1
00:02:10,380 --> 00:02:11,965
- சரி, முடிந்தது.
- ஆம்.

2
00:02:14,092 --> 00:02:15,093
அவனைக் காயப்படுத்த வேண்டாம்.

3
00:02:16,011 --> 00:02:17,221
அவன் ஓடிப்போனால்?

4
00:02:17,221 --> 00:02:18,972
அவனைக் காயப்படுத்தாமல் இருக்க முயற்சி செய்.

5
00:02:20,307 --> 00:02:21,266
நிச்சயமாக.

6
00:02:30,359 --> 00:02:32,444
மோட்டல்
அறை காலியில்லை

7
00:02:41,411 --> 00:02:44,957
மக்கள் பிரச்சினையில் இருக்கும்போது, அவர்கள் பேச
வேண்டும். ஆனால் பழமொழி உனக்கே தெரியும்.

8
00:02:46,250 --> 00:02:47,334
எனக்குத் தெரியாதது என்னைக் காயப்படுத்தாதா?

9
00:02:51,463 --> 00:02:52,714
- ஹேய்.
- ஹேய்.

10
00:02:53,882 --> 00:02:54,883
எப்படி இருக்கிறாய்?

11
00:02:57,928 --> 00:03:01,640
எப்படி இருக்கிறேனா? மனிதனாக, ஆனால்...

12
00:03:03,892 --> 00:03:05,018
நன்றாக இருக்கிறேன்.

13
00:03:05,018 --> 00:03:09,147
நீ படுக்கையில் ஓய்வெடுக்க வேண்டும் என்று
ஹென்றி சொன்னார்.

14
00:03:09,731 --> 00:03:11,817
நீ தரையில் மயங்கி கிடப்பதாக அவர் சொன்னதாக
நான் நினைக்கவில்லை.

15
00:03:11,817 --> 00:03:13,986
நான் மயங்கவில்லை.
நான் தரையில் தூங்கிக்கொண்டிருந்தேன்.

16
00:03:13,986 --> 00:03:15,404
தெரிகிறது.

17
00:03:17,948 --> 00:03:19,449
நீ தூக்கத்தில் உளறிக்கொண்டிருந்தாய்.

18
00:03:21,451 --> 00:03:22,870
நீ ஒருவரை பெயர் சொல்லி அழைத்தாய்.

19
00:03:22,870 --> 00:03:25,497
அது வேறு மொழியில் கேட்டது.

20
00:03:28,125 --> 00:03:29,501
நீ வேறு சில மொழிகளிலும் பேசுவாயா?

21
00:03:30,085 --> 00:03:31,837
ஆம், நான் வேறு பல மொழிகளிலும் பேசுவேன்.

22
00:03:35,841 --> 00:03:36,842
மணி என்ன?

23
00:03:37,384 --> 00:03:38,468
பத்து மணிக்கு மேல் இருக்கும்.

24
00:03:39,178 --> 00:03:42,264
நான் குளித்துவிட்டு வேலையைத் தொடங்க வேண்டும்.

25
00:03:42,264 --> 00:03:43,307
நான் காபி வாங்கி வருகிறேன்.

26
00:03:43,307 --> 00:03:44,808
- இல்லை, மெலனி.
- ஷுகர்,

27
00:03:44,808 --> 00:03:47,686
எதற்கும் விளக்கமளிக்காமல்
நடக்கும் விஷயங்களில் என்னை

28
00:03:47,686 --> 00:03:51,190
சம்பந்தப்படுத்த முடியும் என்று
உறுதியாக நம்புகிறாயா?

29
00:03:53,901 --> 00:03:54,860
வெளிப்படையாக இல்லை.

30
00:03:55,652 --> 00:03:57,487
- நான் காபி வாங்கப் போகிறேன்.
- சரி. காபி.

31
00:04:01,825 --> 00:04:05,245
எல்லாவற்றையும் அவளிடம் சொல்ல நினைக்கிறேன்,
ஆனால் முடியவில்லை. சொல்லவும் மாட்டேன்.

32
00:04:18,550 --> 00:04:19,551
டேவிட் சீகல்
1988 - 2023

33
00:04:19,551 --> 00:04:24,139
"மனித வாழ்க்கை மிகக்குறுகியது.
இறைவனால் படைக்கப்பட்ட எல்லாவற்றுக்கும் இறப்பு உண்டு.

34
00:04:25,265 --> 00:04:26,850
வெள்ளம் போல அடித்துச் செல்லப்படுகிறது.

35
00:04:27,851 --> 00:04:32,606
அவர்கள் கனவு போல, காலையில் முளைக்கும்
புல்லுக்கு ஒப்பானவர்கள்.

36
00:04:34,525 --> 00:04:40,280
காலை வேளையில், அது செழிப்பாக வளரும்,
ஆனால் மாலை வேளையில், அது வாடிப்போகும்."

37
00:04:59,508 --> 00:05:00,843
கார்லோஸ், எங்களை தனியாக விடு.

38
00:05:05,472 --> 00:05:10,185
உன் அம்மா இறந்தபோது...
அது எனக்கு கடினமாக இருந்தது.

39
00:05:11,645 --> 00:05:14,481
ஆனால் அவள் இறக்கும் நேரம்
வந்துவிட்டது என்று தெரிந்ததால்...

40
00:05:16,400 --> 00:05:17,609
கொஞ்சம் ஆறுதல் அடைந்தேன்.

41
00:05:20,320 --> 00:05:21,321
ஆனால் இது?

42
00:05:25,409 --> 00:05:26,910
இது வேறு.

43
00:05:30,163 --> 00:05:34,042
தங்கள் பிள்ளைகளைவிட
அதிக காலம் வாழும் பெற்றோருக்கு.

44
00:05:38,213 --> 00:05:40,549
நான் மிகவும் வருந்துகிறேன்.

45
00:05:51,602 --> 00:05:53,270
ஒலிவியா இன்னும் உங்களை தொடர்புகொள்ளவில்லையா?

46
00:05:53,770 --> 00:05:56,148
இல்லை, நான் சொல்லி இருப்பேனே.

47
00:05:58,358 --> 00:06:01,195
கடந்த காலத்தில் அவள்
மிகவும் பொறுப்பற்றவளாக இருந்தபோது கூட,

48
00:06:01,195 --> 00:06:04,072
மிகவும் கடினமான நேரத்திலும் கூட,
அவள் இங்கே இருந்திருப்பாள்.

