரியாது.

493
00:32:47,718 --> 00:32:49,178
என்னிடம் பொய் சொல்லாதே, டெரீஸா.

494
00:32:50,179 --> 00:32:51,430
சரி, ஒன்று சொல்கிறேன் கேட்டுக்கொள்.

495
00:32:51,430 --> 00:32:55,058
ஆனால் நீ மீண்டும் என்னிடம் பொய் சொன்னால்,
உன் முகத்தில் ஓங்கிக் குத்துவேன்.

496
00:32:56,143 --> 00:32:57,144
சரியா?

497
00:32:57,853 --> 00:32:59,396
ஹேய், கிளிஃபோர்ட் என்னுடைய முக்கியமான ஆள்.

498
00:33:00,105 --> 00:33:04,443
என்னையும் என் வாடிக்கையாளர்களைப் பற்றியும்
அவனுக்கு தெரியும், மற்றவர்களுக்கு தெரியக்கூடாது.

499
00:33:05,277 --> 00:33:08,614
அதோடு அவன் இந்த விஷயங்களை, என்னைப் பற்றிய
விஷயங்களை தன்னுடைய ஃபோனில் வைத்திருந்தான்.

500
00:33:08,614 --> 00:33:14,494
ஆனால் இரண்டு வாரங்களுக்கு மேலாக கிளிஃபோர்டை
நான் பார்க்கவில்லை, அவன் தொடர்புகொள்ளவில்லை.

501
00:33:17,414 --> 00:33:18,415
அது என்னைப் பதட்டப்படுத்துகிறது.

502
00:33:20,751 --> 00:33:22,085
அது உனக்குப் புரிகிறதா?

503
00:33:23,212 --> 00:33:24,213
ஆம்.

504
00:33:25,130 --> 00:33:28,133
அவன் தொலைந்துபோவதற்கு முன்
அவன் அனுப்பிய கடைசி மெஸ்சேஜ் இதுதான்.

505
00:33:29,343 --> 00:33:30,344
{\an8}கிளிஃபோர்ட்
இவளை வன்புணர்வு செய்வோம்.

506
00:33:30,344 --> 00:33:31,595
{\an8}இது உன் தங்கை கார்மென், இல்லையா?

507
00:33:34,306 --> 00:33:35,307
ஆம்.

508
00:33:36,475 --> 00:33:39,311
இந்த வேசி நாய் யார் என்று கண்டுபிடிக்க
எனக்கு இரண்டு வாரங்கள் ஆனது.

509
00:33:43,357 --> 00:33:46,151
எனவே, வெளிப்படையாக,
ஒரு சரியான உலகில் எங்கள் முக்கியமான ஆளுக்கு

510
00:33:46,151 --> 00:33:47,778
என்ன ஆனது என்பது பற்றி கார்மெனுடன் பேசுவோம்.

511
00:33:47,778 --> 00:33:50,322
ஆனால் அவள் இறந்துவிட்டதால்
அது சரியான உலகம் இல்லை.

512
00:33:50,322 --> 00:33:54,117
ஆனால் நாங்கள் உன்னோடு பேச முடியும்,
சரிதானே டெரீஸா?

513
00:33:56,078 --> 00:33:57,538
- ஆம்.
- சரி.

514
00:33:59,248 --> 00:34:02,501
எனவே, அதற்குப் பிறகு அவன் அனுப்பிய மெஸ்ஸேஜ் இது.

515
00:34:03,836 --> 00:34:05,712
இவள் யார் என்று உனக்கு ஏதாவது யோசனை இருக்கிறதா?

516
00:34:07,464 --> 00:34:10,717
{\an8}இவள் உனக்கு பரிட்சயமானவளாகத் தெரிகிறாளா?

517
00:34:19,851 --> 00:34:21,018
நன்றி.

518
00:34:22,312 --> 00:34:23,563
நன்றி.

519
00:34:23,563 --> 00:34:25,399
இவளுக்கு... தெரிந்திருக்கிறது.

520
00:34:26,233 --> 00:34:27,484
அடுத்து அவளிடம் பேசுவோம்.

521
00:35:38,805 --> 00:35:40,807
வசனத் தமிழாக்கம் அருண்குமார்

