1
00:01:08,986 --> 00:01:11,446
ஹாய். சரி...

2
00:01:11,446 --> 00:01:15,200
கடைசியாக போட்ட போஸ்டுக்குப் பிறகு இன்று
நிறைய கிண்டல் செய்யும் கமென்டுகள் வந்திருக்கின்றன.

3
00:01:15,200 --> 00:01:16,118
ஆனால் என்ன தெரியுமா?

4
00:01:16,118 --> 00:01:17,828
நாளின் முடிவில், முட்டாளாவது நீங்கள்தான்,

5
00:01:17,828 --> 00:01:19,538
ஏனென்றால் நான் இங்கேயேதான் இருக்கப் போகிறேன்.

6
00:01:19,538 --> 00:01:23,041
ம்... ஓ, இனிய நாளாக அமையட்டும்.

7
00:01:23,959 --> 00:01:24,960
திரைப்படங்கள் பார்ப்பீர்களா?

8
00:01:25,502 --> 00:01:28,338
- அவ்வளவாக பார்க்க மாட்டேன்.
- இல்லை, நான் அப்படி நினைக்கவில்லை.

9
00:01:28,338 --> 00:01:30,465
- நீங்கள் இப்போது உடை அணியலாம்.
- ஒரு திகில் படம் இருக்கிறது.

10
00:01:30,465 --> 00:01:33,677
- அது... கதை அன்டார்டிகாவில் நடக்கிறது.
- சரி.

11
00:01:33,677 --> 00:01:36,805
அதில் கர்ட் ரஸ்ஸலும் இன்னும்
சில நடிகர்களும் நடித்திருக்கிறார்கள்.

12
00:01:37,806 --> 00:01:39,308
அது ஒரு திகிலான அறிவியல் புனைக்கதை,

13
00:01:39,308 --> 00:01:42,019
ஒரு காட்சி இருக்கிறது அதில் டாக்டர்...

14
00:01:42,561 --> 00:01:43,729
டாக்டர் இருக்கும் காட்சி இருக்கிறது,

15
00:01:43,729 --> 00:01:46,940
அவர் நோயாளிக்கு டிஃபிப்ரிலேட்டர் பயன்படுத்துவார்.

16
00:01:47,441 --> 00:01:48,942
அவர் நோயாளியின் நெஞ்சில் அதை வைத்து அழுத்துவார்.

17
00:01:48,942 --> 00:01:51,987
அவர் அதை அழுத்துவார்.

18
00:01:51,987 --> 00:01:55,199
ஒரு கட்டத்தில், அவரது கை
நோயாளியின் நெஞ்சுக்குள் போய்விடும்.

19
00:01:56,200 --> 00:01:59,745
ஆனால் இயல்பான மனிதனைப் போல
விலா எலும்புகளுக்கு பதிலாக

20
00:01:59,745 --> 00:02:01,205
நோயாளிக்கு பற்கள் இருக்கும்.

21
00:02:02,664 --> 00:02:06,835
அந்த பற்கள் அவரது கையைக் கடித்து குதறிவிடும்.

22
00:02:07,920 --> 00:02:09,086
இரண்டு கைகளையும்.

23
00:02:11,673 --> 00:02:13,175
அது உண்மையிலேயே ஒரு நல்ல திரைப்படம்.

24
00:02:13,175 --> 00:02:14,593
ஆம். கேட்க அப்படித்தான் இருக்கிறது.

25
00:02:15,719 --> 00:02:17,638
நான் சில இரத்த பரிசோதனைகளை செய்து
உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்.

26
00:02:17,638 --> 00:02:18,555
நிச்சயமாக.

27
00:02:19,223 --> 00:02:20,766
கையில் இருக்கும் காயத்தால் தழும்பு ஏற்படும்.

28
00:02:21,558 --> 00:02:24,186
ஆனால் உறுப்புகளும்,
நாடித்துடிப்பும், உடல் அறிகுறிகள் எல்லாமே

29
00:02:24,853 --> 00:02:25,854
ஒப்பீட்டளவில் நன்றாக இருக்கின்றன.

30
00:02:25,854 --> 00:02:28,440
அது அருமை. நல்லது.

31
00:02:28,440 --> 00:02:31,235
அதாவது... ஆச்சரியமாக இல்லை.

32
00:02:31,235 --> 00:02:33,820
நிச்சயமாக, அதற்காக மட்டும் ஒருவர்
ஆரோக்கியமாக இருக்கிறார் என்று அர்த்தமில்லை.

33
00:02:35,322 --> 00:02:37,407
எவ்வளவு அடிக்கடி ஊசிப்போட்டுக்கொள்கிறீர்கள்?

34
00:02:38,033 --> 00:02:39,618
எவ்வளவு அடிக்கடி...

35
00:02:41,078 --> 00:02:42,287
அடிக்கடி இல்லை.

36
00:02:42,871 --> 00:02:44,581
- தூங்குவீர்களா?
- தூங்குகிறேனா?

37
00:02:44,581 --> 00:02:45,958
கனவு காண்பீர்களா?

38
00:02:46,792 --> 00:02:48,794
விரக்தி ஏற்படுகிறதா?

39
00:02:48,794 --> 00:02:51,588
விக்கர்ஸ். வோவ். நீங்கள் என்ன மனநல மருத்துவரா?

40
00:02:52,923 --> 00:02:55,217
ரூபி என்னை இங்கே வரச் சொன்னாள்.
கண்டிப்பாக உங்களைப் பார்க்க வேண்டும் என்றாள்.

41
00:02:55,217 --> 00:02:57,177
நான் வந்துவிட்டேன். நீங்களும் பார்த்துவிட்டீர்கள்.
நன்றாக இருக்கிறேன்.

42
00:02:57,845 --> 00:02:58,846
நமக்குப் பிரச்சினையில்லை.

43
00:03:00,639 --> 00:03:02,182
பரிபூரணமான ஆரோக்கியம்.

44
00:03:08,814 --> 00:03:11,650
ஜான், நான் உதவுகிறேன். நான் செய்கிறேன்.

45
00:03:16,613 --> 00:03:20,784
ஜான், எங்களுக்குத் தெரிய வேண்டும். நீங்கள் நலமா?

46
00:03:21,618 --> 00:03:23,078
அவர்கள் தொடர்ந்து என்னிடம் அதைக் கேட்கிறார்கள்.

47
00:03:24,037 --> 00:03:25,038
ம்.

48
00:03:25,038 --> 00:03:26,915
முதலில் ரூபி, இப்போது விக்கர்ஸ்.

49
00:03:27,708 --> 00:03:28,709
நான் நன்றாக இருக்கிறேன்.

50
00:03:29,543 --> 00:03:31,628
என்னைப் பற்றித்தான் கேட்கிறார்களா
அல்லது வேறு ஏதாவது நடக்கிறதா?

51
00:03:33,422 --> 00:03:35,257
தெரியவில்லை, ஒருவேளை
எனக்கு சித்தப்பிரமையாக இருக்கலாம்.

52
00:03:36,300 --> 00:03:38,552
நீங்கள் இது போன்ற வழக்கில் வேலை செய்தால்,
அது நடக்கும்.

53
00:03:39,052 --> 00:03:41,847
இன்னும், கவனமாக இருப்பது நல்லது.

54
00:03:41,847 --> 00:03:45,267
- உங்களுக்கு என்ன உதவி வேண்டும்?
- திருமதி. ஷுகர்? ஹெலன் ஷுகரா?

55
00:03:45,267 --> 00:03:48,478
- அது நான்தான்.
- உங்களுக்கு ஜான் என்கிற மகன் இருக்கிறார்தானே?

56
00:03:49,062 --> 00:03:50,564
அடக் கடவுளே. நீங்கள் டேவி சீகல்.

57
00:03:51,315 --> 00:03:53,817
-"தி பாய் இன் தி கார்னர்" படத்தில் நடித்தவர்.
- ஆம், நான்தான்.

58
00:03:54,693 --> 00:03:56,111
உள்ளே வாருங்கள்.

59
00:03:57,571 --> 00:03:58,822
- நன்றி.
- இதை நம்பமுடியவில்லை.

60
00:03:58,822 --> 00:04:00,574
- அந்தப் படத்தை எத்தனை முறை பார்த்தேன் என்று...
- மிக்க நன்றி.

61
00:04:00,574 --> 00:04:01,909
...சொல்ல முடியாது.

62
00:04:02,701 --> 00:04:04,661
இங்கே என்ன செய்கிறீர்கள்?

63
00:04:11,668 --> 00:04:13,003
பெர்னி?

64
00:04:13,003 --> 00:04:14,213
ஹேய், அன்பே.

65
00:04:14,963 --> 00:04:16,130
இப்போதுதான் வீட்டிற்கு வருகிறீர்களா?

66
00:04:16,130 --> 00:04:19,176
- ஆம், கடற்கரை வீட்டிலேயே தூங்கிவிட்டேன்.
- எதற்காக அங்கே போனீர்கள்?

67
00:04:19,676 --> 00:04:22,429
இப்போது நடக்கும் விஷயங்களால்,
நான் அங்கே போக வேண்டியிருந்தது.

68
00:04:23,222 --> 00:04:25,265
கடலைப் பார்ப்பதில் ஏதோ இருக்கிறது. அது உதவும்.

69
00:04:25,849 --> 00:04:27,059
வந்து படுங்கள்.

70
00:04:27,059 --> 00:04:30,062
இல்லை. எனக்குத் தூக்கம் வரவில்லை.
நான் சில வேலைகளை முடிக்கப் போகிறேன்.

71
00:04:30,062 --> 00:04:31,605
நீ தூங்கு.