49
00:06:06,366 --> 00:06:08,202
அவளுக்கு ஏதாவது நடந்திருக்கும் என்று
நினைக்கிறீர்களா?

50
00:06:11,079 --> 00:06:13,123
ஆம், நினைக்கிறேன்.

51
00:06:17,294 --> 00:06:18,128
கார்லோஸ்.

52
00:06:21,089 --> 00:06:26,762
அவர்கள் பாரில் உட்கார்ந்துகொண்டு
நான் சாப்பிட பண உதவி செய்தனர்

53
00:06:26,762 --> 00:06:31,183
"அட, நீ இங்கே என்ன செய்கிறாய்?"
என்பார்கள்

54
00:06:48,867 --> 00:06:51,870
வேசிமகனே, என்னைத் தொடாதே!

55
00:06:52,913 --> 00:06:54,831
என்னைத் தொடாதே!

56
00:07:09,429 --> 00:07:10,681
மாஸின் ஃபோன்.

57
00:07:11,723 --> 00:07:13,100
திரும்ப அழை
தொடர்பிலேயே இரு.

58
00:07:13,100 --> 00:07:14,935
யாரோ அவனைத் தேடுகிறார்கள்.

59
00:07:30,409 --> 00:07:32,119
அதாவது, கேட்க நிறைய கேள்விகள் இருக்கின்றன.

60
00:07:34,121 --> 00:07:35,122
ஜென் யார்?

61
00:07:35,789 --> 00:07:38,792
உன் தூக்கத்தில் பேசியதிலிருந்து நான் தெரிந்துகொண்ட
ஒரே வார்த்தை அதுதான். ஜென். யார் அவள்?

62
00:07:39,543 --> 00:07:40,836
அவள் என் சகோதரி.

63
00:07:40,836 --> 00:07:43,297
உன் சகோதரி. எங்கே இருக்கிறாள்?
அவளுக்கு ஏதாவது நடந்துவிட்ட...

64
00:07:43,297 --> 00:07:44,840
யாரோ வருகிறார்கள்.

65
00:07:57,269 --> 00:07:58,812
- அது மில்லர்.
- யார் மில்லர்?

66
00:07:58,812 --> 00:08:00,022
என் முதலாளி.

67
00:08:00,022 --> 00:08:02,691
ஷுகர், கதவைத் திற.
நான் உன்னிடம் பேச வேண்டும்.

68
00:08:02,691 --> 00:08:04,193
இவர்தான் உன்னைக் குத்த முயற்சி செய்தவரா?

69
00:08:05,152 --> 00:08:06,320
இல்லை. இல்லை, இவன் என் நண்பன்.

70
00:08:06,320 --> 00:08:07,988
உன் நண்பர் என்றால், ஏன் கதவைத் திறக்கவில்லை?

71
00:08:09,031 --> 00:08:10,240
நான் விரும்பவில்லை என்பதால்.

72
00:08:11,325 --> 00:08:13,035
உடை மாட்டும் அலமாரியில் ஒளிந்துகொள்வோமா?

73
00:08:13,035 --> 00:08:14,786
அது அவனை தடுத்து நிறுத்தாது.

74
00:08:28,258 --> 00:08:29,259
வெளியே போயிருப்பார்கள்.

75
00:08:55,953 --> 00:08:56,912
போகலாம்.

76
00:08:58,830 --> 00:08:59,998
ஹேய்.

77
00:09:01,041 --> 00:09:04,211
அதற்காக வருந்துகிறேன்.
நான் உன்னிடம் பேச வேண்டும்.

78
00:09:08,173 --> 00:09:10,008
காரை எடு. இதோ.

79
00:09:18,684 --> 00:09:20,352
ஏன் மில்லர் இதைச் செய்கிறான்?

80
00:09:20,352 --> 00:09:23,438
ஏதோ நடந்திருக்க வேண்டும்.
ஏதோ மாறியிருக்க வேண்டும்.

81
00:09:28,610 --> 00:09:29,528
நிறுத்து.

82
00:09:50,132 --> 00:09:52,301
அடக் கடவுளே. இப்போது என்ன நடந்தது?

83
00:09:53,927 --> 00:09:55,721
அந்த வயதானவனால், ஒரு கையில் தூக்க முடியுமா?

84
00:09:56,680 --> 00:09:58,432
அவன் தலையில் அடித்துவிட்டேன்.
அடிக்க வேண்டியிருந்தது.

85
00:09:58,432 --> 00:10:00,350
- ஆம். சரி, அவனுக்கு ஒன்றும் ஆகாது.
- அவனுக்கு ஒன்றும் ஆகாதுதானே?

86
00:10:00,350 --> 00:10:03,061
சரி. அவன் எப்படி உன் நண்பன் ஆனான்?

87
00:10:05,022 --> 00:10:06,690
அவனை நீண்ட காலமாகத் தெரியும்.

88
00:10:06,690 --> 00:10:08,692
"நான் பேச வேண்டும்."
அதற்கு என்ன அர்த்தம்?

89
00:10:08,692 --> 00:10:10,277
எதைப் பற்றி பேச வேண்டும்?
நீ என்ன செய்தாய்?

90
00:10:17,451 --> 00:10:18,452
சரி, கேள்.

91
00:10:19,244 --> 00:10:20,662
கேள், நான்...

92
00:10:22,039 --> 00:10:23,165
கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

93
00:10:23,165 --> 00:10:25,959
சரி, ஆனால்... அவன் பெயர் மில்லர்.

94
00:10:25,959 --> 00:10:30,714
அவனும், இன்னும் சிலரும்,
நாங்கள் ஒன்றாக வேலை செய்கிறோம்.

95
00:10:30,714 --> 00:10:32,883
நீ என்ன சொல்கிறாய்?
தனியார் புலனாய்வாளர்கள் போலவா?

96
00:10:32,883 --> 00:10:35,344
இல்லை, இல்லை... அதாவது...
அது என் பகல் நேர வேலை,

97
00:10:35,344 --> 00:10:38,138
ஆனால் ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கென்று
தனிப்பட்ட பகல் நேர வேலை இருக்கிறது.

98
00:10:42,392 --> 00:10:43,560
நான் ஒரு குழுவின் உறுப்பினர்கள்.

99
00:10:44,394 --> 00:10:48,065
எங்களைப் பற்றி யாரும் எதுவும் தெரிந்துகொள்ள
அனுமதிக்கப்படாத ஒரு அமைப்பு.

100
00:10:50,108 --> 00:10:53,487
நான்... உன்னிடம் சொல்ல முடியாத ஒன்று.

101
00:10:53,487 --> 00:10:56,490
நான் துண்டு மாட்டும் கம்பியால்
ஒருவன் மண்டையை உடைத்திருக்கிறேன்.

102
00:10:56,490 --> 00:10:58,408
- எனவே நீ என்னிடம் சொல்லப் போகிறாய்.
- அதைப் பாராட்டுகிறேன்.

103
00:10:58,408 --> 00:11:00,285
ஆனால் அது மிகவும் ஆபத்தானது என்பதால்
அதை உன்னிடம் சொல்ல முடியவில்லை.

104
00:11:01,495 --> 00:11:02,955
உனக்கு மட்டும் இல்லை,

105
00:11:02,955 --> 00:11:06,041
அது எனக்கும், என் பல நண்பர்களுக்கும்
ஆபத்தானது. நான் அக்கறைக்காட்டுபவர்களுக்கும்.

106
00:11:07,709 --> 00:11:10,170
அது கொஞ்ச காலமாக
நான் பாதுகாக்கும் ஒரு இரகசியம்.

107
00:11:12,548 --> 00:11:13,715
நாங்கள் எல்லோரும்.

108
00:11:17,094 --> 00:11:19,137
நான் உன்னிடம் சொல்ல விரும்பும் அளவுக்கு

109
00:11:20,347 --> 00:11:24,226
அதை யாரிடமும் சொல்ல விரும்பியதில்லை,
ஆனால்... என்னால் முடியாது.

110
00:11:31,650 --> 00:11:32,484
நீ ஒரு உளவாளி.

111
00:11:34,152 --> 00:11:35,362
பல மொழிகள் தெரிந்திருக்கிறது.

112
00:11:35,362 --> 00:11:36,822
எப்போதும் விழிப்புடன் இருக்கிறாய்,
கவனமாக கேட்கிறாய்.

113
00:11:36,822 --> 00:11:39,700
உன்னைப் பற்றி சொல்வதை விட...
மற்றவர்கள் சொல்வதை கேட்பதில் ஆர்வம் காட்டுகிறாய்.

114
00:11:39,700 --> 00:11:42,870
அதாவது, அடக் கடவுளே.
எனக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

115
00:11:42,870 --> 00:11:45,038
கன்னி ராசி தரத்தின்படி கூட,
நான் ஆச்சரியப்பட்டிருக்க வேண்டும்.

116
00:11:45,038 --> 00:11:47,124
நான் உன்னிடம் கேள்விகள் கேட்டதற்கு ஒரே காரணம்,

117
00:11:47,124 --> 00:11:49,126
நானே அதற்கான பதில்களை
தெரிந்துகொள்ள விரும்பியதால்தான்.

118
00:11:49,710 --> 00:11:51,003
நீ ஒரு உளவாளி.

119
00:11:52,379 --> 00:11:55,424
அதாவது, விஷயம் அதுதான்,
இல்லையா? நீ ஒரு அயல்நாட்டு உளவாளி.

120
00:12:00,429 --> 00:12:01,763
நாங்கள் இங்கே கண்காணிப்பதற்காக வந்திருக்கிறோம்.

121
00:12:03,724 --> 00:12:05,142
அடச்சே.

122
00:12:05,893 --> 00:12:07,519
அது எங்கள் பணி.
அதுதான் எங்கள் ஒரே பணி.

123
00:12:07,519 --> 00:12:09,313
அடக் கடவுளே.
என்னிடம் ஒரு சிகரெட் இருந்திருக்கலாம்.

124
00:12:12,065 --> 00:12:13,233
- தோர்ப் பற்றி சொல்வாயா?
- அவனைப் பற்றி என்ன?

125
00:12:13,233 --> 00:12:14,568
அவனும் உங்களில் ஒருவன், சரியா?

126
00:12:15,360 --> 00:12:16,403
ஆம்.

127
00:12:16,403 --> 00:12:18,655
- ஆனால் உன்னை அவர் துரத்தவில்லை. உதவுகிறாரா?
- அடடா.

128
00:12:18,655 --> 00:12:19,740
என்ன?

129
00:12:19,740 --> 00:12:21,283
ஹென்றி. அடுத்ததாக அவனிடம்தான் போவார்கள்.

130
00:12:21,283 --> 00:12:22,951
நாம் போக வேண்டும்.
பல்கலைக்கழகத்துக்குப் போக வேண்டும்.

131
00:12:23,869 --> 00:12:28,373
எனவே, ஆம், அந்த லார்சன் அத்தியாயத்தில்
சிலவற்றைப் பார்ப்போம்.

132
00:12:28,373 --> 00:12:31,210
நாம் கடைசியாக சந்தித்தபோது,
கற்காலத்தின் பிற்பகுதியைப் பார்த்தோம்.

133
00:12:32,586 --> 00:12:35,839
அடுத்து நாம் பார்க்கப் போவது இடைக் கற்காலம்.

134
00:12:37,049 --> 00:12:41,929
சுமார் 30,000 ஆண்டுகளுக்கு முந்தை காலத்தைப் பற்றி
பார்க்கும்போது, நியாண்டர்தால்கள், ஹோமோ சேபியன்கள்,

135
00:12:41,929 --> 00:12:44,181
இனங்களின் வேறுபாடு.

136
00:12:44,181 --> 00:12:45,390
எடு, ஹென்றி.

137
00:12:47,601 --> 00:12:48,602
அவன் அழைப்பை எடுக்கவில்லை.

138
00:12:49,603 --> 00:12:51,855
சிக்கலானது, முரண்பாடு கொண்டது.

139
00:12:51,855 --> 00:12:55,359
ஒரே நேரத்தில் பலவிதமான எதிர் உணர்வுகளையும்

140
00:12:55,359 --> 00:12:58,403
எண்ணங்களையும் தாங்கும் திறன்.

141
00:12:59,696 --> 00:13:04,201
அதனால்தான் நீங்கள் இன்னும் இங்கே இருக்கிறீர்கள்,
உங்கள் மூதாதையர்கள் இல்லை.

142
00:13:07,913 --> 00:13:08,997
உங்களுக்கு என்ன வேண்டும்?