72
00:05:08,559 --> 00:05:10,269
- நாங்கள் இன்று இங்கே வந்திருக்கிறோம்.
- என் உடல், என் விருப்பம்!

73
00:05:10,269 --> 00:05:13,939
இது மிகவும் சக்திவாய்ந்த நாள்.
இந்த பெண்கள் அற்புதமானவர்கள்.

74
00:05:13,939 --> 00:05:17,943
நான் நாள் முழுக்க இங்கேதான் இருக்கப் போகிறேன்,
நீங்கள் சேர விரும்பினால், எனக்குத் தெரிவியுங்கள்.

75
00:05:17,943 --> 00:05:19,653
இது பலனளிக்க நீங்கள்
இங்கே நேரில் வர வேண்டும்.

76
00:05:19,653 --> 00:05:21,488
நீங்கள் எங்களுக்குத் தேவை.

77
00:05:23,907 --> 00:05:27,077
ஹேய், ரூபி. எனவே, மெலனியை பின்தொடரும்
இந்த ஸ்டாலிங்ஸ் பற்றி தெரிந்ததா?

78
00:05:27,077 --> 00:05:29,830
ஹேய், அவன் என்ன செய்கிறான்?
அவன் யாரை அழைக்கிறான்? என்ன தெரியவந்தது?

79
00:05:30,414 --> 00:05:32,833
நான் அவனுடைய ஃபோனில் நுழைந்து
தகவல்களை அனுகுகிறேன்.

80
00:05:32,833 --> 00:05:35,669
நிறைய உணவு டெலிவரி செய்யும் மற்றும் ஆபாச பட
இணையதளங்களைப் பார்க்கிறேன்.

81
00:05:35,669 --> 00:05:38,964
பாஸ்களோ உரையாடல்களோ இல்லையா? கிரெடிட் கார்டு
பயன்பாடு இல்லையா? எதுவுமில்லையா?

82
00:05:38,964 --> 00:05:41,675
நீ அவனை பயமுறுத்திவிட்டாய்.
ஒருவேளை தலைமறைவாகி, கவனமாக இருக்கலாம்.

83
00:05:41,675 --> 00:05:42,801
அவனுடைய குற்ற பதிவில் என்ன இருக்கிறது?

84
00:05:42,801 --> 00:05:44,344
ஏற்கனவே பலமுறை கைதாகியிருக்கிறான்.

85
00:05:44,344 --> 00:05:47,764
போதையில் ஒழுங்கீனமாக நடந்ததற்காக, அடிதடி,
போதைப்பொருட்களை வைத்திருந்ததற்காக.

86
00:05:47,764 --> 00:05:50,350
ஆள் கடத்தல்? கடத்தி விற்பது?
நிழல் உலகோடு அவனுக்குத் தொடர்பு இருக்க வேண்டும்.

87
00:05:50,350 --> 00:05:51,643
இல்லை.

88
00:05:51,643 --> 00:05:54,271
மாற்றுப்பெயர்கள், சமூகப்
பாதுகாப்பு எண்களைச் சரிபார்க்கிறாயா?

89
00:05:54,271 --> 00:05:58,108
ஷுகர், அவனுடைய மொத்த வாழ்க்கையின்
தகவல்களும் என் கண் முன்னால் இருக்கிறது.

90
00:05:58,108 --> 00:05:59,693
அவன் சிறிய குற்றங்கள் செய்பவன். அவ்வளவுதான்.

91
00:05:59,693 --> 00:06:01,069
எந்த அர்த்தமும் இல்லை.

92
00:06:01,069 --> 00:06:03,488
ஸ்டாலிங்ஸுக்கும் உன் காணாமல் போன பெண்ணுக்கும்
எந்தத் தொடர்பும் இல்லையென்றால் அர்த்தம் இருக்கிறது.

93
00:06:04,114 --> 00:06:05,782
சரி. தகவலைத் தேடியதற்கு நன்றி.

94
00:06:05,782 --> 00:06:07,242
- ஹேய்.
- என்ன?

95
00:06:07,242 --> 00:06:09,745
ஒருவேளை, ஏதோவொரு காரணத்திற்காக, நாம்
நினைத்தது போல இந்த வழக்கு போகவில்லை என்றால்...

96
00:06:09,745 --> 00:06:10,871
நான் அவளைக் கண்டுபிடிப்பேன்.

97
00:06:22,049 --> 00:06:23,884
- கச்சிதம். நன்றி.
- பிடியுங்கள்.

98
00:06:24,551 --> 00:06:27,179
- நீங்கள் லாஸ் ஏஞ்சலஸுக்கு பத்திரமாக செல்லுங்கள்.
- நன்றி.

99
00:06:27,179 --> 00:06:29,264
கவலைபடாதே. நான் யாரிடமும் சொல்ல மாட்டேன்.

100
00:06:29,264 --> 00:06:30,224
நன்றி, திருமதி. ஷுகர்.

101
00:06:31,266 --> 00:06:32,184
மிகவும் இனிமையானவர்.

102
00:06:32,184 --> 00:06:33,936
வேலை எளிதாக முடிந்தது.

103
00:06:37,898 --> 00:06:40,234
- ஹேய்.
- இப்போதுதான் போனார்கள். ம்.

104
00:06:40,234 --> 00:06:41,777
சரி, சொன்னேனே.

105
00:06:41,777 --> 00:06:44,863
- அவன் அருவருப்பானவன்.
- அதுதான் அவன்.

106
00:06:44,863 --> 00:06:46,365
அவனிடம் என்ன சொன்னீர்கள்?

107
00:06:46,365 --> 00:06:48,909
ஒன்றுமில்லை,
ஆனால் அவர்கள் எல்லா விஷயங்களையும் தேடுகிறார்கள்.

108
00:06:49,785 --> 00:06:53,038
அவனுடைய முக்கியமான ஆதரவை
திடீரென்று பறிப்பதுதான் அவனுக்குத் தேவை.

109
00:06:53,038 --> 00:06:55,082
நானும் அதையேதான் நினைக்கிறேன்.

110
00:06:58,085 --> 00:06:59,795
கேளுங்கள், உதவியதற்கு நன்றி.

111
00:06:59,795 --> 00:07:01,088
கவனமாக இரு.

112
00:07:01,088 --> 00:07:03,423
நீ யாரென்று கண்டுபிடிக்கும் வரை
அவர்கள் நிறுத்த மாட்டார்கள்.

113
00:07:03,590 --> 00:07:05,092
சரி.

114
00:07:05,092 --> 00:07:07,010
- நன்றி. விரைவில் பேசுவோம்.
- நிச்சயமாக.

115
00:07:11,431 --> 00:07:13,600
இங்கே இருப்பவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

116
00:07:13,600 --> 00:07:15,894
- உன்னை நேசிக்கிறேன், செல்லம்.
- நன்றி. உன்னை நேசிக்கிறேன்.

117
00:07:15,894 --> 00:07:17,938
இவளை நேசிக்கிறேன்.
இந்த வருடம் நீ என்னவாக இருக்கப் போகிறாய்?

118
00:07:17,938 --> 00:07:20,190
- நீ ஜெண்டயா, கேத் பிளான்செட்...
- சரி.

119
00:07:20,190 --> 00:07:22,985
...மற்றும் மிக் ஜாகர் ஆகியோரின்
கலவையாக இருக்கப் போகிறாய்...

120
00:07:27,030 --> 00:07:28,031
மாலை வணக்கம், சார்.

121
00:07:28,031 --> 00:07:29,658
ஹோட்டல் டெல்
கோரஸோன்

122
00:07:34,538 --> 00:07:37,332
ஹாய், வைலி. ஹாய்.

123
00:07:37,833 --> 00:07:41,879
அதைக் கெடுக்காதே.
அது கவனத்தைப் பெற தீவிரமாக முயற்சிக்கிறது.

124
00:07:41,879 --> 00:07:43,964
இது தகுதியானதுதானே, இல்லையா?

125
00:07:43,964 --> 00:07:46,717
ஆம், நீ தகுதியானவன், குட்டி. ஆம்.

126
00:07:48,302 --> 00:07:50,429
ஹேய்.

127
00:07:51,471 --> 00:07:53,015
டெரீஸாவிடமும் குழந்தைகளிடமும் பேசினேன்.

128
00:07:53,015 --> 00:07:56,643
சான் டியாகோவை அடைந்துவிட்டனர். அவளுக்கு அங்கே
குடும்பம் இருக்கிறது, எனவே நன்றாக இருக்கிறார்கள்.

129
00:07:57,227 --> 00:07:58,228
கேட்க சந்தோஷமாக இருக்கிறது.

130
00:07:59,313 --> 00:08:01,064
- நீ உள்ளே வர விரும்புகிறாயா?
- ஆம்.

131
00:08:03,692 --> 00:08:05,527
ஒருவேளை ஒன்றுமில்லாமல் இருக்கலாம்...

132
00:08:05,527 --> 00:08:10,490
அதாவது, நான்... காலை உணவு, முட்டைகள் சமைத்தேன்,
அப்போது ஒன்று நினைவுக்கு வந்தது.

133
00:08:11,909 --> 00:08:14,494
ஒலிவியா பற்றிய தகவலா? தயவுசெய்து சொல்.

134
00:08:15,579 --> 00:08:16,580
நாங்கள் திட்டமிட்டிருந்தோம்.

135
00:08:16,580 --> 00:08:19,499
மதிய உணவுக்குப் பிறகு...
ரோஸ் பவுல் சந்தைக்குப் போவது என்று.

136
00:08:19,499 --> 00:08:21,877
இது ஆறு வாரங்களுக்கு முன்பு,
ஆனால் கடைசி நிமிடத்தில்,

137
00:08:21,877 --> 00:08:24,755
அவள் ரத்து செய்துவிட்டாள், ஏனென்றால்
அவளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.