143
00:13:08,997 --> 00:13:12,125
ஆம், நான் ஒரு நண்பரைத் தேடுகிறேன்.
பேராசிரியர் ஹென்றி தோர்ப், மானுடவியல்.

144
00:13:12,125 --> 00:13:13,627
அவரைத்தான் இன்று எல்லோரும் தேடுகிறீர்கள்.

145
00:13:13,627 --> 00:13:15,087
ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?

146
00:13:37,359 --> 00:13:38,485
ஒருவேளை அவரை தவறவிட்டோமோ?

147
00:13:38,485 --> 00:13:40,153
ச்சே. அது மில்லராக இருக்க வேண்டும்.

148
00:13:52,457 --> 00:13:53,458
ஒரு மணி நேரத்தில் அங்கே இரு.

149
00:13:53,458 --> 00:13:55,127
யாரோ அவர்களின் தடயங்களை அழிக்கிறார்கள்.

150
00:13:56,378 --> 00:13:59,173
ஸ்டாலிங்ஸுடன் தொடர்புடைய
எல்லோரையும் அப்புறப்படுத்துகிறார்கள்.

151
00:13:59,173 --> 00:14:00,465
அதனால்?

152
00:14:01,091 --> 00:14:05,053
அவர்களுக்கு முன்னால் நான் மாஸிடம்
செல்ல வேண்டும். ஹென்றி காத்திருக்கட்டும்.

153
00:14:05,846 --> 00:14:06,889
சரி, போகலாம்.

154
00:14:18,400 --> 00:14:20,152
உன்னைக் கோபப்படுத்தும்
ஒன்றை நான் சொல்ல வேண்டும்.

155
00:14:20,152 --> 00:14:21,695
ஆனால் அதைப் பொறுத்தவரை எனக்கும் கோபம்தான்.

156
00:14:21,695 --> 00:14:23,030
என்ன?

157
00:14:23,030 --> 00:14:25,616
என் மக்கள்... மில்லரும் இன்னும் சிலரும்...

158
00:14:27,409 --> 00:14:29,453
அவர்கள் நான் ஒலிவியாவைக்
கண்டுபிடிப்பதைத் தடுக்க முயற்சிக்கிறார்கள்.

159
00:14:30,621 --> 00:14:32,915
பொறு. உன் ஆட்கள் ஒலிவியாவைக் கடத்தினார்களா?

160
00:14:32,915 --> 00:14:34,666
இல்லை. இல்லை. இல்லை, அவர்கள்...

161
00:14:34,666 --> 00:14:35,876
அவளை என்ன செய்தார்கள்?

162
00:14:35,876 --> 00:14:37,628
- ஒன்றுமில்லை.
- கடவுளே.

163
00:14:37,628 --> 00:14:40,506
நாங்கள் மக்களைக் காயப்படுத்துவதில்லை. நாங்கள்
அப்படிப்பட்டவர்கள் இல்லை. சரியா? சத்தியமாக.

164
00:14:41,507 --> 00:14:43,759
- நான் இதைச் சரிசெய்வேன்.
- கடவுளே.

165
00:15:14,164 --> 00:15:15,541
அவள் அங்கே இருப்பதாக நினைக்கிறாயா?

166
00:15:15,541 --> 00:15:17,960
இல்லை, அவன் ஸ்டாலிங்ஸ் குழுவின் ஒருவன்.

167
00:15:18,585 --> 00:15:20,671
அங்கே வசிக்கிறான், நாம் தெரிந்துகொள்ள
வேண்டிய சில விஷயங்கள் அவனுக்கு தெரிந்திருக்கலாம்.

168
00:15:24,007 --> 00:15:25,175
நீ இங்கேயே இரு. சரியா?

169
00:15:26,552 --> 00:15:28,011
பரவாயில்லை,
ஏனென்றால் எனக்கு அங்கே செல்ல பிடிக்கவில்லை.

170
00:15:28,011 --> 00:15:29,429
சரி.

171
00:16:06,049 --> 00:16:07,050
நீ என்ன செய்கிறாய்?

172
00:16:07,050 --> 00:16:09,511
என் மனதை மாற்றிக்கொண்டேன்.
உன்னுடன் வருகிறேன்.

173
00:16:11,555 --> 00:16:12,890
- அருகிலேயே இரு.
- சரி.

174
00:16:53,639 --> 00:16:54,640
ஷுகர்.

175
00:17:03,524 --> 00:17:05,733
சரி. போகலாம். வா

176
00:17:14,785 --> 00:17:16,244
விஷயங்கள் கையை மீறி போய்விட்டன.

177
00:17:16,869 --> 00:17:20,165
இது நாம் எல்லோரும் பொறுமைகாக்க வேண்டிய
நேரமாக இருக்கலாம். ஆசுவாசப்படுத்திக்கொள்.

178
00:17:21,208 --> 00:17:23,669
அந்த "பொறுமையாக இருக்க வேண்டிய" விஷயம் போல.

179
00:17:23,669 --> 00:17:26,003
நான் மிகவும் திறமையானவன் என்று
நிறைய பேர் என்னிடம் சொல்கிறார்கள்.

180
00:17:26,713 --> 00:17:28,464
ஆனால் இன்னும் என்னால்
நடக்கப்போவதை கணிக்க முடிவதில்லை.

181
00:17:29,466 --> 00:17:31,927
நிச்சயமாக. அது ஒரு வழி.

182
00:17:37,599 --> 00:17:39,518
கிளிண்டன் வந்து உன்னை வேறு அறைக்கு மாற்றுவான்,

183
00:17:39,518 --> 00:17:41,478
தேவைப்பட்டால். நான் மீண்டும் வருவேன்...

184
00:17:42,896 --> 00:17:44,523
எனக்குத் தெரியவில்லை.
ஆனால் திரும்பி வருவேன்.

185
00:17:45,023 --> 00:17:46,149
- சரி.
- சரி.

186
00:17:49,069 --> 00:17:50,904
ஹேய். நீ நலமா?

187
00:17:52,739 --> 00:17:54,032
அவள் இல்லாமல் நான் திரும்பி வரமாட்டேன்.

188
00:17:56,869 --> 00:17:57,703
நல்லது.

189
00:18:20,726 --> 00:18:21,727
இதுதான்.

190
00:18:23,770 --> 00:18:25,522
இன்றிரவுதான் எனக்கு சில பதில்கள் கிடைக்கும் இரவு.

191
00:18:28,108 --> 00:18:29,484
ஏதோவொரு வழியில்.

192
00:18:43,832 --> 00:18:47,002
மில்லர்

193
00:19:10,817 --> 00:19:12,694
நான் அவளிடம் நிஜமாகத்தான் சொன்னேன்.

194
00:19:12,694 --> 00:19:13,904
நாங்கள் இப்படிப்பட்டவர்கள் இல்லை.

195
00:19:14,738 --> 00:19:16,823
கடத்தல். கொலை.

196
00:19:18,534 --> 00:19:20,577
மாஸ் மோசமானவனா என்பது ஒரு விஷயமே இல்லை.

197
00:19:21,954 --> 00:19:24,039
நாங்கள் மக்களை காயப்படுத்தக் கூடாது.

198
00:19:26,250 --> 00:19:30,379
இங்கே இருப்பதற்கான ஒரே காரணம், எங்கள்
அமைதியான வாழ்க்கை முறையைப் பாதுகாப்பதுதான்.

199
00:19:32,840 --> 00:19:34,341
ஆனால் இந்த இடம் எங்களை மாற்றுகிறது.

200
00:19:36,093 --> 00:19:37,177
இது எங்கள் எல்லோரையும் மாற்றுகிறது.

201
00:20:38,488 --> 00:20:39,656
என்ன நடக்கிறது?

202
00:20:44,828 --> 00:20:45,662
வேலை முடிந்தது.

203
00:20:47,789 --> 00:20:48,999
நம்மை திரும்ப அழைக்கிறார்கள்.

204
00:20:50,125 --> 00:20:51,460
என்ன?

205
00:20:51,460 --> 00:20:53,337
- உண்மைதான்.
- ஹென்றி.

206
00:20:54,213 --> 00:20:57,049
நான் நன்றாக இருக்கிறேன்.
நான்... நீ அவள் சொல்வதைக் கேட்பது நல்லது.

207
00:20:57,049 --> 00:20:59,092
பொறு. பொறு. என்ன?

208
00:20:59,885 --> 00:21:01,512
இன்று காலை வீட்டிலிருந்து தகவல் வந்தது.

209
00:21:01,512 --> 00:21:02,930
அதனால்தான் மில்லர் உன்னுடன் பேச விரும்பினான்.

210
00:21:02,930 --> 00:21:03,889
அதனால்தான் இங்கே இருக்கிறோம்.

211
00:21:03,889 --> 00:21:05,933
- வெளியேறும் திட்டங்கள் பற்றி விவாதிக்கிறோம்.
- வேலை முடியவில்லை.

212
00:21:05,933 --> 00:21:07,184
ஆம், முடிந்தது.

213
00:21:07,684 --> 00:21:11,438
இன்னும் ஓரிரு நாளில்,
நீயும் இந்த அறையில் இருக்கும் எல்லோரும்,

214
00:21:11,438 --> 00:21:13,232
நம் கூட்டாளிகள் எல்லோரும்,
கிரகத்தை விட்டு கிளம்பிவிடுவோம்.

215
00:21:13,232 --> 00:21:14,942
- யார் சொன்னது?
- வீட்டிலிருந்து செய்தி வந்தது.

216
00:21:15,817 --> 00:21:17,945
இப்போது,
வெளியேறும் விவரங்களைப் பற்றி மில்லருடன் பேசு.

217
00:21:17,945 --> 00:21:20,197
இல்லை. நல்ல முயற்சி.
ஆனால் அவள் இல்லாமல் நான் போகப் போவதில்லை.

218
00:21:20,864 --> 00:21:22,115
ஆம், நீ போகிறாய்.

219
00:21:24,660 --> 00:21:25,786
அவள் இல்லாமல் நான் போகப் போவதில்லை.

220
00:21:27,204 --> 00:21:28,205
ஒலிவியா சீகல்.

221
00:21:29,331 --> 00:21:32,459
நான் தேடிக்கொண்டிருக்கும் பெண்.

222
00:21:34,169 --> 00:21:36,755
மர்மமான முறையில், சந்தேகத்திற்கு இடமில்லாமல்
இந்த அறையில் இருக்கும் சிலருக்கு

223
00:21:36,755 --> 00:21:38,674
நான் கண்டுபிடிப்பதை விரும்பாத அந்த பெண்!

224
00:21:39,258 --> 00:21:40,259
இப்போது என்ன?

225
00:21:40,259 --> 00:21:42,344
இவ்வளவு காலம் கழித்து,
திடீரென்று, எச்சரிக்கை இல்லாமல்,

226
00:21:42,344 --> 00:21:44,054
நாம் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு
போக வேண்டுமா? இல்லை!

227
00:21:44,054 --> 00:21:46,348
ஒலிவியா சீகல் நம்முடைய திட்டம் இல்லை, ஷுகர்.

228
00:21:47,182 --> 00:21:48,976
நீ இங்கே முக்கிய நோக்கத்தை மறந்துவிட்டாய்.

229
00:21:48,976 --> 00:21:50,310
அவள் எங்கே இருக்கிறாள்?

230
00:21:50,310 --> 00:21:52,855
- ஜான்.
- பொறு. இனி மழுப்பல்கள் கூடாது. பொய் கூடாது.

231
00:21:52,855 --> 00:21:55,148
- ஜான்.
- பொறு, ஹென்றி! தயவுசெய்து.

232
00:21:58,610 --> 00:22:00,946
அவள் எங்கே என்று
யாராவது உடனே சொல்லுங்கள்.

233
00:22:00,946 --> 00:22:02,614
இந்த அறையில் இருக்கும் ஒருவருக்குத்
தெரியும் என்று எனக்குத் தெரியும்.

234
00:22:02,614 --> 00:22:04,116
ஒப்புக்கொள்கிறேன். நான் சொல்கிறேன்.

235
00:22:04,116 --> 00:22:06,285
இல்லை.
நீ அப்படி எதுவும் செய்யக் கூடாது, ஹென்றி.

236
00:22:06,285 --> 00:22:08,745
நீ வென்றாய். நாம் எல்லோரும் புறப்படுகிறோம்.
எனவே இப்போது என்ன?

237
00:22:08,745 --> 00:22:10,414
நான் சொல்கிறேன். வா.

238
00:22:16,170 --> 00:22:17,504
இன்றுதான் இதையெல்லாம் தெரிந்துகொண்டேன்.
நான்...