138
00:08:24,755 --> 00:08:26,089
ஆனால் அந்த நாளின் பிற்பகுதியில்,

139
00:08:26,089 --> 00:08:30,010
சில்வர் லேக் பகுதியில் கேலரி வைத்திருக்கும்
நண்பரைப் பார்க்கச் சென்றேன்.

140
00:08:30,010 --> 00:08:34,056
நான் அங்கிருக்கும்போது, தெருவின்
மறுபுறத்தில் இருந்த கஃபேவில் அவளைப் பார்த்தேன்.

141
00:08:34,056 --> 00:08:35,849
நான் அங்கே சென்று ஹாய் சொல்லலாம் என்று இருந்தேன்,

142
00:08:35,849 --> 00:08:39,937
ஆனால் அவளோடு இருந்த பெண்ணோடு
மிகவும் தீவிரமாக பேசிக்கொண்டிருந்தாள்.

143
00:08:41,188 --> 00:08:43,148
நீ அந்தப் பெண்ணை இதற்கு முன்பு பார்த்ததில்லையா?

144
00:08:43,148 --> 00:08:45,275
இல்லை,
ஆனால் அவர்களுக்குள் ஏதோ நடந்து கொண்டிருந்தது.

145
00:08:45,275 --> 00:08:48,028
அந்த நேரத்தில், எனக்கு நினைவு வந்தது,
அது என்னை கவலையில் ஆழ்த்தியது.

146
00:08:48,028 --> 00:08:50,739
அவளுக்கு ஏதோ பிரச்சினை.
அவள் மிகவும் வருத்தத்தில் இருந்தாள்.

147
00:08:52,991 --> 00:08:54,243
எதைப் பற்றி என்று வியக்கிறேன்.

148
00:08:55,118 --> 00:08:57,454
நீ... சில்வர் லேக் என்றா சொன்னாய்?

149
00:08:58,997 --> 00:09:00,582
என்னால் முடிந்த எல்லாவற்றையும்
கண்டுபிடிக்க வேண்டும்.

150
00:09:02,459 --> 00:09:03,877
யாரோ என்னைக் கண்காணிக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

151
00:09:07,422 --> 00:09:10,092
அது நடந்து ஆறு வாரங்கள் இருக்கும்.
அவள் ஒரு தோழியுடன் இங்கே வந்திருந்தாள்.

152
00:09:11,009 --> 00:09:12,219
அங்கே உட்கார்ந்திருந்தாள்.

153
00:09:12,761 --> 00:09:14,638
வருந்துகிறேன், எனக்கு ஞாபகம் இல்லை.

154
00:09:14,638 --> 00:09:16,306
- உறுதியாகவா?
- ஆம்.

155
00:09:16,306 --> 00:09:19,226
- சரி. நன்றி.
- குட் லக். சரி.

156
00:09:20,060 --> 00:09:24,565
விமர்சிப்பவர்கள் தினமும் "ஒலிவியா, நாங்கள் உன்னை
கண்காணிக்கிறோம். ஒலிவியா, உன்னைப் பிடிப்போம்"

157
00:09:25,482 --> 00:09:26,942
என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

158
00:09:28,110 --> 00:09:29,862
ஒலிவியாவின் தோழி பற்றி
எந்த தகவலும் இல்லை...

159
00:09:29,862 --> 00:09:30,946
இல்லை, பார்த்ததில்லை.

160
00:09:30,946 --> 00:09:33,198
...ஆனால் மெலனிக்கு அந்த
இன்னொரு பெண் பற்றிய உணர்வு இருந்தது.

161
00:09:33,949 --> 00:09:35,242
எனக்கும்தான்.

162
00:09:35,909 --> 00:09:37,744
எப்படியோ, நாங்கள் அவளைக் கண்டுபிடிப்பது
மிகவும் முக்கியம்.

163
00:09:39,121 --> 00:09:40,873
- நான் வருந்துகிறேன்.
- நன்றி.

164
00:09:40,873 --> 00:09:43,083
நான் இதை டிவியில் பல முறை பார்த்திருக்கிறேன்,

165
00:09:43,584 --> 00:09:46,003
அதில் துப்பறிவாளர் ஒரு புகைப்படத்தை
மக்களிடம் காட்டுவார்.

166
00:09:46,003 --> 00:09:48,547
- அதாவது... உன்னிடம் கேட்க வேண்டும்.
- என்ன?

167
00:09:48,547 --> 00:09:49,798
அது நிஜமாக பலன் தருமா?

168
00:09:49,798 --> 00:09:51,800
ஹேய், நீ ஆச்சரியப்படுவாய்,
பெரும்பாலான மக்கள் உதவ விரும்புகிறார்கள்.

169
00:09:56,180 --> 00:09:57,431
நீங்கள் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்?

170
00:09:58,015 --> 00:10:00,434
ஓ, மன்னிக்கவும், நான் ஒரு தனியார் புலனாய்வாளர்.

171
00:10:00,434 --> 00:10:05,272
இவளை கண்டுபிடிக்க இவளது குடும்பம் என்னை வேலைக்கு
வைத்திருக்கிறது. இவளை இரண்டு வாரமாக காணவில்லை.

172
00:10:06,523 --> 00:10:07,900
என்னுடைய அடையாள அட்டை.

173
00:10:10,319 --> 00:10:13,614
எங்களுக்கு உதவக் கூடிய ஒரு தோழி இவளுக்கு
நெருக்கமாக இருக்கலாம் என்று நினைக்கிறோம்.

174
00:10:13,614 --> 00:10:15,032
- பார்க்கலாமா?
- தாரளமாக.

175
00:10:16,992 --> 00:10:18,660
ஆம், நான் இவளைப் பார்த்ததே இல்லை.

176
00:10:20,787 --> 00:10:22,206
நீங்கள் மெலனி மேத்யூஸ்.

177
00:10:24,458 --> 00:10:27,711
ஓ, ஆம். டேனி, அது மெலனி மேத்யூஸ்.

178
00:10:27,711 --> 00:10:30,797
அடக் கடவுளே. நீங்கள் அவரேதான்.

179
00:10:32,466 --> 00:10:35,052
உங்கள் இசை எனக்கு எவ்வளவு முக்கியம்
என்பதை என்னால் சொல்லவே முடியவில்லை.

180
00:10:35,844 --> 00:10:36,970
எங்களில் பலருக்கு.

181
00:10:36,970 --> 00:10:38,263
நன்றி, டேனி.

182
00:10:38,263 --> 00:10:40,807
யாரும் உங்களை மோசமாக நடத்த விட்டதில்லைதானே?

183
00:10:40,807 --> 00:10:42,226
இல்லை, நான் விட்டதில்லை.

184
00:10:45,187 --> 00:10:46,188
நீங்கள் அவரோடு வந்தீர்களா?

185
00:10:46,772 --> 00:10:47,773
ஆம்.

186
00:10:49,316 --> 00:10:52,903
எனக்கு அந்தப் பெண்ணைத் தெரியும்.
அவள் டெய்லரின் தோழி.

187
00:10:53,987 --> 00:10:56,365
டெய்லர்.
டெய்லர் எங்கு வசிக்கிறாள் என்று தெரியுமா, டேனி?

188
00:11:00,452 --> 00:11:02,204
இது வேடிக்கையாக இருக்கிறது.

189
00:11:02,204 --> 00:11:03,413
என்ன?

190
00:11:03,413 --> 00:11:05,666
அங்கீகரிக்கப்பட்ட ராக் ஸ்டாருடன் பணிபுரிகிறேன்.

191
00:11:06,166 --> 00:11:08,836
தயவுசெய்து. முன்னால் ராக் ஸ்டார்.

192
00:11:08,836 --> 00:11:11,463
இல்லை, நிஜமாகவே, அது உதவியது.
அதாவது, அவள் உன்னை நம்பினாள்.

193
00:11:11,463 --> 00:11:12,840
என்னுடைய எத்தனை ஆல்பங்களை வைத்திருக்கிறாய்?

194
00:11:12,840 --> 00:11:14,424
நீ என்ன பேசுகிறாய்? எல்லாமே இருக்கின்றன.

195
00:11:14,424 --> 00:11:15,551
பொய்யன்.

196
00:11:17,386 --> 00:11:18,345
என்ன?

197
00:11:18,345 --> 00:11:21,431
ஹேய், டெய்லர். டேனி அழைத்தாள்.

198
00:11:23,559 --> 00:11:26,019
- ஹேய், நான் மெலனி...
- ஆம், எனக்குத் தெரியும். டேனி சொன்னாள்.

199
00:11:26,687 --> 00:11:29,064
நீங்கள் ஒலிவியாவைத் தேடுவதாக அவள் சொன்னாள்.

200
00:11:29,064 --> 00:11:33,819
பாருங்கள், எனக்கும் அவளைப் பற்றி
எதுவும் தெரியாது, சரியா? எனவே, நான்...

201
00:11:33,819 --> 00:11:35,445
நாம் ஒரு நிமிடம் பேசலாம்.

202
00:11:35,445 --> 00:11:37,364
இந்த சீகல் நடத்தும் நாடகம்
எனக்கு சலித்துவிட்டது, சரியா?

203
00:11:37,364 --> 00:11:38,657
"சீகல் நடத்தும் நாடகமா"? என்ன சொல்கிறாய்?

204
00:11:39,324 --> 00:11:42,661
பார், நீ பேச விரும்பவில்லை என்றால்,
பரவாயில்லை. நாங்கள் போகிறோம்.

205
00:11:43,245 --> 00:11:44,872
ஒன்று கேட்கலாமா, நீ நலமா?