239
00:22:17,504 --> 00:22:20,507
- அவள் எங்கே என்று தெரியுமா? சொல்.
- எனக்கு ஒரு முகவரியைக் கொடுத்தார்கள். ஆம்.

240
00:22:20,507 --> 00:22:21,675
சரி. அதைக் காட்டு.

241
00:22:22,634 --> 00:22:23,844
நல்லது. அதை எழுதித்தருகிறேன்.

242
00:22:24,720 --> 00:22:27,973
முகவரி. இத்தனைக்கும் பிறகு
ஒரு முகவரி இருக்கிறது. நான்...

243
00:22:37,274 --> 00:22:38,901
என்னால் முடிந்தவரை விளக்கவா?

244
00:22:40,777 --> 00:22:42,112
தயவுசெய்து.

245
00:22:42,112 --> 00:22:44,656
சரி. எனவே...

246
00:22:44,656 --> 00:22:48,035
அவர்கள் நம்மைப் பற்றி கண்டுபிடித்துவிட்டார்கள்...
மனிதர்கள்.

247
00:22:48,035 --> 00:22:49,912
ஆம். சிலருக்குத் தெரிந்துவிட்டது.

248
00:22:55,417 --> 00:22:56,919
அவனைத்தான் நாம் பாதுகாக்கிறோமா?

249
00:23:01,173 --> 00:23:02,257
அவர்கள் சக்தி வாய்ந்த மனிதர்கள்.

250
00:23:02,257 --> 00:23:03,300
உறுதியாகச் சொல்கிறேன்.

251
00:23:03,926 --> 00:23:05,010
எனவே நாம் கண்டும் காணாமல் விட்டுவிடுவதா?

252
00:23:05,010 --> 00:23:06,970
நாம் எதுவும் செய்யாமல்,
இந்த மாதிரியான காரியம் நடக்க அனுமதிக்கிறோமா?

253
00:23:06,970 --> 00:23:08,263
நம் மக்களைப் பாதுகாக்க.

254
00:23:09,139 --> 00:23:11,642
அவர்கள் நினைத்தால் எப்போது
வேண்டுமானாலும் நம்மை அழித்துவிடலாம்.

255
00:23:11,642 --> 00:23:13,060
இப்போது வேலை முடிந்தது.

256
00:23:13,060 --> 00:23:14,478
- ஆம்.
- இப்போது என்னிடம் சொல்லலாம்.

257
00:23:14,478 --> 00:23:15,979
ஒலிவியாவுக்கு என்ன
நடந்திருந்தாலும் பரவாயில்லை.

258
00:23:15,979 --> 00:23:17,648
அவள் எப்படி கஷ்டப்பட்டிருந்தாலும் பரவாயில்லை.

259
00:23:20,859 --> 00:23:22,027
அது... அது யாராக இருந்தாலும்...

260
00:23:23,028 --> 00:23:24,655
ஒருவரின் மகன். ஒரு அரசியல்வாதி.

261
00:23:24,655 --> 00:23:26,323
இந்த கேவலமானவன் ஸ்டாலிங்ஸின் வாடிக்கையாளரா?

262
00:23:27,032 --> 00:23:28,158
- ஆம்.
- அது எப்படி நடந்தது?

263
00:23:28,158 --> 00:23:30,702
நாம் எப்படி...
அவர்கள் எப்படி நம்மைப் பற்றி கண்டுபிடித்தார்கள்?

264
00:23:30,702 --> 00:23:33,372
அந்தப் பகுதி எனக்குத் தெரியாது.
இந்த கட்டத்தில், அது முக்கியமா?

265
00:23:33,372 --> 00:23:34,873
நிச்சயமாக அது முக்கியம்தான்.

266
00:23:36,542 --> 00:23:39,753
எல்லாவற்றையும் விட.
நாம் இப்படிபட்டவர்கள் அல்ல, ஹென்றி.

267
00:23:39,753 --> 00:23:43,674
இதைப் பற்றி உனக்கு மட்டும் வருத்தம் இல்லை.
வெளியே இருக்கும் யாரும் மகிழ்ச்சியாக இல்லை.

268
00:23:43,674 --> 00:23:46,969
மகிழ்ச்சியா? ஒலிவியா இதைப் பற்றி
மகிழ்ச்சியடைவாள் என்று நினைக்கிறாயா?

269
00:23:47,678 --> 00:23:49,471
இது ஒருபோதும் நடந்திருக்கக் கூடாது, ஹென்றி!

270
00:23:53,183 --> 00:23:55,769
சரி. ஆனால் நடந்துவிட்டது.

271
00:24:00,691 --> 00:24:04,111
இப்போது, நாம் புறப்படுகிறோம்.
எனவே முயற்சி செய்து, அதை சரிசெய்.

272
00:24:06,321 --> 00:24:08,448
ஏனென்றால் அவள் உயிருடன் இருந்தால்,
அங்கேதான் அவளைக் கண்டுபிடிப்பாய்.

273
00:24:16,331 --> 00:24:21,962
பொறு. ஸ்டாலிங்ஸ் வீட்டில்
என்ன நடந்தது என்று என்னிடம் சொன்னார்கள்.

274
00:24:23,338 --> 00:24:26,049
நீ மூன்று பேரைக் கொன்றதாகச் சொன்னார்கள்.

275
00:24:27,885 --> 00:24:29,970
- அது உண்மையா?
- நான் என்னை தற்காத்துக்கொண்டேன்.

276
00:24:29,970 --> 00:24:31,054
எனவே நீ செய்ய வேண்டியிருந்ததா?

277
00:24:43,358 --> 00:24:44,860
முதல் இருவரை நான் கொல்ல வேண்டியிருந்தது.

278
00:24:46,486 --> 00:24:47,905
ஒரு ஆணையும் பெண்ணையும்.

279
00:24:50,282 --> 00:24:51,533
அது தற்காப்புக்காக.

280
00:24:55,329 --> 00:24:56,496
ஆனால் மூன்றாவது நபர், அது...

281
00:24:58,665 --> 00:24:59,750
அவசியமானது இல்லை.

282
00:25:02,127 --> 00:25:04,129
ஒரு எண்ணம் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.

283
00:25:05,631 --> 00:25:08,133
"நான் ஆபத்தில் இருக்கிறேன்."
"அவன் ஒரு கெட்டவன்." "அவன் ஒருவேளை..."