206
00:11:50,460 --> 00:11:51,503
ஐந்து நிமிடங்கள்.

207
00:11:52,129 --> 00:11:54,089
ஆனால் பெயின் ஸ்டேஷன்
மிகவும் அருமையானது என்பதால் மட்டுமே.

208
00:11:54,882 --> 00:11:56,091
நன்றி. அது போதும்.

209
00:11:57,426 --> 00:11:58,802
- நன்றி.
- நன்றி.

210
00:12:01,346 --> 00:12:03,640
நீயும் ஒலிவியாவும் எப்படி சந்தித்தீர்கள்?
அங்கிருந்து தொடங்குவோம்.

211
00:12:04,224 --> 00:12:06,185
அவளை வெறுக்கத்தக்கவள் என்று அழைப்பேன்.

212
00:12:06,185 --> 00:12:07,311
நான் இவளை நேசிக்கிறேன்.

213
00:12:07,311 --> 00:12:09,271
ஆஹா,
நட்பை ஆரம்பிக்க அற்புதமான வழி.

214
00:12:09,271 --> 00:12:10,230
ஆம்.

215
00:12:10,230 --> 00:12:12,608
இது பலனளிக்க நீங்கள் இங்கே நேரில் வர வேண்டும்.
நீங்கள் எங்களுக்குத் தேவை.

216
00:12:14,109 --> 00:12:15,861
அது இன்ஸ்டாகிராமில் இருந்தது.

217
00:12:15,861 --> 00:12:19,072
கொடுமைக்கார ஆண்களிடமிருந்து பெண்கள் தப்பிக்க
உதவுவது குறித்த ஸ்டோரிகளை போஸ்ட் செய்தாள்.

218
00:12:19,072 --> 00:12:20,282
நீங்கள் எங்களுக்குத் தேவை.

219
00:12:20,282 --> 00:12:22,826
அதோடு என்னால் அதை சமாளிக்க முடியவில்லை.

220
00:12:22,826 --> 00:12:26,997
எனவே, அவளுக்கு மெஸ்ஸேஜ் செய்து, நிறைய
விமர்சனம் செய்தேன்

221
00:12:26,997 --> 00:12:29,499
அதோடு கிழக்கு லாஸ் ஏஞ்சலஸில்
அதை எதிர்ப்பதற்கு பதிலாக,

222
00:12:29,499 --> 00:12:31,877
அவள் தன் சொந்த குடும்பத்தில்
அதைச் செய்ய வேண்டும் என்றேன்.

223
00:12:31,877 --> 00:12:33,879
அவளது சொந்த குடும்பத்திலா?
என்ன சொல்கிறாய்?

224
00:12:34,546 --> 00:12:36,340
அல்லது நீ யாரை சொல்கிறாய், டெய்லர்?

225
00:12:37,674 --> 00:12:40,344
நான் ஒரு நடிகை, சரியா?
நடிகையாக இருக்க முயற்சிக்கிறேன்.

226
00:12:40,844 --> 00:12:44,765
இரண்டு மாதங்களுக்கு முன்பு,
பெர்னி சீகல் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

227
00:12:44,765 --> 00:12:47,893
"சரி, அருமை. எனக்கு டேவி சீகலைத் தெரியும்"

228
00:12:47,893 --> 00:12:50,812
அதாவது, நண்பரின் நண்பர் போன்ற

229
00:12:50,812 --> 00:12:51,855
ஒருவன் என்று நினைத்தேன்.

230
00:12:52,439 --> 00:12:54,191
எனவே, நான் அவனிடம் குறிப்பிட்டேன்,

231
00:12:54,191 --> 00:12:56,985
"ஹேய், எனக்கு உன் அப்பாவின்
படத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது" என்று.

232
00:12:58,111 --> 00:12:59,238
நான் அதைச் செய்திருக்கக் கூடாது.

233
00:13:00,781 --> 00:13:01,615
என்ன நடந்தது?

234
00:13:03,742 --> 00:13:07,120
முதலில் எதுவும் இல்லை.
டேவி நன்றாக இருந்தான், தெரியுமா?

235
00:13:07,120 --> 00:13:11,708
"ஓ, மிகவும் உற்சாகமானது. உனக்குப் புரியும் என்று
நம்புகிறேன். உனக்கு சரியான பாத்திரம்."

236
00:13:11,708 --> 00:13:13,627
அவன் அருமையாக இருந்தான்.

237
00:13:13,627 --> 00:13:15,295
- முதலில்?
- ஆம்.

238
00:13:16,630 --> 00:13:18,215
அவன் எனக்கு மெஸ்ஸேஜ் அனுப்பத் தொடங்கும் வரை.

239
00:13:18,799 --> 00:13:22,010
"ஹேய், எனவே, இது மிகப் பெரிய பாத்திரமாக
இருக்கப் போகிறது என்று இப்போதுதான் தெரிந்தது.

240
00:13:22,010 --> 00:13:23,011
நிறைய போட்டி.

241
00:13:23,011 --> 00:13:28,100
நான் ஏன் வந்து, ஆடிஷனில் உனக்கு உதவக் கூடாது?"

242
00:13:28,100 --> 00:13:31,979
சரி, இதோ, "ஆடிஷனில் எனக்கு உதவுகிறானா"?
என்ன தைரியம் அவனுக்கு.

243
00:13:31,979 --> 00:13:34,022
நான் கண்ணியமாக சொன்னேன், தெரியுமா?

244
00:13:34,022 --> 00:13:38,026
"கடவுளே, நீ அதைச் சொன்னது இனிமையானது.
என்னால் இன்றிரவு முடியாது."

245
00:13:38,026 --> 00:13:40,153
ஆனால் நான்... அவன் அதை விடவில்லை.

246
00:13:40,696 --> 00:13:43,657
எனவே அவன் அடுத்த இரவு, அடுத்த இரவு
தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தான்,

247
00:13:43,657 --> 00:13:48,912
கடைசியாக, நான் அவனுக்கு "வருந்துகிறேன், நண்பா,
அது நடக்காது" என்று மெஸ்ஸேஜ் அனுப்பினேன்.

248
00:13:49,705 --> 00:13:50,706
முடிந்தது.

249
00:13:51,623 --> 00:13:55,669
அவனுடைய பதில், இது ஒரு காணொளியாக வந்தது

250
00:13:56,879 --> 00:13:58,463
அதில் இரண்டு பேர் உடலுறவுகொள்கிறார்கள்.

251
00:14:01,425 --> 00:14:07,055
அவர்களில் நான் ஒருத்தி, டேவி இன்னொருவன்.

252
00:14:09,850 --> 00:14:12,269
அது அவனுடைய ரகசியம், தெரியுமா?

253
00:14:12,269 --> 00:14:14,646
அது...
அவன் கேமராக்களை மறைத்து வைத்திருந்திருக்கிறான்.

254
00:14:14,646 --> 00:14:19,067
நான் சொன்னது போல, நாங்கள் ஒரு முறை
அவனுடைய இடத்தில் உடலுறவு கொண்டோம்,

255
00:14:19,067 --> 00:14:21,320
பல ஆண்டுகளுக்கு முன்பு, தெரியுமா?

256
00:14:21,320 --> 00:14:23,197
எனக்கு... நினைவில் கூட இல்லை.

257
00:14:23,697 --> 00:14:30,579
எனக்கு மிகவும் கோபம் வந்தது,
பெரும் அத்துமீறலாகத் தோன்றியது.

258
00:14:30,579 --> 00:14:32,623
நான் அவனுக்கு மெஸ்ஸேஜ் அனுப்பினேன்.

259
00:14:32,623 --> 00:14:34,833
இது என்ன செய்யப் போகிறது என்று
அவன் நினைத்திருப்பான்?

260
00:14:34,833 --> 00:14:39,213
உனக்காக ஆடிஷனுக்கு என்னை ஒப்புக்கொள்ளவைக்கவா?

261
00:14:39,213 --> 00:14:41,882
முடியாது. தெரியுமா?

262
00:14:42,883 --> 00:14:49,097
அதனால், அவன் என்னை அழைத்தான், அவனுடைய குரல்...

263
00:14:51,058 --> 00:14:52,643
அவன் என்னை வேசி என்றான்.

264
00:14:54,144 --> 00:15:00,150
நான் அவனை வர விடவில்லை என்றால்,

265
00:15:00,150 --> 00:15:02,069
இவை அவனுடைய வார்த்தைகள்...

266
00:15:02,736 --> 00:15:08,575
"எப்படி வேண்டுமானாலும் உன்னோடு
உடலுறுவுகொள்வேன், காணொளியை வெளியிடுவேன்.

267
00:15:11,537 --> 00:15:12,579
நீ என்ன செய்தாய்?

268
00:15:13,622 --> 00:15:14,873
போலீஸிடம் சென்றேன்.

269
00:15:14,873 --> 00:15:15,958
சரி.

270
00:15:15,958 --> 00:15:19,920
நான் அவர்களிடம் சொன்னேன், இந்த...
சைக்கோ என்னை தொந்தரவு செய்கிறான் என்று,

271
00:15:19,920 --> 00:15:23,090
அவர்கள் மிகவும் கவலையடைந்து,
அந்த சைக்கோ யார் என்று கேட்டார்கள்,

272
00:15:23,090 --> 00:15:25,592
அவன் ஜோனாதன் சீகலின் பேரன் என்று
அவர்களிடம் சொன்னேன்.

273
00:15:25,592 --> 00:15:26,802
எதுவும் நடக்கவில்லை.

274
00:15:26,802 --> 00:15:31,765
ஆம். சரி...
ஆனால் அவர்கள் சீகல்கள், தெரியுமா?

275
00:15:31,765 --> 00:15:33,016
அவர்கள் என்ன செய்வார்கள்?

276
00:15:35,477 --> 00:15:37,062
இருந்தாலும், அடுத்த நாள்,

277
00:15:37,062 --> 00:15:43,986
டேவி பற்றி NDA-வில் கையெழுத்திட பணம் தருவதாக
வழக்கறிஞர் ஒருவரிடமிருந்து அழைப்பு வந்தது.

278
00:15:43,986 --> 00:15:45,946
அது பெர்னியின் வழக்கறிஞரா?

279
00:15:45,946 --> 00:15:49,950
ஆம். நான் அவளைத் திட்டினேன்.
எனவே, அதுதான் நடந்தது.

280
00:15:49,950 --> 00:15:51,869
ஒலிவியா, அவளுக்கு இதெல்லாம் தெரியுமா?

281
00:15:51,869 --> 00:15:53,912
- நீ அதைப் பற்றி அவளிடம் சொன்னாயா?
- ஆம்.

282
00:15:54,580 --> 00:15:57,040
ஆம், எனக்கு மட்டும் அப்படி நடக்கவில்லை என்று
அவள்தான் என்னிடம் சொன்னாள்.

283
00:15:58,333 --> 00:16:03,005
பாலியல் ரீதியான மிரட்டல், அது,
அவன் அனுபவித்து செய்யும் விஷயம்.

284
00:16:04,506 --> 00:16:05,841
ஒலிவியாவிற்கு அவனுடைய ரகசியம் தெரியும்.

285
00:16:06,675 --> 00:16:08,802
ஆம், அவன் டஜன் கணக்கான பெண்களுக்கு
இதைச் செய்திருக்கிறான்.

286
00:16:08,802 --> 00:16:10,137
கேவலமானவன்.

287
00:16:12,764 --> 00:16:13,599
எப்படியோ,

288
00:16:15,184 --> 00:16:18,437
ஐந்து நிமிடங்களுக்கு மேல்
ஆகிவிட்டது என்று நினைக்கிறேன், அதனால்...

289
00:16:19,271 --> 00:16:23,025
நீ மிகவும் தைரியமானவள், டெய்லர். நன்றி.

290
00:16:24,484 --> 00:16:25,319
ஆம்.

291
00:16:30,449 --> 00:16:33,785
எனக்கு பயமாக இருக்கிறது. நான்...

292
00:16:42,836 --> 00:16:43,962
நீ நலமா?

293
00:16:46,632 --> 00:16:47,633
ஆம்.

294
00:16:47,633 --> 00:16:51,261
ஆம்? டேவி பற்றி, உனக்கு...

295
00:16:56,642 --> 00:17:01,188
அந்த விஷயம் தெரியுமா,
நாம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு விஷயங்களில்

296
00:17:01,188 --> 00:17:02,648
கவனம் செலுத்த வேண்டும் என்ற யோசனையை?

297
00:17:03,982 --> 00:17:07,861
நாம் வேகத்தைக் குறைத்து,
ஃபோன்களை கீழே வைத்துவிட்டு,

298
00:17:07,861 --> 00:17:11,906
நாம் நிஜமாகவே ஆசுவாசப்படுத்திக்கொண்டால்,
ஒருவேளை இந்த உலகம் அழகாகத் தெரியுமா?

299
00:17:11,906 --> 00:17:14,617
ஆம். நிறுத்தி, ரோஜாக்களின் வாசனையை முகரலாம்.

300
00:17:16,118 --> 00:17:17,246
அது அதற்கு நேர்மாறாக இருக்கலாம்.

301
00:17:17,746 --> 00:17:18,747
என்ன சொல்கிறாய்?

302
00:17:20,832 --> 00:17:23,126
நாம் பார்க்காததற்குக் காரணம்...

303
00:17:24,920 --> 00:17:27,172
அது மிகவும் சோகமாகவும்
அசிங்கமாகவும் இருப்பதால் இருக்கலாம்.

304
00:17:30,551 --> 00:17:31,927
ஆம், ஆனால் எல்லாம் இல்லை.

305
00:17:33,887 --> 00:17:37,850
கடல் சிங்கங்கள் இருக்கின்றன, பேட்டி ஸ்மித்...

306
00:17:37,850 --> 00:17:39,852
- சரி.
- சைப்ரஸ் மரங்கள்.

307
00:17:41,311 --> 00:17:43,647
உன் தங்கையின் சிரிக்கும் சத்தம்,
வேடிக்கையாக இருப்பது.

308
00:17:45,816 --> 00:17:47,442
எனக்கு தங்கை இல்லை.

309
00:17:47,442 --> 00:17:49,486
சரி, பாரிஸ் எப்படி?

310
00:17:51,071 --> 00:17:53,782
- பாரிஸ் நகரம் சோகமாகவும் அசிங்கமாகவும் உள்ளதா?
- அங்கே போனதில்லை.

311
00:17:53,782 --> 00:17:55,200
நீ பாரிஸ் சென்றதில்லையா?

312
00:17:55,200 --> 00:17:56,493
இல்லை.

313
00:17:57,953 --> 00:17:59,121
பாவம்.

314
00:17:59,121 --> 00:18:00,372
இவள் பாரிஸ் சென்றதில்லையாம்.

315
00:18:00,372 --> 00:18:03,500
வைலி, இவள் பாரிஸ் சென்றதில்லையாம்.
இவள் மன அழுத்தத்தில் இருப்பதில் ஆச்சரியமில்லை.

316
00:18:07,045 --> 00:18:07,963
அது...

317
00:18:10,507 --> 00:18:13,510
பெர்னிக்கு கூட அது வழக்கமாக இருக்கலாம்.

318
00:18:16,930 --> 00:18:20,851
இந்த டேவியின் விஷயத்தில்
அவரும் ஈடுபட்டிருப்பது போல தோன்றுகிறது.

319
00:18:24,104 --> 00:18:25,272
அழைத்து வந்ததற்கு நன்றி.

320
00:18:25,272 --> 00:18:26,398
பரவாயில்லை.

321
00:18:30,360 --> 00:18:31,361
அவள் வருத்தத்தில் இருக்கிறாள்.

322
00:18:32,446 --> 00:18:35,449
டேவி ஒரு வேட்டை நாய். ஒலிவியாவுக்கு அது
தெரிந்திருக்கிறது, இப்போது ஒலிவியா காணவில்லை.

323
00:18:36,366 --> 00:18:38,327
ஒன்று மற்றொன்ருக்கு வழிவகுத்ததா?

324
00:18:39,328 --> 00:18:40,162
உறுதியாகத் தெரியவில்லை.

325
00:18:41,538 --> 00:18:44,208
சீகல் குடும்பத்தில் யார் யார் எவ்வளவு ரகசியங்களை
வைத்திருக்கிறார்கள் என்று தெரிய வேண்டும்.

326
00:18:45,209 --> 00:18:47,836
நீங்கள் பார்த்திருக்க வேண்டும்.
அவனுடைய அம்மா எதையும் சொல்லியிருப்பாள்.

327
00:18:48,670 --> 00:18:50,964
என் மகன் என்ன சும்மாவா. எப்போதும் வசீகரன்.

328
00:18:51,590 --> 00:18:52,883
எனக்கு ஒரு உதவி செய், டேவிட்,

329
00:18:52,883 --> 00:18:54,843
உன் அப்பாவிடம் இதைப் பற்றி
எதுவும் சொல்லாதே, சரியா?

330
00:18:54,843 --> 00:18:56,970
அவரிடம் முதலில் என்ன சொல்லப் போகிறோம்
என்பதை முடிவு செய்வோம்.

331
00:18:56,970 --> 00:18:59,932
- எனவே அவர் அழைத்தால்...
- ஆனால் நான் சென்றது அவருக்கு முன்பே தெரியுமே.

332
00:18:59,932 --> 00:19:01,934
இல்லை, எனக்குத் தெரியும்.
எனக்கு தெரியும். நான்...

333
00:19:01,934 --> 00:19:04,978
முதலில் தகவலைப் பற்றி யோசிக்க
கொஞ்சம் நேரம் வேண்டும்.

334
00:19:04,978 --> 00:19:10,234
எனவே அவர் அழைத்தால், நீ அவரிடம்
நேரில் சொல்ல விரும்புவதாகச் சொல், சரியா?

335
00:19:10,234 --> 00:19:11,276
சரி, அம்மா.

336
00:19:11,276 --> 00:19:14,238
சரி. நன்றி, செல்லம்.
பாதுகாப்பாக வந்து சேர்.

337
00:19:14,821 --> 00:19:15,656
பை.

338
00:19:19,535 --> 00:19:23,038
ஹேய், கார்லோஸ். ஜான் ஷுகர்.
நான் திரு. சீகலிடம் பேச வேண்டும்.

339
00:19:25,791 --> 00:19:27,501
- அவளைக் கண்டுபிடித்தீர்களா?
- இல்லை, சார். இன்னும் இல்லை.

340
00:19:27,501 --> 00:19:29,169
பிறகு ஏன் என்னை அழைக்கிறீர்கள்?

341
00:19:29,169 --> 00:19:31,296
நான் ஓரு முக்கியமான விஷயத்தை
உங்களோடு விவாதிக்க வேண்டும்.

342
00:19:31,296 --> 00:19:32,589
அது என்ன?

343
00:19:32,589 --> 00:19:35,259
நான் ஃபோனில் சொல்ல விரும்பவில்லை.
சந்திக்க நேரம் இருக்கிறதா?

344
00:19:36,802 --> 00:19:38,470
கார்லோஸ் உங்களுக்கு ஒரு முகவரியைத் தருவார்.