284
00:25:09,968 --> 00:25:10,802
"ஒருவேளை அது நீதியாக இருக்கலாம்.

285
00:25:12,012 --> 00:25:15,474
அல்லது குறைந்தபட்சம் நியாயப்படுத்தப்படுகிறது."

286
00:25:20,312 --> 00:25:21,980
ஆனால் அதற்கு முன்பு நான்...

287
00:25:23,440 --> 00:25:25,150
நான் ட்ரிகரை அழுத்துவதற்கு கொஞ்சம் முன்பு...

288
00:25:27,194 --> 00:25:30,280
அந்த எண்ணங்கள் எல்லாம் போய்விட்டது,
எல்லாம் அமைதியாகிவிட்டது.

289
00:25:32,699 --> 00:25:33,534
ம்...

290
00:25:37,371 --> 00:25:38,664
எனக்குத் தோன்றியதால் அவனைக் கொன்றேன்.

291
00:25:49,550 --> 00:25:50,759
அது பைத்தியக்காரத்தனம். தெரியும்.

292
00:25:55,222 --> 00:26:01,019
நாம் எவ்வளவு காலம் இங்கே தங்குகிறோமோ,
அவ்வளவு மனிதனாக மாறுவோம் என்று நினைக்கிறேன்.

293
00:26:03,897 --> 00:26:05,023
நான் போக வேண்டும்.

294
00:26:05,023 --> 00:26:09,695
உன் வேலையில்... நீ இங்கே இருந்த காலத்தில்...
நீ என்ன, டஜன் கணக்கானவர்களை கண்டுபிடித்திருப்பாயா?

295
00:26:10,487 --> 00:26:12,406
குறைந்தபட்சம். அதிகமாக இருக்கலாம்.

296
00:26:13,615 --> 00:26:16,910
நீ... நீ எப்போதும் ஆண்களையோ
அல்லது பெண்களையோ, குழந்தைகளையோ தேடுகிறாய்.

297
00:26:19,329 --> 00:26:22,958
ஒருவேளை இன்று இந்த ஒலிவியா.
நீ அவளைக் கண்டுபிடிப்பாய் என்று நம்புகிறேன்.

298
00:26:26,587 --> 00:26:31,758
ஆனால் உன் தங்கை இல்லாமல், நீ நிரந்தரமாக
தொலைந்துவிடுவாயோ என்று பயப்படுகிறேன்.

299
00:26:52,738 --> 00:26:54,907
எனவே இந்த
அதிகாரமும் செல்வாக்கும் பெற்ற மனிதர்கள்,

300
00:26:54,907 --> 00:26:56,950
ஒலிவியா காணாமல் போனதற்குக் காரணமாக இருந்தவர்கள்.

301
00:27:02,623 --> 00:27:03,624
எனக்கு இப்போது புரிகிறது.

302
00:27:04,791 --> 00:27:07,252
உங்களைப் பற்றி வெளியே சொல்லிவிடுவோம் என்று
பயமுறுத்தியிருக்கிறார்கள்.

303
00:27:09,087 --> 00:27:13,217
"ஷுகரை அவனுடைய வழக்கிலிருந்து பின்வாங்கச்சொல்,
அல்லது உங்கள் ரகசியத்தை உலகிற்குச் சொல்லுவோம்.

304
00:27:14,259 --> 00:27:17,763
'ஏலியன்கள் நம்மிடையே நடமாடுகிறார்கள்.'
அதுதான் தலைப்புச் செய்தியாக இருக்கும்."

305
00:27:20,307 --> 00:27:21,350
அது மோசமாக இருக்கும்.

306
00:27:23,268 --> 00:27:25,103
அது எனக்குப் பிடிக்கவில்லை,
ஆனால் எனக்குப் புரிகிறது.

307
00:27:30,776 --> 00:27:35,781
ஹென்றி சொல்வது சரிதான். நீண்ட காலம்
தங்கிவிட்டோம். வீடு திரும்ப வேண்டிய நேரம் இது.

308
00:27:53,841 --> 00:27:55,342
{\an8}பாவிச்சுக்கு வாக்களியுங்கள் - அமெரிக்க செனட்
"உங்கள் பக்கம்"

309
00:28:20,492 --> 00:28:22,619
{\an8}பாவிச்
அமெரிக்க செனட்

310
00:29:10,167 --> 00:29:13,253
- அசையாதே! கைகளைத் தூக்கு.
- கைகளைத் தூக்கிவிட்டேன்.

311
00:29:14,838 --> 00:29:15,964
பார். என் கைகள் மேலே இருக்கின்றன.

312
00:29:15,964 --> 00:29:17,090
துப்பாக்கியை கீழே போடு.

313
00:29:17,090 --> 00:29:18,842
- சரி. எடுத்துக்கொள்...
- துப்பாக்கியை தரையில் போடு.

314
00:29:18,842 --> 00:29:20,469
சரி. நானும் உன் பக்கம்தான்.
துப்பாக்கியை போடுகிறேன்...

315
00:29:20,469 --> 00:29:21,595
"அசையாதே!" என்றேன்.

316
00:29:22,638 --> 00:29:24,598
நீ நான் சொல்வதைக் கேள். நாம் போகக் கூடாது.

317
00:29:24,598 --> 00:29:26,934
நான் தனியார் புலனாய்வாளர். காணாமல் போன
பெண்ணைக் கண்டுபிடிக்க பணியமர்த்தப்பட்டேன்.

318
00:29:26,934 --> 00:29:28,852
அத்துமீறி உள்ளே நுழைவதற்கு
நிறைய காரணங்களைக் கேட்டிருக்கிறேன்.

319
00:29:28,852 --> 00:29:30,479
நான் திருடன் போல தெரிகிறேனா? சொல்வதைக் கேள்.

320
00:29:30,479 --> 00:29:33,106
என் பர்ஸ், என் தனியார் புலனாய்வாளர் உரிமம்,
ஓட்டுநர் உரிமம்,

321
00:29:33,106 --> 00:29:34,608
என் அடையாள அட்டை,
எல்லாம் என் பர்ஸில் இருக்கிறது.

322
00:29:34,608 --> 00:29:36,860
- இடது பாக்கெட்டில். உள்ளே இருக்கிறது. ஆம்.
- இடது பாக்கெட்டிலா?