345
00:19:48,272 --> 00:19:50,649
கார்லோஸ் ஒரு முகவரியையும்
திரைப்படத்துக்கான டிக்கெட்டையும் கொடுத்தான்.

346
00:19:51,775 --> 00:19:53,610
{\an8}லோரெய்ன் எவர்லி ரெட்ரோஸ்பெக்டிவ்
தி விண்ட்ஸ் ஆஃப் சேன்ஜ்

347
00:19:53,610 --> 00:19:56,154
சரி. நிச்சயமாக.
இது ஒரு லோரெய்ன் எவர்லியின் நல்ல படம்தான்.

348
00:19:56,154 --> 00:19:57,114
ஆனால் நான் இங்கு வேலை செய்ய வந்திருக்கிறேன்.

349
00:19:57,698 --> 00:19:59,074
ஆரம்பத்திலிருந்தே, ஜோனாதன் எதையோ

350
00:19:59,074 --> 00:20:00,826
சொல்லாமல் வைத்திருக்கிறார் என்ற
சந்தேகம் இருந்தது.

351
00:20:01,660 --> 00:20:04,580
ஒரு ரகசியம். முக்கியமான ஒன்று.
ஒலிவியாவுடன் தொடர்புடையது.

352
00:20:09,293 --> 00:20:11,587
ஆனால் இப்போது, அதற்கும் டேவிக்கும் ஏதாவது
தொடர்பு இருக்குமோ என்று கவலைப்படுகிறேன்.

353
00:20:18,260 --> 00:20:19,970
- திரு. ஷுகர்.
- வாழ்த்துக்கள்.

354
00:20:19,970 --> 00:20:21,054
நீங்கள் வந்ததில் மகிழ்ச்சி.

355
00:20:22,014 --> 00:20:25,767
ஆஸ்கார் இரவு அன்று நடக்கும் "வேனிட்டி ஃபேர்"
இல்லை, ஆனால் நிறைய பழைய நண்பர்கள் இருக்கிறார்கள்.

356
00:20:25,767 --> 00:20:26,977
சரி, அழைப்பிற்கு நன்றி.

357
00:20:26,977 --> 00:20:28,979
எங்காவது தனியா பேசலாமா?

358
00:20:28,979 --> 00:20:30,272
- திரையிடலுக்குப் பிறகு.
- நிச்சயமாக.

359
00:20:40,199 --> 00:20:41,325
ஓ, ஆம். ஹேய்.

360
00:20:42,826 --> 00:20:43,952
புகைப்படம் எடுக்கும் நேரம்.

361
00:20:51,460 --> 00:20:53,587
உங்களுடைய தனியார் புலனாய்வாளர்
தோல்வியடைவது போல தெரிகிறது.

362
00:20:54,171 --> 00:20:55,172
உனக்கு என்ன கவலை?

363
00:20:55,172 --> 00:20:58,342
நான் கவலைப்படுகிறேன். அவளது
முட்டாள்தனத்தைப் போதுமான அளவு பார்த்துவிட்டேன்.

364
00:20:58,926 --> 00:21:01,053
- ஸ்காட்ச். எதுவும் கலக்காமல்.
- இதோ கொடுக்கிறேன்.

365
00:21:02,971 --> 00:21:05,933
எனவே, நீங்கள்தான் தனியார் புலனாய்வாளரா?

366
00:21:07,267 --> 00:21:08,352
ஆம், அவர்களில் ஒருவன்.

367
00:21:09,269 --> 00:21:10,103
வேடிக்கையானவர்.

368
00:21:10,103 --> 00:21:13,023
உன் வாழ்க்கையில் ஒரு நாள் கூட
ஒலிவியாவைப் பற்றி நீ கவலைப்பட்டதில்லை.

369
00:21:13,023 --> 00:21:15,108
நீங்கள் நிஜமாகவே மோசமான அப்பா.

370
00:21:16,485 --> 00:21:17,569
மார்கிட் சோரன்சென்.

371
00:21:18,153 --> 00:21:19,112
இது வேடிக்கையானது என்று நினைக்கிறீர்களா?

372
00:21:19,112 --> 00:21:20,072
நான் ஜான் ஷுகர்.

373
00:21:20,697 --> 00:21:22,366
இதே விஷயத்தை
என்னிடம் சொன்னது யார் தெரியுமா, அப்பா?

374
00:21:22,366 --> 00:21:23,700
என் அம்மா.

375
00:21:23,700 --> 00:21:25,661
நான் ஒரு தொலைக்காட்சியை
பயன்படுத்தக் கூடிய இளைஞனாக இருந்தேன்.

376
00:21:25,661 --> 00:21:26,828
எனவே, ஆம், நீங்கள் யார் என்று தெரியும்.

377
00:21:27,412 --> 00:21:29,957
நான் அதைக் கேட்டு மயங்குவதா
அல்லது வயதாகிவிட்டது என்று வருத்தப்படுவதா என்று

378
00:21:30,457 --> 00:21:31,542
தெரியவில்லை.

379
00:21:32,125 --> 00:21:33,418
- ஆம்.
- நன்றி.

380
00:21:33,919 --> 00:21:35,587
- டேவி சீகல் உங்கள் மகன்தானே?
- முட்டாள்.

381
00:21:35,587 --> 00:21:37,047
என் ஒரே மகன்.

382
00:21:37,047 --> 00:21:39,258
இன்றிரவு அவர் வரவில்லையா?
நான் அவரைப் பார்க்கவில்லை.

383
00:21:39,258 --> 00:21:42,636
ஓ, இல்லை. டேவிட் மிகவும் பிஸியாக இருக்கிறான்.
அவனால் முடியவில்லை.

384
00:21:44,513 --> 00:21:47,224
அவனை உங்களுக்கு தனிப்பட்ட முறையில் தெரியுமா?

385
00:21:47,808 --> 00:21:51,687
இல்லை, உண்மையில் இல்லை.
வெறும்... வெறும் பிரபலத்தால்தான்.

386
00:21:52,646 --> 00:21:55,357
நீங்கள் கேட்கும் எல்லாவறையும் நம்பாதீர்கள்,
திரு. ஷுகர்.

387
00:21:55,357 --> 00:21:59,278
அதாவது, உங்களைப் போன்ற ஒருவர் என்று
வரும்போது, நான் அப்படி செய்யமாட்டேன்.

388
00:22:03,699 --> 00:22:05,701
அழகானது! உணர்வுப்பூர்வமானது! மர்மம் நிறைந்தது!

389
00:22:05,701 --> 00:22:07,786
{\an8}தி விண்ட்ஸ் ஆஃப் சேன்ஜ்

390
00:22:13,000 --> 00:22:15,627
குற்றத்தை கண்டுபிடிப்பதிலிருந்து இன்று விடுப்பா?

391
00:22:15,627 --> 00:22:18,380
கவர்ச்சியான ஹாலிவுட் திரையிடலுக்கான
ஒரு அழைப்பு, எப்படி மறுப்பது?

392
00:22:19,173 --> 00:22:20,966
கவர்ச்சியாக இருந்தால்,

393
00:22:20,966 --> 00:22:25,262
ஜான் வொய்ட் தாடியில் பாப்கார்ன் இருப்பது
தெரியாமல் அவரைப் பார்ப்பது.

394
00:22:25,262 --> 00:22:26,305
ஆம், தவறவிட முடியாது.

395
00:22:28,682 --> 00:22:29,808
இன்னும் ஒலிவியா கிடைக்கவில்லையா?

396
00:22:30,684 --> 00:22:31,727
தொடர்ந்து முயற்சிக்கிறேன்.

397
00:22:31,727 --> 00:22:33,729
அவள் எப்போதும்
தேடுவதைக் கைவிட்ட பிறகுதான் வருவாள்.

398
00:22:35,272 --> 00:22:36,857
சரி. நான் கைவிடமாட்டேன்.

399
00:22:36,857 --> 00:22:38,734
விரும்புவதை செய். என் பணம் இல்லை.

400
00:22:38,734 --> 00:22:39,776
டேவி எங்கே?

401
00:22:39,776 --> 00:22:42,279
- டேவிட்? ஏன்?
- நான் அவனிடம் பேச வேண்டும்.

402
00:22:42,279 --> 00:22:43,947
- எதைப் பற்றி?
- பெண்களைப் பற்றி.

403
00:22:43,947 --> 00:22:45,407
டேட்டிங் ஆலோசனையா?

404
00:22:46,575 --> 00:22:48,660
அந்த விஷயத்தில் டேவிட்டுக்கு அதிர்ஷ்டம் இல்லை.

405
00:22:48,660 --> 00:22:50,746
டேட்டிங், இப்போது அதற்கு அதுதான் பெயரா?

406
00:22:51,246 --> 00:22:53,290
உன் மனதில் ஏதாவது இருக்கிறதா, திரு. ஷுகர்?

407
00:22:54,082 --> 00:22:55,626
அது வெளியே வரப்போகிறது, பெர்னி.

408
00:22:56,835 --> 00:22:58,504
டேவி. பெண்கள்.

409
00:22:59,546 --> 00:23:02,674
நீங்கள் அவை எல்லாவறையும்
மறைக்க முயற்சிக்கிறீர்கள். அது வெளிவருகிறது.

410
00:23:02,674 --> 00:23:04,843
நீ எதைப் பற்றி பேசுகிறாய் என்று
எனக்கு எதுவும் புரியவில்லை.

411
00:23:04,843 --> 00:23:06,637
டேவி ஏதாவது செய்தானா?

412
00:23:06,637 --> 00:23:08,472
டேவி ஒலிவியாவுக்கு ஏதாவது...

413
00:23:08,472 --> 00:23:11,099
இது சுவாரஸ்யமான உரையாடல் போல தெரிகிறது.