323
00:29:37,778 --> 00:29:40,489
-"ஜான் ஷுகர்." அதுதான் உன் நிஜ பெயரா?
- என் நிஜ... ஆம், சார்.

324
00:29:40,489 --> 00:29:42,324
- அந்த நீல நிற கார் உன்னுடையதா?
- ஆம், சார்.

325
00:29:42,324 --> 00:29:44,535
பார், ஒருவேளை முகவரி தவறானதாக இருக்கலாம்.
தெரியவில்லை. ஒருவேளை நான் தவறாக இருக்கலாம்.

326
00:29:44,535 --> 00:29:46,495
ஆனால் எப்போதாவது இந்த வீட்டில் ஒரு பெண்
மிருகத்தனமாக சித்திரவதை செய்யப்படுவதைப் பற்றி

327
00:29:46,495 --> 00:29:47,663
நீ கேள்விப்பட்டால்,

328
00:29:47,663 --> 00:29:49,957
அவளுக்கு உதவு முயற்சிப்பதற்கு
ஒரு நிமிடம் கூட செலவிடவில்லை...

329
00:29:49,957 --> 00:29:52,125
நீ சரிபார்க்காமல் விட்டுவிட்டாய்...

330
00:29:52,125 --> 00:29:53,836
அப்படிப்பட்ட குற்ற உணர்வு உனக்கு வேண்டாம்.
என்னை நம்பு.

331
00:29:53,836 --> 00:29:55,128
இதுதான் நேரம்.
"அந்த தருணங்கள் திரும்ப கிடைத்தால்,

332
00:29:55,128 --> 00:29:57,130
மீண்டும் அந்த நேரத்துக்கு செல்ல முடிந்தால்" என்று
நீ யோசிக்க வேண்டியதில்லை.

333
00:30:00,008 --> 00:30:01,009
நகராதே.

334
00:30:05,681 --> 00:30:06,890
{\an8}நான் பேஸ்மண்டை பார்க்கிறேன்.

335
00:30:10,269 --> 00:30:11,270
{\an8}ஹலோ?

336
00:30:13,772 --> 00:30:15,107
{\an8}கீழே யாராவது இருக்கிறீர்களா?

337
00:30:19,194 --> 00:30:20,654
கீழே யாராவது இருக்கிறீர்களா?

338
00:30:24,157 --> 00:30:28,120
- சரி. செனட்டரின் மகன்.
- ஹலோ?

339
00:30:30,789 --> 00:30:31,748
நிச்சயமாக.

340
00:30:31,748 --> 00:30:32,833
ஹேய்.

341
00:30:37,880 --> 00:30:38,881
ஹேய்.

342
00:30:43,844 --> 00:30:46,513
என்ன கண்டுபிடித்தாய்?

343
00:30:46,513 --> 00:30:51,143
ஒன்றுமில்லை. ஒரு சுத்தியல்.

344
00:30:52,936 --> 00:30:54,855
ஆனால் அது ஒரு பேஸ்மண்ட,
அங்கேதான் என் சுத்தியலை வைத்திருப்பேன்.

345
00:30:55,355 --> 00:30:56,940
நிச்சயமாக எல்லா இடங்களிலும் பார்த்தாயா?

346
00:30:58,400 --> 00:30:59,401
நிச்சயமாக.

347
00:31:00,903 --> 00:31:02,237
சரி, என் தவறுதான்.

348
00:31:04,656 --> 00:31:05,866
அது சரிதான்.

349
00:31:06,450 --> 00:31:07,534
எனவே இப்போது என்ன?

350
00:31:16,752 --> 00:31:18,378
இங்கே யாரோ இருப்பதாக சொன்னது யார்?

351
00:31:21,548 --> 00:31:25,135
ஒரு நண்பர். அது தவறான தகவல் போல.

352
00:31:26,303 --> 00:31:29,306
அப்படி நடப்பது சகஜம்தான்.
ஆனால் சங்கடமாக இருக்கிறது.

353
00:31:29,306 --> 00:31:30,599
எந்த நண்பர்?

354
00:31:31,558 --> 00:31:33,810
எந்த நண்... எந்த நண்பர் என்று
என்னால் சொல்ல முடியாது.

355
00:31:35,854 --> 00:31:38,649
இரகசிய நபர்...
என் வேலையில் கடைபிடிக்க வேண்டிய முன்நிபந்தனை.

356
00:31:50,536 --> 00:31:52,371
என் பேஸ்மெண்டில் ஒருவர்
இருப்பதாக சொன்னது யார்?

357
00:31:56,250 --> 00:31:58,085
நான் எந்த அலாரத்தையும் ஒலிக்க செய்யவில்லை.

358
00:31:59,461 --> 00:32:00,462
- நீ திறமைசாலிதான்.
- அப்படியா?

359
00:32:00,462 --> 00:32:01,797
நான் வேலையிலிருந்து திரும்பி வந்தேன்.

360
00:32:06,134 --> 00:32:06,969
என் அதிர்ஷ்டம்.

361
00:32:08,262 --> 00:32:09,263
உன் துரதிர்ஷ்டம்.

362
00:32:10,097 --> 00:32:13,767
ஹேய், இது இப்படி நடக்க வேண்டியதில்லை.

363
00:32:16,061 --> 00:32:17,813
அதாவது, வேறு யாரும் காயப்பட வேண்டியதில்லை.

364
00:32:19,314 --> 00:32:20,315
உன்னையும் சேர்த்து.

365
00:32:21,191 --> 00:32:22,943
உண்மையில், மக்கள் காயப்படுவதில்
எனக்குப் பிரச்சினை இல்லை.

366
00:32:24,361 --> 00:32:29,408
என் கேள்வியெல்லாம்,
"நான் சுத்தியலில் இருந்து தொடங்கவா?"

367
00:32:54,850 --> 00:32:55,893
உன் பெயர் என்ன?

368
00:32:57,060 --> 00:32:58,437
- ரையன்.
- ரையன்.

369
00:32:59,980 --> 00:33:03,942
இது முடிந்துவிட்டது. சரியா?
நீ ஏன் தோல்வியை ஒப்புக்கொள்ளக் கூடாது?

370
00:33:06,111 --> 00:33:07,988
- ஆம்.
- வேண்டாம். வேண்டாம்!

371
00:35:03,312 --> 00:35:04,313
ஒலிவியா.

372
00:35:54,571 --> 00:35:56,573
வசனத் தமிழாக்கம் அருண்குமார்