414
00:23:11,099 --> 00:23:12,976
திரு. ஷுகர், இது என் மனைவி வெண்டி.

415
00:23:13,477 --> 00:23:15,562
குறுக்கிடுவதற்கு
வருந்துகிறேன், உங்களைக் கேட்கிறார்கள்.

416
00:23:16,647 --> 00:23:18,065
போகலாம்.

417
00:23:18,065 --> 00:23:19,149
எனக்குப் புரியவில்லை.

418
00:23:19,733 --> 00:23:22,319
டேவி ஒரு பாலியல் குற்றவாளி.
ஒலிவியாவைக் காணவில்லை.

419
00:23:23,529 --> 00:23:25,864
அந்த இரண்டு விஷயங்களும் எப்படி
தொடர்புடையவை என்பது இன்னும் தெரியவில்லை,

420
00:23:25,864 --> 00:23:29,326
ஆனால் இந்தக் குடும்பத்தில் யாரும் அதில் ஒன்றைப்
பற்றிக்கூட கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

421
00:23:48,011 --> 00:23:49,888
இந்த இருவருக்கும் இடையே என்ன நடக்கிறது?

422
00:23:52,975 --> 00:23:56,562
மெலனி நேர்மையாக
நடந்துகொண்டாள் என்று நினைத்தேன், ஆனால் இல்லை.

423
00:23:59,565 --> 00:24:04,069
நான் இதை நீண்ட காலமாக செய்து வருகிறேன். ஆனால்
உண்மையைச் சொல்வதென்றால், மக்கள் என்று வரும்போது,

424
00:24:05,070 --> 00:24:06,530
நான் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.

425
00:24:19,835 --> 00:24:22,588
தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன்.
நான் ஜோனாதன் சீகலின் தனியார் புலனாய்வாளர்.

426
00:24:22,588 --> 00:24:24,047
இல்லை. உள்ளே வாருங்கள், தொந்தரவு செய்யுங்கள்.

427
00:24:31,847 --> 00:24:32,931
நான் க்ளென்.

428
00:24:33,807 --> 00:24:35,976
- திரையிடலுக்கு உற்சாகமாக இருக்கிறீர்களா?
- ஓ, ஆம்.

429
00:24:35,976 --> 00:24:41,857
2.35-க்கு-1 விகிதத்தில் 35 மில்லிமீட்டரில்
111 நிமிடங்கள் லோரெய்ன் எவர்லி.

430
00:24:41,857 --> 00:24:44,943
நான் உற்சாகமாக இருப்பதை நம்புங்கள்.
நான் உற்சாகமாக இல்லாவிட்டால், நான் மனிதனே இல்லை.

431
00:24:44,943 --> 00:24:49,114
சக மேதாவியை சந்தித்ததில் மகிழ்ச்சி.

432
00:24:49,865 --> 00:24:53,493
நீங்கள் ஐந்து வயதிலேயே குரோசாவாவையும்
கோடார்ட்டையும் படித்திருப்பீர்களே?

433
00:24:54,077 --> 00:24:55,078
இல்லை, உண்மையில் இல்லை.

434
00:24:55,996 --> 00:24:59,875
வாழ்க்கையின் பிற்பகுதி வரை
எனக்கு திரைப்படங்களில் ஈடுபாடு ஏற்படவில்லை.

435
00:25:03,837 --> 00:25:05,464
ஆனால், எனக்கு ஈடுபாடு ஏற்பட்டபோது,

436
00:25:06,798 --> 00:25:10,594
கெட்டவர்கள், நல்லவர்கள், தவிர்க்க முடியாத பெண்கள்,
கொலைகார ரோபோக்கள், கோழைத்தனமான சிங்கங்கள்.

437
00:25:10,594 --> 00:25:11,678
எனக்கு அது பிடித்தது. அவை எல்லாவற்றையும்.

438
00:25:21,188 --> 00:25:23,732
ஆச்சரியமானவை, திரைப்படங்களைப்
பார்ப்பதன் மூலம் கற்றுக்கொள்ளக் கூடிய விஷயங்கள்.

439
00:25:24,316 --> 00:25:25,317
ஆம்.

440
00:25:33,075 --> 00:25:34,076
நன்றி, க்ளென்.

441
00:25:34,576 --> 00:25:36,495
- சரி. படத்தைக் கண்டு மகிழுங்கள்.
- செய்வேன்.

442
00:25:38,247 --> 00:25:39,498
நீ மெக்சிகோவில் இருந்திருக்க வேண்டும்...

443
00:25:39,498 --> 00:25:41,750
-"படத்தைக் கண்டு மகிழுங்கள்."
- ...என் கணவருடன்.

444
00:25:42,668 --> 00:25:45,671
நான் முயற்சிக்கிறேன்.
பொறுமையாக இருப்பது கடினம் என்றாலும்.

445
00:25:45,671 --> 00:25:47,172
நீ என்ன, என்னைப் பார்த்துக்கொள்பவனா?

446
00:25:47,172 --> 00:25:49,466
- அதுதான் நான்.
- நான் ஜோனாதனிடம் பேச வேண்டும்.

447
00:25:49,466 --> 00:25:51,677
லூயிஸ் இங்கேயே தங்கி
உன்னைக் கண்காணிக்கச் சொன்னார்.

448
00:25:56,014 --> 00:25:57,266
ஓடிப்போவதைப் பற்றி
யோசித்துக்கொண்டே இருக்கிறேன்.

449
00:25:58,058 --> 00:26:00,978
நான் இந்த இடத்தைவிட்டு வெளியேற விரும்புகிறேன்.
அவரைவிட்டு.

450
00:26:02,187 --> 00:26:05,607
நான் ஒப்புக்கொள்கிறேன்,
இது எனக்குப் பிடித்த ஒன்று.

451
00:26:05,607 --> 00:26:07,359
ஒருவேளை லூயிஸ் இல்லாவிட்டால்?

452
00:26:11,113 --> 00:26:12,406
இது ஆபத்தான பேச்சு, கோரல்.

453
00:26:14,616 --> 00:26:16,702
நான் உன்னிடம்தான் பேசுகிறேன், ஸ்டீவ்.

454
00:26:18,996 --> 00:26:21,373
உன்னிடம் மட்டும்தான் என் ரகசியங்களைச் சொல்கிறேன்.

455
00:26:23,792 --> 00:26:25,711
உன்னை மட்டும்தான் நான் நம்புகிறேன்.

456
00:26:49,276 --> 00:26:51,028
முற்றும்

457
00:26:51,778 --> 00:26:54,281
ஆண்கள் மற்றும் பெண்களே,
படத்தின் தயாரிப்பாளர்.

458
00:26:54,281 --> 00:26:57,993
வாழும் ஹாலிவுட்டின் ஜாம்பவான், ஜோனாதன் சீகல்.

459
00:26:59,328 --> 00:27:02,915
பெரிய திரையில்
இந்தப் படத்தை மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி.

460
00:27:02,915 --> 00:27:04,333
ஓ, மிக்க நன்றி.

461
00:27:04,333 --> 00:27:07,127
ஒரு அற்புதமான படம், அற்புதமான நடிகை.

462
00:27:07,127 --> 00:27:10,589
இதுதான் லோரெய்ன் எவர்லியின்
முதல் முக்கிய பாத்திரம், இல்லையா?

463
00:27:10,589 --> 00:27:13,342
ஆம். அதை அவருக்குக் கொடுத்த மேதை நான்தான்.

464
00:27:14,384 --> 00:27:16,803
- உங்களால் அவரிடமிருந்து கண்களை எடுக்க முடியாது.
- ஆம்.

465
00:27:16,803 --> 00:27:18,013
எப்படியோ, என்னால் முடியவில்லை.

466
00:27:18,013 --> 00:27:20,766
நீங்கள் இணைந்து மேலும் 6 படங்களை எடுத்தீர்கள்

467
00:27:20,766 --> 00:27:23,560
23 ஆண்டுகள் திருமண வாழ்வில் இணைந்திருந்தீர்கள்.

468
00:27:23,560 --> 00:27:26,146
அது கிட்டத்தட்ட ஹாலிவுட்டில் கேள்விப்படாத ஒன்று.

469
00:27:27,356 --> 00:27:29,399
சரி, காதலைத் தவிர...

470
00:27:29,399 --> 00:27:30,567
டேவி சீகல்
பாலியல் வேட்டையில் ஈடுபடுபவரா?

471
00:27:30,567 --> 00:27:32,194
...நாங்கள் ஒருவரையொருவர் மதித்தோம்.

472
00:27:32,194 --> 00:27:33,278
{\an8}பேட் பாய் இன் எ கார்னர்

473
00:27:33,278 --> 00:27:34,571
நான் தொலைந்தேன்.

474
00:27:37,324 --> 00:27:39,701
{\an8}வரும் அழைப்பு
ஸ்டாலிங்ஸ்

475
00:27:39,701 --> 00:27:40,786
அவன்தான்.

476
00:27:44,289 --> 00:27:45,415
அடச்சே.

477
00:27:45,415 --> 00:27:46,542
அதுதான் முக்கியமானது.

478
00:27:47,960 --> 00:27:50,212
- நீங்கள்...
- நேரம் பயங்கரமானது.

479
00:27:50,212 --> 00:27:51,171
பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு

480
00:27:51,171 --> 00:27:53,340
எல்லாம் சரியாக இருக்கிறதா?

481
00:27:54,550 --> 00:27:55,717
பழிவாங்கும் ஆபாச மிரட்டல்
பாலியல் துன்புறுத்தல்

482
00:27:59,221 --> 00:28:00,681
ஹாலிவுட் பிரபலம் மீது பாலியல் துன்புறுத்தலுக்கான
குற்றச்சாட்டு வைத்த நடிகை

483
00:28:01,682 --> 00:28:03,392
ஹேய், ஸ்டாலிங்ஸ், என்ன ஆனது?

484
00:28:03,392 --> 00:28:05,853
இப்போதுதான் தெரிந்தது.
நீ நன்றாக இருக்கிறாயா?

485
00:28:06,687 --> 00:28:09,523
நன்றாக இருக்கிறேன்.
ஆனால் ஆம், அது முட்டாள்தனம்.

486
00:28:10,190 --> 00:28:13,193
நாம் இதை சீக்கிரம் பேசி முடிக்க வேண்டும்.
என்னை மன்னித்துவிடு.

487
00:28:13,193 --> 00:28:14,736
நீ இதைச் செய்ய முடியாது.

488
00:28:14,736 --> 00:28:19,157
அதை நீ தொட முடியாது.
பெண்கள் ஜாலியாக இருந்தபோது நினைவிருக்கிறதா?

489
00:28:19,157 --> 00:28:22,828
சரி... சரி, ஜோனாதன்...
ஜோனாதன் சீகல்.

490
00:28:23,495 --> 00:28:24,997
ஜோனாதன் சீகல்.

491
00:28:24,997 --> 00:28:26,373
அது அமுங்கிவிடும்.

492
00:28:26,373 --> 00:28:30,460
அதைத்தான் நான் நம்புகிறேன்.
ஏனென்றால், மாறாத விதி ஒன்று இருக்கிறது,

493
00:28:30,460 --> 00:28:31,545
- அது...
- திரு. சீகல்.

494
00:28:31,545 --> 00:28:33,088
திரு. சீகல். நலமா?

495
00:28:33,088 --> 00:28:35,257
திரு. சீகல்! இங்கே. இங்கே. இதோ நாற்காலி.

496
00:28:35,257 --> 00:28:38,427
நீ போலீஸிடமோ வழக்கறிஞரிடமோ
அல்லது டெரீஸாவின் நன்னடத்தை அதிகாரியிடமோ

497
00:28:38,427 --> 00:28:42,097
- பேசினால்...
- நீங்கள் நலமா? 911-ஐ அழையுங்கள்.

498
00:28:42,097 --> 00:28:43,807
- பொறுமை. ஐயோ.
- கொஞ்சம் மயக்கம் வருகிறது.

499
00:28:44,600 --> 00:28:45,559
மருத்துவர் இருக்கிறாரா?

500
00:28:46,810 --> 00:28:47,686
அவர் சுவாசிக்கிறாரா?

501
00:28:47,686 --> 00:28:50,230
...என் பெயர் உன் வாயிலிருந்து வந்தால்...

502
00:28:51,106 --> 00:28:52,691
இல்லை.

503
00:28:52,691 --> 00:28:55,527
- வாய்ப்பே இல்லை. நீ கவலைப்பட ஒன்றுமில்லை.
- இதோ இருக்கிறார்.

504
00:28:56,820 --> 00:28:59,114
அவர் மயங்கி விழத் தொடங்கினார்.
சரி, வழிவிடுங்கள்.

505
00:28:59,114 --> 00:29:00,657
நாடித்துடிப்பு இல்லை.

506
00:29:00,657 --> 00:29:03,619
...உன் கண்களில் இருந்து இரத்தம் வரும் வரை
உன் மண்டையில் அடித்துக்கொல்வேன்.

507
00:29:03,619 --> 00:29:04,620
360, சார்ஜ்.

508
00:29:04,620 --> 00:29:05,829
யாரும் தொடாதீர்கள்!

509
00:29:07,706 --> 00:29:08,999
யாரும் தொடாதீர்கள்!

510
00:29:10,167 --> 00:29:11,001
மீண்டும்.

511
00:29:17,216 --> 00:29:18,884
சரி. இன்று இரவு டியவானாவுக்கு செல்கிறேன்.

512
00:29:19,718 --> 00:29:23,430
ஒருவேளை திரும்பி வரும்போது,
நாம் பீர் மற்றும் பெண்களோடு,

513
00:29:23,430 --> 00:29:25,432
இதிலிருந்து உன் மனதை மாற்ற
ஏதாவது செய்யலாம், சரியா?

514
00:29:25,432 --> 00:29:27,601
ஆம், நிச்சயமாக. நல்ல யோசனையாகத் தெரிகிறது.

515
00:29:29,228 --> 00:29:30,646
குட்பை, நண்பா.

516
00:29:34,816 --> 00:29:36,026
ச்சே.

517
00:29:44,743 --> 00:29:49,164
பாய்ஸ். இங்கே வாருங்கள்.

518
00:29:49,164 --> 00:29:50,165
எனக்குக் கொஞ்சம் அன்பைக் கொடுங்கள்.

519
00:29:50,165 --> 00:29:52,125
அழகான நாய்களே,
எனக்குக் கொஞ்சம் அன்பைக் கொடுங்கள்.

520
00:29:52,125 --> 00:29:53,794
எப்படி இருக்கிறாய்? ம்?

521
00:29:53,794 --> 00:29:56,046
சரி. பெண்களை இங்கிருந்து வெளியேற்றுங்கள்!

522
00:30:01,718 --> 00:30:03,887
சீக்கிரம்! செய்யுங்கள்.

523
00:30:05,222 --> 00:30:06,223
நீ கிளம்பத் தயாரா?

524
00:30:06,223 --> 00:30:07,140
ஆம், பாஸ்.

525
00:30:07,140 --> 00:30:08,642
சரி, நான் தொழில் விஷயமாக தெற்கே செல்கிறேன்.

526
00:30:08,642 --> 00:30:10,727
ஆனால் நான் இந்த கிளிஃபோர்ட்
விஷயத்தைத் தொடர விரும்புகிறேன், சரியா?

527
00:30:10,727 --> 00:30:13,313
அந்த மெலனி மேத்யூஸைப் பற்றி விசாரி,
அந்த நல்ல முடி கொண்ட,

528
00:30:13,313 --> 00:30:15,732
திரு. பரோல் அதிகாரி
யாரென்று எனக்குத் தெரிய வேண்டும், சரியா?

529
00:30:15,732 --> 00:30:17,025
அதுதான் உங்கள் வேலை, முட்டாள்களே.

530
00:30:17,651 --> 00:30:20,237
எனக்காக இதை கவனித்துக்கொள்வீர்கள் என்று உங்கள்
இருவரையும் நம்புகிறேன். அதைக் கெடுத்துவிடாதீர்கள்.

531
00:30:20,237 --> 00:30:22,155
- புரிந்தது.
- நீ...

532
00:30:23,824 --> 00:30:25,659
நீ என் பாதுகாவலர். என்ன?

533
00:30:26,869 --> 00:30:30,205
இந்தக் கதவுக்கு பின்னால் இருப்பது
என் சிறப்பு திட்டம்.

534
00:30:31,957 --> 00:30:33,041
என்னுடையது, சரியா?

535
00:30:33,041 --> 00:30:35,252
எனவே யாராவது இதற்கு அருகில் வந்தால்,

536
00:30:35,252 --> 00:30:37,796
நீ அவர்களை தலையில் சுட வேண்டும். புரிந்ததா?

537
00:30:37,796 --> 00:30:38,797
கண்களுக்கு இடையில்.

538
00:30:39,798 --> 00:30:41,967
நாய்களுக்கு உணவளிக்க மறக்காதே.

539
00:30:41,967 --> 00:30:43,844
சரி, போகலாம். போகலாம்.

540
00:31:01,904 --> 00:31:02,988
மாரடைப்பு.

541
00:31:03,989 --> 00:31:08,160
ஆனால் அவர் குணமாகிவிடுவார் என்கிறார்கள்.
ஜோனாதனுக்கு இது நல்ல செய்தி என்று நினைக்கிறேன்.

542
00:31:15,417 --> 00:31:18,629
ஆனால் நான், நேரத்தை வீணடித்துக்கொண்டிருக்கிறேன்.

543
00:31:21,048 --> 00:31:24,134
இருந்தாலும், இன்றிரவு அந்தப் படத்தைப்
பார்த்தது எனக்கு ஒன்றை ஞாபகப்படுத்தியது.

544
00:31:40,734 --> 00:31:42,361
விண்ட்ஸ் ஆஃப் சேன்ஜ்

545
00:32:03,382 --> 00:32:07,135
30 ஆண்டுகளுக்குப் பிறகு
அவள் ஏன் அதே உடையை அணிந்தாள்?

546
00:32:07,636 --> 00:32:08,637
அதே உடை.

547
00:32:13,767 --> 00:32:16,061
அவள் ஏன் அதே உடையை அணிந்தாள்...

548
00:32:17,980 --> 00:32:18,981
30 ஆண்டுகளுக்குப் பிறகு?

549
00:32:30,659 --> 00:32:31,660
மீண்டும் வணக்கம்.

550
00:32:35,038 --> 00:32:40,169
சில நேரங்களில் முழு மனிதகுலமும்
நாசமாய் போய்விட்டது என்று நினைக்கிறேன்.

551
00:32:44,131 --> 00:32:46,592
யாரோ என்னைப்
கண்காணிக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

552
00:32:48,051 --> 00:32:51,263
அது நிஜமாகவே சித்தப்பிரமை போல தெரியலாம்.
ஆனால்...

553
00:32:52,681 --> 00:32:55,893
இல்லை, நீ சொன்னது சரிதான், ஒலிவியா.

554
00:33:12,868 --> 00:33:13,869
எனக்கு பயமாக இருக்கிறது.

555
00:34:09,925 --> 00:34:11,927
வசனத் தமிழாக்கம் அருண்குமார்

